Published:Updated:

`அடுத்த வருஷம் மேரேஜ்; அதுவரை யாரிடமும் சொல்ல வேண்டாம்!'- மாணவியை துன்புறுத்தி சிக்கிய மருத்துவர்

மருத்துவர் தீபக்
மருத்துவர் தீபக் ( facebook )

``மருத்துவமனையில் இருக்கும்போதும் அவரிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார். இதையடுத்து கடந்த வியாழக்கிழமை, பெண்ணின் செல்போனைப் பறித்து அதிலுள்ள புகைப்படங்களை அழித்தது மட்டுமல்லாமில் பெண்ணின்மீது தாக்குதலும் நடத்தியுள்ளார்.”

ஹரியானா மாநிலத்திலுள்ள குர்கான் எனும் பகுதியைச் சேர்ந்தவர், தீபக். பெங்களூரில் உள்ள அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியில் முதுகலைப் பட்டம் பயின்று வந்துள்ளார். இவருடன் பெங்களூர் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரும் படித்து வந்துள்ளார். இருவரும் ஒரே வகுப்பைச் சேர்ந்தவர்கள் என்பதால் நண்பர்களாகப் பழகி வந்துள்ளனர். தீபக், அந்தப் பெண்ணிடம் தனியாகப் பேச வேண்டும் என்று கூறி கடந்த பிப்ரவரி 16-ம் தேதி ஜெயாநகரில் உள்ள ஹோட்டல் ஒன்றிற்கு அழைத்துச் சென்று பாலியல் வன்முறை செய்துள்ளார்.

பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை
மாதிரிப் புகைப்படம்

பின்னர், தீபக் அந்தப் பெண்ணிடம், ``பெற்றோரை சமாதானம் செய்து அடுத்த வருடம் திருமணம் செய்துகொள்கிறேன். அதுவரை நம்முடைய விஷயங்களை வெளியில் யாரிடமும் தெரிவிக்க வேண்டாம்” என்று கூறியுள்ளார். ஆனால், அவருடனான உறவை முறித்துக்கொண்டு பல்வேறு வகையில் மிரட்டல்களை விடுத்துள்ளார். இதையடுத்து, அந்தப் பெண் பெங்களூரில் உள்ள காவல்நிலையத்தில் தீபக்கின் மீது புகார் அளித்துள்ளார்.

`பாலியல் வன்கொடுமை வழக்கில் 21 நாள்களில் தண்டனை!' - திஷா சட்டத்தை கையில் எடுக்கும் மகாராஷ்ட்ரா?

புகார் குறித்து காவல்துறை அதிகாரிகள் பேசுகையில், ``ஹோட்டலில் வைத்து தீபக் அந்தப் பெண்ணைப் பாலியல் வன்முறை செய்ததாகப் புகார் அளித்துள்ளார். பெண்ணின் புகாரை உறுதிப்படுத்த ஹோட்டலுக்குச் சென்று விசாரணை நடத்தினோம். விசாரணையில் இருவரும் ஹோட்டலில் தங்கியதற்கான சாட்சிகள் கிடைத்துள்ளன. பாதிக்கப்பட்ட பெண்ணும் தீபக்கும் காதலித்து வந்துள்ளனர். பின்னர், இவரிடமிருந்து விலகி நடந்துள்ளார்” என்று கூறியுள்ளனர்.

பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை

தொடர்ந்து பேசிய அவர்கள், ``கடந்த பிப்ரவரி 23-ம் தேதி பாதிக்கப்பட்ட பெண் கல்லூரி வளாகத்தில் உள்ள வாஷ்ரூமிற்குச் செல்லும்போது தீபக்கும் பின் தொடர்ந்து சென்றுள்ளார். அங்கு தவறான முறையில் வீடியோ எடுக்க முயன்றுள்ளார். மருத்துவமனையில் இருக்கும்போதும் அவரிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார்.

இதையடுத்து கடந்த வியாழக்கிழமை, பெண்ணின் செல்போனைப் பறித்து அதிலுள்ள புகைப்படங்களை அழித்தது மட்டுமல்லாமில் பெண்ணின்மீது தாக்குதலும் நடத்தியுள்ளார். தவறான முறையில் அவரின் மீது குற்றம் சாட்டியுள்ளார்” என அந்தப் பெண் புகாரில் தெரிவித்துள்ளதாகக் காவல்துறையினர் குறிப்பிட்டனர்.

பாலியல் வன்முறை, பெண்ணைத் துன்புறுத்தியது, ஏமாற்றியது உட்பட பல்வேறு பிரிவில் தீபக்கின் மீது வழக்குப் பதிவு செய்தனர். அவரை உடனடியாகக் கைது செய்து சிறையிலும் அடைத்துள்ளனர். இதுதொடர்பாக, காவல்துறையினர் தொடர்ந்து விசாரணையும் நடத்தி வருகின்றனர்.

பாலியல் தொழில்; பேக்கரி பிசினஸ்; காதல் திருமணம்! - மேற்குவங்கத்தை நெகிழவைத்த லவ் ஸ்டோரி #Viral
அடுத்த கட்டுரைக்கு