Published:Updated:

தூத்துக்குடி: உணவக உரிமையாளரை சரமாரியாக தாக்கிய கும்பல்... கஞ்சா விற்பனையை தடுத்ததுதான் காரணமா?!

தூத்துக்குடி | தாக்குதல்

``சட்ட விரோதமாகக் கஞ்சா விற்பனையை ஒழித்தால் மட்டுமே இதுபோன்ற சம்பவங்களை தடுக்க முடியும்”

தூத்துக்குடி: உணவக உரிமையாளரை சரமாரியாக தாக்கிய கும்பல்... கஞ்சா விற்பனையை தடுத்ததுதான் காரணமா?!

``சட்ட விரோதமாகக் கஞ்சா விற்பனையை ஒழித்தால் மட்டுமே இதுபோன்ற சம்பவங்களை தடுக்க முடியும்”

Published:Updated:
தூத்துக்குடி | தாக்குதல்

தூத்துக்குடியில் கஞ்சா விற்பனையை தடுக்க வலியுறுத்தி, ஊர் மக்கள் நடத்திய போரட்டத்தினை முன்னின்று நடத்தியவர் மீது முன் விரோதத்தில் சரமாரியாகத் தாக்குதல் நடத்திய 7 பேரை போலீஸார் தேடி வருகிறார்கள்.

தாக்குதலுக்கான காரணம் என்ன என அவ்வூரைச் சேர்ந்த சிலரிடம் விசாரித்தோம், ``ஆறுமுகநேரி, திருச்செந்தூர் பகுதியில் கஞ்சா விற்பனை அதிகமாயிட்டே வருகிறது. கல்லூரி மாணவர்கள் மட்டுமில்லாம பள்ளி மாணவர்கள்கூட கஞ்சா புகைக்கும் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகிவிட்டார்கள். இரவு நேரங்களில் வழிப்பறியில் ஈடுபடுவதும், இரண்டு சக்கர வாகனங்களை திருடிச் செல்வதும் என அவர்களின் அட்டகாசம் அதிகமாகிக் கொண்டே போனது. போன வருஷம் ஆறுமுகநேரி, பாரதிநகரைச் சேர்ந்த  பைசோன் என்பவரை  அதே ஊரைச் சேர்ந்த முத்துராஜ் என்பவர்  கஞ்சா போதையில் கத்தியால் குத்தினார்.

பால குமரேசன்
பால குமரேசன்

இதில், பைசோன் காயமடைந்தார். ஆனால், போலீஸார் முத்துராஜைக் கைது செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.  முத்துராஜைக் கைது செய்ய வலியுறுத்தி ஊர்ப் பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இந்த மறியல் போரட்டத்திற்கு பாலகுமரேசன், ஜேசுதா, ஹேம்ராஜ் உள்ளிட்ட சிலர் ஒருங்கிணைத்தனர்.

இதற்குப் பதிலடியாக முத்துராஜின் தம்பிகள் முத்துராஜேஷ், முத்து சதீஷ் ஆகியோர் அவர்களின் கூட்டாளிகளுடன்  ஹேம்ராஜூவுக்குச் சொந்தமான லோடு ஆட்டோவை தீயிட்டுக் கொளுத்தினர். அப்போது, “எனக்கு எதிரா போராட்டம் நடத்துனது யாரா இருந்தாலும் அவர்களுக்கு தக்க பாடம் புகட்டுவேன்” என முத்துராஜ் அவரின் செல்போன் வாட்ஸ்அப்பில் ஸ்டேட்டஸ் வைத்தார். இதனையடுத்து முத்துராஜ் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். கடந்த இரண்டு மாதத்திற்கு  முன்பு முத்துராஜ் சிறையில் இருந்து விடுதலையாகிவிட்டார். இந்த நிலையில்தான் பாலகுமரேசனின் உணவகத்திற்குள் புகுந்து 7 பேர் கொண்ட கும்பல் அவரை சரமாரியாக தாக்கியிருக்கிறது.

தாக்கப்படும் காட்சி
தாக்கப்படும் காட்சி

சட்ட விரோதமாகக் கஞ்சா  விற்பனையை ஒழித்தால் மட்டுமே இதுபோன்ற சம்பவங்களை தடுக்க முடியும்” என்றனர்.

ஆறுமுகநேரி காவல் நிலைய ஆய்வாளர் செந்திலிடம் பேசினோம், “முன் விரோதத்தினால் பாலகுமரேசன் மீது தாக்குதல் நடத்தியது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. தாக்குதலில் ஈடுபட்ட 7 பேரை தேடி வருகிறோம்.  ஆறுமுகநேரி சுற்று வட்டாரப் பகுதிகளில் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனையை கட்டுப்படுத்தியுள்ளோம்” என்றார்.