Published:Updated:

திருவாரூர்: இரவில் டூ வீலரில் வந்த தம்பதி; கொடூரமாகத் தாக்கி நகைகளைப் பறித்த முகமூடிக் கொள்ளையர்கள்

முகமூடிக் கொள்ளையர்கள்

இதில் பலத்த காயமடைந்த வீரராகவன் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்திருக்கிறார். மேகலாவின் அழுகுரல் கேட்டு, அங்கு ஓடிவந்த அப்பகுதி மக்கள் உடனடியாகக் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்திருக்கிறார்கள்.

திருவாரூர்: இரவில் டூ வீலரில் வந்த தம்பதி; கொடூரமாகத் தாக்கி நகைகளைப் பறித்த முகமூடிக் கொள்ளையர்கள்

இதில் பலத்த காயமடைந்த வீரராகவன் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்திருக்கிறார். மேகலாவின் அழுகுரல் கேட்டு, அங்கு ஓடிவந்த அப்பகுதி மக்கள் உடனடியாகக் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்திருக்கிறார்கள்.

Published:Updated:
முகமூடிக் கொள்ளையர்கள்

திருவாரூர் அருகே உள்ள அலிவலம் பகுதியில் டூ வீலரில் சென்றுகொண்டிருந்த தம்பதியைத் தாக்கி, முகமூடிக் கொள்ளையர்கள் நகைகளைப் பறித்துச் சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கொள்ளைச்ச் சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களைக் கண்டுபிடிக்க, காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்திவருகிறார்கள்.

திருவாரூர்: இரவில் டூ வீலரில் வந்த தம்பதி; கொடூரமாகத் தாக்கி நகைகளைப் பறித்த முகமூடிக் கொள்ளையர்கள்

திருவாரூர் மாவட்டம், கருப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வீரராகவன். இவர் கட்டுமானப் பொறியாளராகப் பணியாற்றிவருகிறார். இவரின் மனைவி மேகலா. இவர் திருவாருர் துர்காலயா சாலையிலுள்ள தையல் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்துவருகிறார். இந்நிலையில் இரவு தையல் நிறுவனத்திலிருந்து கிளம்பிய மேகலா, தன் கணவர் வீரராகவனுடன் டூ வீலரில் கருப்பூருக்குச் சென்றுகொண்டிருந்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

திருவாரூர் அருகேயுள்ள அலிவலம் அருகே இவர்கள் சென்றுகொண்டிருந்தபோது, முகமூடி அணிந்து வந்த ஆறு பேர் கொண்ட மர்மக் கும்பல் ஒன்று, இவர்களை வழிமறித்திருக்கிறது. ஏதோ அசம்பாவிதம் நிகழப்போகிறது என்பதை உணர்ந்த வீரராகவனும் மேகலாவும் பதற்றமடைந்திருக்கிறார்கள். ஆனால் செய்வதறியாமல் அதிர்ச்சியில் உறைந்த நிலையில் வீரராகவனை இரும்புக்கம்பியால் தாக்கிய முகமூடிக் கும்பல், மேகலா கழுத்தில் அணிந்திருந்த 11 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளது. இதில் பலத்த காயமடைந்த வீரராகவன் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்திருக்கிறார். மேகலாவின் அழுகுரல் கேட்டு, அங்கு ஓடிவந்த அப்பகுதி மக்கள் உடனடியாகக் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்திருக்கிறார்கள்.

முகமூடிக் கொள்ளையர்கள்
முகமூடிக் கொள்ளையர்கள்

அதைத் தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு வந்த திருவாரூர் தாலுகா காவல்துறையினர், வீரராகவனை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.. இந்தக் கொள்ளைச் சம்பவம் குறித்த தகவலால் திருவாரூர் மக்கள் பெரும் அச்சத்திலும் அதிர்ச்சியிலும் உறைந்தனர். இந்தக் கொள்ளைச் சம்பவம் குறித்து வழக்கு பதிவுசெய்து, விசாரணை நடத்திவரும் திருவாரூர் தாலுகா காவல்துறையினர், இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டு தப்பியோடி தலைமறையாகியுள்ள முகமூடிக் கொள்ளையர்களைத் தேடிவருகின்றனர். அலிவலம் பகுதியிலுள்ள பிரதான சாலையில் நீண்ட தூரம் வரையில் மின்விளக்குகள் இல்லாததால், இரவு நேரத்தில் எப்போதுமே இருள் சூழ்ந்து கிடக்கும். இதை முன்கூட்டியே திட்டமிட்டுத்தான், முகமூடிக் கொள்ளைக் கும்பல் இந்த நகைப்பறிப்புச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது எனவும், இதே நிலை தொடர்ந்தால், மீண்டும் இது போன்ற அசம்பாவிதங்கள் தொடரக்கூடிய ஆபத்துகள் இருப்பதாகவும் இப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கிறார்கள். எனவே, முக்கியச் சாலைகளில் உடனடியாக மின்விளக்குகள் அமைப்பதோடு, இரவு நேரங்களில் காவல்துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட வேண்டும் என வலியுறுத்துகிறார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism