Published:Updated:

ஊத்துமலை: தோட்டத்தில் போடப்பட்ட சட்டவிரோத மின்வேலி; விவசாயிக்கு நேர்ந்த சோகம்!

சட்டவிரோத மின்வேலி அமைக்கப்பட்ட தோட்டம்

தோட்டத்துக்குள் புகுந்து காட்டுப்பன்றிகள் அழிவை ஏற்படுத்திவருவதிலிருந்து பயிர்களைப் பாதுகாக்க சட்டவிரோதமாக மின்வேலி அமைத்திருக்கிறார்.

ஊத்துமலை: தோட்டத்தில் போடப்பட்ட சட்டவிரோத மின்வேலி; விவசாயிக்கு நேர்ந்த சோகம்!

தோட்டத்துக்குள் புகுந்து காட்டுப்பன்றிகள் அழிவை ஏற்படுத்திவருவதிலிருந்து பயிர்களைப் பாதுகாக்க சட்டவிரோதமாக மின்வேலி அமைத்திருக்கிறார்.

Published:Updated:
சட்டவிரோத மின்வேலி அமைக்கப்பட்ட தோட்டம்

தென்காசி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகம் இருக்கிறது. அதனால், அந்தப் பகுதியில் விவசாயம் செய்துவருபவர்கள் தங்களின் விளைநிலத்துக்குள் புகுந்து சேதத்தை உருவாக்கும் மான், யானை, காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகளிடமிருந்து பயிர்களைப் பாதுகாக்கச் சட்டவிரோதமாக மின்வேலி அமைத்துக்கொள்கின்றனர்.

மின்வேலியில் சிக்கி உயிரிழந்த கஜேந்திரன்
மின்வேலியில் சிக்கி உயிரிழந்த கஜேந்திரன்

சட்டவிரோத மின்வேலிகளைக் கண்டுபிடித்து வனத்துறையினர் அகற்றிவந்தாலும், சில இடங்களில் ரகசியமாக வேலி அமைக்கப்படுகிறது. இந்த நிலையில், ஊத்துமலை அருகேயுள்ள கீழக்கலங்கல் பகுதியைச் சேர்ந்த விவசாயி கஜேந்திரன் என்பவர் தனது தோட்டத்திலுள்ள பயிர்களுக்குத் தண்ணீர் பாய்ச்சுவதற்காகச் சென்றிருக்கிறார். அப்போது அருகிலிருந்த தோட்டத்தில் போடப்பட்டிருந்த மின்வேலியில் கஜேந்திரனின் மண்வெட்டி பட்டிருக்கிறது. அதில் பாய்ந்த மின்சாரம் தாக்கியதில் அவர் உயிரிழந்தார்.

விவசாயி கஜேந்திரன் உயிரிழந்த தகவல் கிடைத்ததும், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற காவல்துறையினர், அவர் உடலை மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பிவைத்தனர். அத்துடன், அவரது மரணத்துக்குக் காரணமான தோட்டத்தின் உரிமையாளரான பெருமாள் என்பவரைக் கைதுசெய்து விசாரணை நடத்தினர்.

போலீஸார் நடத்திய விசாரணையில், பெருமாளின் தோட்டத்துக்குள் புகுந்து காட்டுப்பன்றிகள் அழிவை ஏற்படுத்தியிருக்கின்றன. அதிலிருந்து தப்புவதற்காக மின்வேலி அமைத்திருக்கிறார். சட்டவிரோதமான மின்வேலி அமைத்ததால், அதில் எச்சரிக்கை விளக்குகள் எதையும் பொருத்தாததால் விவசாயி கஜேந்திரன் அந்த மின்வேலியில் சிக்கி உயிரிழந்தது தெரியவந்திருக்கிறது. இதுபோல அந்தப் பகுதியில் யாரேனும் அனுமதி இல்லாமல் மின்வேலி அமைத்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.