Published:Updated:

கர்நாடகா: மத மாற்றம் செய்ததாக ஒரு குடும்பத்தின் மீது தாக்குதல் நடத்திய கும்பல்! -போலீஸ் வழக்கு பதிவு

தாக்குதல் (சித்திரிக்கப்பட்ட படம்)
News
தாக்குதல் (சித்திரிக்கப்பட்ட படம்)

வெளியேறும் முன்பு, `மீண்டும் மதம் மாற்ற முயன்றால், எரித்துக் கொன்றுவிடுவோம்' என மிரட்டல் விடுத்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலம், பெலகவி மாவட்டத்தில், கோகாக் அருகே உள்ள துக்கானட்டி கிராமத்தில் அண்டை வீட்டாரை மதம் மாற்றுகிறார்கள் என்று கூறி, வலதுசாரி அமைப்பைச் சேர்ந்த சிலர் ஒரு குடும்பத்தை, கடந்த டிசம்பர் 29, 2021 அன்று அடித்து உதைத்ததாகக் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.

இந்தத் தாக்குதலில் மூன்று பெண்கள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் காயமடைந்துள்ளனர். தீக்காயம் அடைந்த ஒரு பெண் உள்ளிட்ட மற்றவர்கள் அருகே உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகிறார்கள்.

புகார்க் கடிதம் :

இது குறித்து பாதிக்கப்பட்ட அக்‌ஷய் குமார் கரகன்வியின் (Akshaykumar Karaganvi) மனைவி கவிதா கரகன்வியின் புகாரின்படி, தாக்குதல் நடத்திய கும்பல், அக்‌ஷய் குமார் கரகன்வியின் வீட்டுக்கு மதியம் 1 மணியளவில் நுழைந்திருக்கிறது. வந்தவர்கள், அண்டை வீட்டாரையும், கிராம மக்களையும் வசீகரம் செய்தும், கட்டாயப்படுத்தியும், மோசடி மூலமாகவும் மதம் மாற்றும் நோக்கத்துடன் பிரார்த்தனைகளை ஏற்பாடு செய்ததாகக் கூறி வீட்டில் இருந்தவர்களைத் தாக்கினர்.

கர்நாடகா: மத மாற்றம் செய்ததாக ஒரு குடும்பத்தின் மீது தாக்குதல் நடத்திய கும்பல்! -போலீஸ் வழக்கு பதிவு

குற்றம்சாட்டப்பட்டுள்ள சிவானந்த் சிவலிங்கப்பா (Shivanand Shivalingappa), மகாதேவி ஜோகி என்ற பெண்ணின் புடவையையும் ஆடையையும் கிழித்து, தகாத வார்த்தைகளால் திட்டியிருக்கிறார் எனக் கூறப்பட்டுள்ளது.

பரசப்ப பாபு (Parasappa Babu) என்ற குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஒருவர், பாரதி என்னும் பெண்ணைக் கீழே தள்ளினார். அடுப்பிலிருந்து சூடான சாம்பாரை எடுத்து பாரதியின் மீது வீசினார். இதனால் பாதிக்கப்பட்ட பாரதிக்குத் தீக்காயம் ஏற்பட்டது. அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஒருவரான ரமேஷ் தண்டப்பூர் (Ramesh Dandapur) என்பவர் அக்‌ஷய்யின் மாப்பிள்ளையான சுதாகரின் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

வெளியேறும் முன்பு, `மீண்டும் மதம் மாற்ற முயன்றால், எரித்துக் கொன்றுவிடுவோம்' என, மிரட்டல் விடுத்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், "எங்களைக் கழிவறை சுத்தம் செய்பவர்கள் மற்றும் செருப்பு தயாரிப்பாளர்கள் என்றும் ஏளனம் செய்தனர். நாங்கள் மத நம்பிக்கைக்குத் துரோகம் செய்கிறோம் என்றும் கூறினர்" என்று அக்‌ஷய் கரகன்வி புலனாய்வாளர்களிடம் கூறினார்.

போடப்பட்ட வழக்குகள்:

வன்கொடுமைத் தடுப்புச் சட்டம், 1989 மற்றும் 2014 -ம் ஆண்டு வன்கொடுமைச் சட்டத் திருத்தச் சட்டத்தின் கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கைது & விசாரணை
கைது & விசாரணை

குற்றம்சாட்டப்பட்டவர்களான சிவானந்த் சிவலிங்கப்பா, ரமேஷ் தண்டபூர், பரசப்பா பாபு, துக்கனாட்டி கிராமத்தைச் சேர்ந்த ஃபகிராப்பா பாகேவாடி, கிருஷ்ண கனிட்கர், கங்கனவாடியைச் சேர்ந்த சேத்தன் கடாடி, ஹட்டராக்கியைச் சேர்ந்த மஹந்தேஷ் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

குற்றம்சாட்டப்பட்டவர்கள்மீது ஐபிசி 143 (கலவரம்), 448 (அத்துமீறி நுழைதல்), 323 (தானாக முன்வந்து காயப்படுத்துதல்), 392 (கொள்ளை), 506 (குற்றம் சார்ந்த மிரட்டல்), பட்டியல் சாதிகள் மற்றும் பழங்குடியினர் போன்ற பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.