Published:Updated:

`காய்', `உருண்டை'... மிரளவைக்கும் வெடிகுண்டு கலாசாரம்: ரெளடிகளின் `ரத்த சரித்திரம்'!

மேலோட்டமாகச் சொல்ல வேண்டுமெனில், 'காயை' உருட்டுவதிலும், கச்சாப் பொருள்களைத் திணிப்பதிலும்தான் சூட்சுமங்கள் வேறுபடுகின்றன. ஆணியிலேயே பல ரகங்கள் உண்டு. இரும்பு ஆணி, எஃகு ஆணி, குடை ஆணி, கூரை ஆணி, இரட்டைத்தலை ஆணி, யூ ஆணி எனக் காயின் தேவைக்கேற்ப ஆணிகள் திணிக்கப்படுகின்றன

நாட்டு வெடிகுண்டுகளை சென்னை ரெளடிகள் பாஷையில் 'காய்' என்கிறார்கள். தென் மாவட்டங்களிலோ 'உருண்டை.' ஒரு காய், ஐந்தாயிரம் முதல் ஐம்பதாயிரம் ரூபாய் வரை விற்கப்படுகிறது. அளவைப் பொறுத்தும், வீரியத்தைப் பொறுத்தும் அமைகிறது காயின் விலை. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம் மாவட்ட ரெளடிகள் தொட்டதற்கெல்லாம் இப்போது காய்களை உருட்ட ஆரம்பித்திருப்பதால் காக்கிகள் மிரள்கிறார்கள்.

தமிழகத்தில் செங்கல்பட்டு மாவட்டத்தில் திருப்போரூர், சட்ராஸ், பெருமாட்டுநல்லூர், கூடுவாஞ்சேரி, புதுச்சேரியில் முதலியார்பேட்டை, வாணரப்பேட்டை, பெரியார் நகர், காலாப்பட்டு உள்ளிட்டவையே நாட்டு வெடிகுண்டுகள் தயாரிக்கும் முக்கியமான இடங்கள். தேவைக்கேற்ப தயாராகின்றன புதுப்புது ரகங்கள். தயாரிக்கப்படும் காய்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு சூட்சுமம் உண்டு.

ஆளை லேசாகச் சிராய்த்துவிட்டு, பயத்திலேயே பத்து நாள்களுக்குப் படுக்கவைக்க வேண்டுமா, அதற்கோர் உருட்டு உண்டு. கையோ, காலோ, முகமோ பாதி பங்கம் செய்யப்பட வேண்டுமா, அதற்கோர் உருட்டு உண்டு. மட்டையாக்கிச் சுடுகாட்டுக்கு அனுப்ப வேண்டுமா, அதற்கென இருக்கிறது தனி உருட்டு. கொடும் பகை தீர்க்க கைகால், முகமெல்லாம் அடையாளம் தெரியாமல் சின்னாபின்னமாக்கிச் சிதைக்க வேண்டுமா, அதற்கென்றே ஆக்ரோஷ உருட்டு ஒன்று உண்டு. இப்படிச் சூதுவாதுக்கு அப்பாற்பட்டவை இதன் சூட்சுமங்கள். பணம் ஒன்றே பிரதானம். இதன் பின்னணியில் அதிகாரப் போட்டிகளும் உண்டு!

வெடி மருந்து, கண்ணாடித்தூள், பால்ரஸ் மற்றும் ஆணிகளே 'காய்'களுக்கான கச்சாப் பொருள்கள். பேப்பர், காட்டன் துணி, கயிறு, டேப், ஃபெவிக்கால் கொண்டு வெடிகுண்டுகளைத் தயாரிக்கிறார்கள். தயாரிப்பில் பல்வேறு 'பகீர்' தொழில்நுட்பங்கள் இருக்கின்றன. சமூகநலன் கருதி அவற்றை விரிவாக எழுதுவதைத் தவிர்க்கிறோம்.

மேலோட்டமாகச் சொல்ல வேண்டுமெனில், 'காயை' உருட்டுவதிலும், கச்சாப் பொருள்களைத் திணிப்பதிலும்தான் சூட்சுமங்கள் வேறுபடுகின்றன. ஆணியிலேயே பல ரகங்கள் உண்டு. இரும்பு ஆணி, எஃகு ஆணி, குடை ஆணி, கூரை ஆணி, இரட்டைத்தலை ஆணி, யூ ஆணி எனக் காயின் தேவைக்கேற்ப ஆணிகள் திணிக்கப்படுகின்றன. இவை தவிர, கண்ணாடி பாட்டில்களை இடித்தும் அரைத்தும் சேர்க்கிறார்கள். ஈர மணலில் ஊறவைத்த, துருப்பிடித்த ஆணிகளைச் சேர்ப்பதும், விஷ மருந்தில் ஊறவைத்த கண்ணாடித் துண்டுகளைச் சேர்ப்பதும் ஸ்பெஷல் அயிட்டங்கள்!

`காய்', `உருண்டை'... மிரளவைக்கும் வெடிகுண்டு கலாசாரம்: ரெளடிகளின் `ரத்த சரித்திரம்'!

இப்படி என்னதான் வீரியமாகக் குண்டுகளைத் தயாரித்தாலும், எல்லாக் குண்டுகளும் 'வெடி'குண்டுகளல்ல. வீச்சின் வேகமும், வீசப்படும் லாகவமுமே வெடிப்பைச் சாத்தியமாக்கும். அதற்கெல்லாம் தனிப்பயிற்சி உண்டு. பயிற்சி இல்லாமல் வீசினால் ஒன்று, வீசுபவரின் கை, கால் போகும். இல்லை, புஸ்வாணமாகும்!

- பட்டாக்கத்தி, கைத்துப்பாக்கியுடன் வலம்வந்த ரெளடிகள், இப்போது வெடிகுண்டுகளைக் கையாளத் தொடங்கிவிட்டனர். தமிழகம் முழுவதும் தகிக்கிறது வெடிகுண்டு கலாசாரம். கொலைக்கான விலை ஆயிரங்களில் தொடங்கி லட்சங்களில் நீள்கிறது.

இப்படி பல லட்சங்கள் பேரம் பேசப்பட்டாலும் இறுதியில் களத்தில் இயங்கும் கடைநிலைக் கொலையாளிக்குச் செல்வது சராசரியாக ஐந்தாயிரம் அல்லது ஆறாயிரம் ரூபாய்தான்! கூலிக்கு கொலை செய்யும் கொலையாளிகளுக்குத் தேவை, கொலை செய்யப்பட வேண்டிய நபரின் போட்டோ மற்றும் சொற்ப தொகையே; அவர்களுக்கு வேறு எதைப் பற்றியும் கவலை இல்லை; சொருகிவிட்டு போய்க்கொண்டே இருப்பார்கள்... என்கிற தகவலை கூறினார் காவல்துறை சீனியர் அதிகாரி ஒருவர்.

மனித உயிர்கள் இவ்வளவு மலிவாக போய்விட்டதா என்று ஏற்பட்ட அதிர்ச்சியைத் தவிர்க்க முடியவில்லை! தமிழகத்தைக் கலக்கும் அந்த ரெளடிகள் யார், வெடிகுண்டுகள் எப்படித் தயாரிக்கப்படுகின்றன, எப்படி சப்ளையாகின்றன?

நேர்மையான காவல்துறை அதிகாரிகள், சிறைத்துறை வட்டாரங்கள், ரெளடிகள் என அனைத்துத் தரப்பிலும் புகுந்து வலம்வந்தோம். கிடைத்த தகவல்கள் அத்தனையும் 'ரத்த சரித்திரம்.'

இந்தக் கட்டுரை தொடர்பாக கூடுதல் விவரங்களைச் சேகரிப்பதற்காக காவல்துறை அதிகாரிகள் சிலரிடம் பேசினோம். அவர்கள் பேசி முடித்த பத்து நிமிடங்களில் சென்னையின் பிரபல ரெளடிகள் பலரிடமிருந்தும் நமது அலைபேசிக்கு அழைப்பு வரத் தொடங்கின. "என்ன சார்... எங்களைப் பத்தி எல்லாம் விசாரிக்கிறீங்களாமே... கொஞ்சம் பார்த்து எழுதுங்க!" என்று கறார் தோரணையில் பேசினார்கள். இதிலிருந்தே காவல்துறையினருக்கும் ரெளடிகளுக்கும் இடையே இருக்கும் தொடர்பு வெட்ட வெளிச்சமாகிறது!

> நம்பர் ஒன் 'சம்பவக்காரன்!' | சிறைக்குள் திருவேங்கடம்; காத்திருக்கும் சி.டி.மணி! | கம்பிக்குள் ஸ்கெட்ச்!; சென்டிமென்ட் சகோதரர்கள்... | ஹனிமூனில் வேலூர் ரெளடி | கொலைக்கு பரிசு புது பைக்! | 'மர்டர்' மணிகண்டன்; ஸ்கெட்ச் போடும் எழிலரசி! | 'பட்டறை'யின் பர்த் டே பார்ட்டி! | மீண்டும் டெல்டா டெரர்!

- இவற்றுடன் முழுமையான கவர்ஸ்டோரியை ஜூனியர் விகடன் இதழில் வாசிக்க க்ளிக் செய்க... https://bit.ly/3brROD9 > ஒரு கொலை ரூ.6,000 - மிரளவைக்கும் ரௌடிகள்... அலறும் தமிழகம்... https://bit.ly/3brROD9

சிறப்புச் சலுகைகள்:

> ஆனந்த விகடன் தொடங்கி பசுமை விகடன் வரை விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 15 ஆண்டு கால பொக்கிஷங்களிலும் வலம்வர... ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > https://bit.ly/3h3Rdth

> விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ரூ.149 மதிப்புள்ள ஒரு மாத Vikatan Digital Pack-ஐ முற்றிலும் இலவசமாகப் பெறலாம். விகடன் ஆப் டவுன்லோடு செய்து, இந்தச் சலுகையைப் பெற https://bit.ly/2VRp3JV

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு