Published:Updated:

விழுப்புரம் திமுக நிர்வாகி வெட்டிக் கொலை; மூன்று பேர் கும்பல் வெறிச்செயல் - முன்விரோதம் காரணமா?

ஆரோவில் காவல் நிலையம், கொலைசெய்யப்பட்டவர்.

ஆரோவில் அருகே, திமுக நிர்வாகி ஒருவர் கொடூரமான முறையில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

விழுப்புரம் திமுக நிர்வாகி வெட்டிக் கொலை; மூன்று பேர் கும்பல் வெறிச்செயல் - முன்விரோதம் காரணமா?

ஆரோவில் அருகே, திமுக நிர்வாகி ஒருவர் கொடூரமான முறையில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:
ஆரோவில் காவல் நிலையம், கொலைசெய்யப்பட்டவர்.

விழுப்புரம் மாவட்டம், வானூர் அருகேயுள்ள கோட்டக்கரை பகுதியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார். இவர் திமுக-வில் பொதுக்குழு உறுப்பினராக இருந்துவந்திருக்கிறார். இவரின் தாய் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவராக இருந்த நிலையில், அண்மையில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் இவர் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கும் போட்டியிட்டவராம்.

சொந்த வேலை காரணமாக கோட்டக்கரையிலிருந்து திருசிற்றம்பலம் கூட்டுச்சாலை நோக்கி இன்று காலை 6:30 மணி அளவில் தனது இருசக்கர வாகனத்தில் வந்திருக்கிறார் ஜெயக்குமார். அப்போது, இரும்பை எனும் இடத்தில் கத்தியைக் காட்டி திடீரென வழிமறித்திருக்கிறது மூன்று பேர்கொண்ட கும்பல். சுதாரித்துக்கொண்ட ஜெயக்குமார், அங்கிருந்து தப்பியோட முயன்றிருக்கிறார்.

வெட்டிக் கொலை
வெட்டிக் கொலை
மாதிரி படம்

ஆனால், அந்தக் கும்பல் அவரைச் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடியிருக்கிறது. உடனே, அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். இருப்பினும் அவர் மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் குறித்த தகவலின் பேரில், சம்பவ இடத்துக்கு வந்த ஆரோவில் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்தச் சம்பவம் குறித்து ஆரோவில் போலிஸாரிடம் விசாரித்தபோது, "2020-ம் ஆண்டு நடைபெற்ற கொலைச் சம்பவம் ஒன்றில் ஜெயக்குமாரின் தம்பி மகன் தமிழ்வேந்தன் என்பவர் சம்பந்தப்பட்டிருந்திருக்கிறார். அவரை, ஜெயக்குமார்தான் ஜாமீன் எடுத்ததாகத் தெரிகிறது. அந்த விரோதத்தின் அடிப்படையில் இந்தக் கொலை நிகழ்ந்திருக்கலாம் என முதற்கட்டமாக தெரியவந்திருக்கிறது. மேலும், வானூர் பி.டி.ஓ அலுவலகம் அருகேயுள்ள டீக்கடையில் இந்த நபர் தினமும் காலையில் டீ குடிப்பதற்கு வருவார். அதைத் தெரிந்துகொண்டுதான், இன்று காலை 6:45 மணியளவில் இரும்பை சிவன் கோயில் அருகே வரும்போது வழிமறித்து வெட்டியுள்ளனர்.

ஆரோவில் காவல் நிலையம்
ஆரோவில் காவல் நிலையம்

முதற்கட்ட விசாரணையில், குமாரவேல், சந்துரு, குமார் என்பவர்கள் இந்தக் கொலைச் சம்பவத்தில் ஈடுபட்டிருப்பதாகத் தெரியவந்துள்ளது. அவர்களைத் தேடிவருகிறோம். புகார் பெறப்பட்டதும் வழக்கு பதிந்து அடுத்தகட்ட விசாரணை மேற்கொள்ளப்படும்" என்றனர்.