Published:Updated:

ஆண் நண்பர்களுடன் பழக்கம்; கண்டித்த தாய்... நண்பர்களுடன் சேர்ந்து கொன்ற மகள் - தூத்துக்குடி அதிர்ச்சி

கொலை

ஆண் நண்பர்களுடன் பழகி வருவதைக் கண்டித்த தாயை, தன் ஆண் நண்பர்களுடன் இணைந்து பெற்ற மகளே கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆண் நண்பர்களுடன் பழக்கம்; கண்டித்த தாய்... நண்பர்களுடன் சேர்ந்து கொன்ற மகள் - தூத்துக்குடி அதிர்ச்சி

ஆண் நண்பர்களுடன் பழகி வருவதைக் கண்டித்த தாயை, தன் ஆண் நண்பர்களுடன் இணைந்து பெற்ற மகளே கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Published:Updated:
கொலை

தூத்துக்குடி மேல சண்முகபரம், வண்ணார் தெருவைச் சேர்ந்தவர் முனிய லெட்சுமி. இவர் கணவர் மாடசாமியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரைப் பிரிந்து ஜெயக்குமார் என்பவருடன் தனியாக வசித்து வருகிறார். இவருக்கு மூன்று மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். முனிய லெட்சுமி, தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் தற்காலிகத் தூய்மைப் பணியாளராக பணிபுரிந்து வந்தார். மூத்த மகளான 17 வயது சிறுமி, தனது பாலிடெக்னிக் படிப்பைப் பாதியிலேயே நிறுத்தியுள்ளார். இந்த நிலையில், கடந்த சில மாதமாக அந்தச் சிறுமி, தன் ஆண் நண்பர்கள் சிலருடன் வெளியே சுற்றித் திரிந்துள்ளார்.

முனியலெட்சுமி - கொலையாளி கண்ணன்
முனியலெட்சுமி - கொலையாளி கண்ணன்

இதைப் பார்த்து தன் மகளைக் கண்டித்துள்ளாராம் முனிய லெட்சுமி. கடந்த இரண்டு நாள்களாக ஆண் நண்பர்களுடன் நேரிலும், போனிலும் பேசி வருவதைக் கண்ட முனிய லெட்சுமி மகளை மீண்டும் கண்டித்திருக்கிறார். தன் தாய் கண்டித்ததைப் பற்றி சிறுமி தன் ஆண் நண்பர்களிடம் சொல்ல, அனைவரும் அவர் தாயைக் கொலை செய்ய திட்டமிட்டிருக்கின்றனர். அதன்படி, தன் 3 ஆண் நண்பர்களை வீட்டிற்கு வரவழைத்த அந்தச் சிறுமி, தூங்கிக் கொண்டிருந்த தன் தாயின் கழுத்தைச் சேலையால் இறுக்கிட, மற்ற 3 பேரும் கத்தியால் குத்திவிட்டுத் தப்பியோடி விட்டனர். இதில், முனிய லெட்சுமி துடிதுடித்து உயிரிழந்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதையடுத்து போலீஸுக்குப் போன் செய்த அந்தச் சிறுமி, ``எங்க அம்மா முனிய லெட்சுமிக்கூட தொடர்பு வச்சிருந்த ஜெயக்குமாரும், இன்னும் நாலு பேரு சேர்ந்து எங்க அம்மாவைக் குத்திக் கொலை செஞ்சுட்டாங்க. தூங்கி முழிச்சப் பிறகுதான் எங்க அம்மா இறந்துகிடந்தது எனக்குத் தெரியும்” எனச் சொல்ல, போலீஸார் அதிர்ந்தனர். ஆனால், விசாரணையின் போது அந்தச் சிறுமி, முன்னுக்குப் பின் முரணாகப் பதில் கூறியுள்ளார். இதனையடுத்து பெண் போலீஸார் மூலம் அந்தச் சிறுமியை விசாரணை செய்த பிறகே உண்மை தெரியவந்தது. “எனக்கு சில பாய் ப்ரெண்ட்ஸ் உண்டு.

கொலை நடந்த முனிய லெட்சுமியின் வீடு
கொலை நடந்த முனிய லெட்சுமியின் வீடு

அவங்கக்கூட பேசுறதை எங்க அம்மா தப்பா நினைச்சு திட்டுனாங்க. அதுமட்டுமல்லாம, என்னைப் பாலியல் தொழிலுக்கு வற்புறுத்தினாங்க. பாலியல் தொழில் செஞ்சா பணத்துக்குப் பஞ்சம் இருக்காது. நல்ல ஆடம்பரமா வாழலாம். ரெண்டு மூணு பேரு உன்னைக் கூப்பிடுறாங்க. அவங்க நிறையப் பணம் தருவாங்கன்னு சொன்னாங்க. எங்க அம்மாவோட இந்தப் பேச்சு எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்துச்சு. தொடர்ந்து அதைப் பத்தியே சொல்லிக்கிட்டிருந்தாங்க.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

எனக்கு கோவம் வந்துச்சு. இதை என்னோட நண்பர்கள்ட்ட சொன்னேன். நாங்க ஒன்னாப் பேசி எங்க அம்மாவைக் கொலை செய்யலான்னு முடிவு செஞ்சோம். மூணு பேரை வீட்டுக்கு வரச் சொன்னேன். நான் சேலையால கழுத்தை நெறிச்சு, வாயைப் பொத்தினேன். மூணு பேரும் கத்தியாலக் குத்தினாங்க. இதுல எங்க அம்மா இறந்துட்டாங்க. உடனே, அவங்க மூணு பேரும் ஓடிப் போயிட்டாங்க. எங்க அம்மா இறந்த பிறகுதான் நான் செஞ்சது தப்புன்னு உணர்ந்தேன். பயத்துல என்ன செய்யுறதுன்னு தெரியாம, நானே போலீஸுக்குப் போன் செஞ்சு, எங்க அம்மாக்கூட தொடர்புல இருக்குற ஜெயக்குமார்தான் கொலை செஞ்சார்னு சொல்லிட்டேன்” என்றார்.

இது தொடர்பாக போலீஸாரிடம் விசாரித்தோம். ``அந்தப் பொண்ணோடப் பேச்சுல ஆரம்பத்துல இருந்தே எங்களுக்கு சந்தேகம் இருந்துச்சு.

முனிய லெட்சுமியின் வீடு
முனிய லெட்சுமியின் வீடு

அதுமட்டுமல்லாம முன்னுக்குப் பின் முரணாவேப் பேசினா. அந்தப் பகுதியில உள்ள சி.சி.டி.வி கேமராப் பதிவுகளை ஆய்வு செஞ்சப்போதான், கொலை செய்ய வந்தப் பசங்களை அந்தப் பொண்ணே வழியனுப்பி வச்சிருக்கு. பெண் போலீஸார் விசாரிச்சதுல உண்மையை ஒப்புகொண்டுச்சு” என்றனர் போலீஸார். அந்தச் சிறுமி மற்றும் கொலையில் ஈடுபட்ட மூன்று பேரில் கண்ணன் என்பவரையும் போலீஸார் கைது செய்து, மற்ற இரண்டு நண்பர்களைத் தேடி வருகின்றனர். பெற்ற தாயை மகளே தன் நண்பர்களுடன் சேர்ந்துக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism