Published:Updated:

பெரம்பலூர்: போதையில் திருட்டு; திருடிய இடத்திலேயே விற்க வந்த கும்பல் - வசமாகச் சிக்கிய கொள்ளையர்கள்

பெரம்பலூர் எஸ்.பி ஆபீஸ்

காப்பர் கம்பியைத் திருடிய இடத்திலேயே விற்க வந்த மூன்று பேரை போலீஸார் கைதுசெய்து விசாரித்துவருகிறார்கள். பகல் நேரத்தில் பழைய துணிகளை வாங்குவதாகவும், இரவு நேரத்தில் திருடும் கும்பலாகவும் செயல்படுவது விசாரணையில் தெரியவந்துள்ளது.

பெரம்பலூர்: போதையில் திருட்டு; திருடிய இடத்திலேயே விற்க வந்த கும்பல் - வசமாகச் சிக்கிய கொள்ளையர்கள்

காப்பர் கம்பியைத் திருடிய இடத்திலேயே விற்க வந்த மூன்று பேரை போலீஸார் கைதுசெய்து விசாரித்துவருகிறார்கள். பகல் நேரத்தில் பழைய துணிகளை வாங்குவதாகவும், இரவு நேரத்தில் திருடும் கும்பலாகவும் செயல்படுவது விசாரணையில் தெரியவந்துள்ளது.

Published:Updated:
பெரம்பலூர் எஸ்.பி ஆபீஸ்

பெரம்பலூர் மாவட்டம், கவுல்பாளையம் கலை நகரைச் சேர்ந்தவர் பிரதாப். இவர், பெரம்பலூர் பைபாஸ் சாலையில் பொக்லைன் எந்திரங்கள் சரிபார்க்கும் பட்டறை நடத்திவருகிறார். இவரின் பட்டறையில் ஏற்கெனவே கடந்த 26-ம் தேதி 8 ஆயிரம் மதிப்பிலான காப்பர் (தாமிர கம்பி) கம்பிகளை யாரோ மர்ம நபர்கள் திருடியிருக்கிறார்கள்.

கொள்ளை சம்பவம்
கொள்ளை சம்பவம்

இதுகு றித்து தொழில் போட்டியால் நடந்ததா அல்லது வேறு யாரும் திருடிச் சென்றுவிட்டார்களா என்று கடையின் உரிமையாளர் மறைமுகமாக விசாரித்துக்கொண்டிருந்த நிலையில், இரண்டு பேர் லோடு ஆட்டோவில் அவரின் பட்டறைக்கே, அதே காப்பர் கம்பியை விற்க வந்துள்ளனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பட்டறையின் உரிமையாளர் பிரதாப் வாங்கிப் பார்த்தபோது, அதில், அவரின் பட்டறை பெயர் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். அவரின் கடையிலேயே திருடிவிட்டு, அவரிடமே விற்க வந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தவர், இரண்டு பேரையும் பிடித்து பெரம்பலூர் போலீஸாரிடம் ஒப்படைத்தார்.

பெரம்பலூர் போலீஸார்
பெரம்பலூர் போலீஸார்

வழக்கை விசாரித்துவரும் போலீஸாரிடம் பேசினோம். ``கைதானவர்கள் திருவண்ணாமலை மாவட்டம், வாழவச்சனூர் அருகேயுள்ள மோகன கிருஷ்ணன், மணிகண்டன், பெரம்பலூர் மாவட்டம் கீழ்பென்னாத்தூரைச் சேர்ந்த பிரபு என்பது தெரியவந்திருக்கிறது.

அவர்கள் டீம் போட்டுத் திருடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். இந்நிலையில் கடந்த 25-ம் தேதி இரவு மூவரும் குடித்துவிட்டு போதையில் காப்பர் கம்பியைத் திருடிச் சென்றிருக்கிறார்கள். அந்தப் பட்டறையில் திருடியது என்பது தெரியாமல் அதே பட்டறையில் காப்பர் கம்பியை விற்க வந்ததும் அவர்களைப் பிடித்து எங்களிடம் கொடுத்திருக்கிறார்கள்.

பெரம்பலூர் தொடர் திருட்டு
பெரம்பலூர் தொடர் திருட்டு

அவர்கள் வைத்திருக்கும் லோடு ஆட்டோ, சென்னையில் ஒரு ஆசிரமத்தின் பெயர் மற்றும் முகவரி எழுதப்பட்டிருந்தது. அவர்களிடம் விசாரித்ததில் பகல் நேரத்தில் பழைய ஆடைகளை வாங்கிக்கொடுப்பதும், இரவு நேரங்களில் திருட்டில் ஈடுபடுவதும் வழக்கமாகக்கொண்டிருக்கிறார்கள் என்று தெரிந்தது. அதேபோல் இங்கு இரவு நேரங்களில் நிறுத்திவைக்கப்படும் லாரிகளில் டீசல் திருடும் கும்பலாக இருக்குமோ என்கிற சந்தேகம் எழுகிறது. இவர்களிடம் விசாரித்துக்கொண்டிருக்கிறோம்" என்றனர்.