Published:Updated:

பப்ஜி கேம் பழக்கம்; ஆப்பிள் ஹெட்போனுக்கு ஆசைப்பட்ட இளைஞருக்கு நேர்ந்த சோகம்!

உச்சிப்புளி காவல் நிலையம்

ஆப்பிள் ஹெட்போன் இலவசமாகத் தருவதாகக் கூறிய கும்பல் ஒன்று, மதுரையைச் சேர்ந்த வாலிபரை நேரில் வரவழைத்து பணம் பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

பப்ஜி கேம் பழக்கம்; ஆப்பிள் ஹெட்போனுக்கு ஆசைப்பட்ட இளைஞருக்கு நேர்ந்த சோகம்!

ஆப்பிள் ஹெட்போன் இலவசமாகத் தருவதாகக் கூறிய கும்பல் ஒன்று, மதுரையைச் சேர்ந்த வாலிபரை நேரில் வரவழைத்து பணம் பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:
உச்சிப்புளி காவல் நிலையம்

மதுரை ஜெய்ஹிந்த்புரத்தைச் சேர்ந்தவர் சந்தோஷ் குமார் (23). இவர் மர வேலை செய்துவருகிறார். 'பப்ஜி' விளையாட்டில் அதிக ஆர்வமுடைய இவர், அறிமுகம் இல்லாத பலருடன் பப்ஜியில் விளையாடிவந்திருக்கிறார். அப்போது, ராமநாதபுரம் மாவட்டம், உச்சிப்புள்ளியைச் சேர்ந்த வினோத், தினேஷ், சின்னமணி, இந்துகுமார் ஆகியோருடன் பப்ஜி விளையாட்டின்போது பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. அவர்கள், ``நாங்கள் விலையுயர்ந்த ஆப்பிள் ஹெட்போன் வைத்திருக்கிறோம். பப்ஜி விளையாட்டுக்கு இந்த ஹெட்போன்தான் நன்றாக இருக்கும்" என ஆசையைத் தூண்டியிருக்கின்றனர்.

சந்தோஷ் குமாரும், ``அதேபோல் ஆப்பிள் ஹெட்போன் வாங்க வேண்டும், அதன் விலை என்ன?" என அவர்களிடம் கேட்டிருக்கிறார். அதற்கு, ``காசு கொடுத்து வாங்க வேண்டாம், எங்களிடம் கூடுதலாக ஒரு ஹெட்போன் இருக்கிறது. ராமநாதபுரத்துக்கு நேரில் வந்து வாங்கிச் செல்லுங்கள்'' எனக் கூறியிருக்கிறனர்.

கைதுசெய்யப்பட்ட தினேஷ்
கைதுசெய்யப்பட்ட தினேஷ்

அதன்படி நேற்று முன்தினம் சந்தோஷ் குமார், தன்னுடைய நண்பர் யோகேஸ்வரனுடன் இருசக்கர வாகனத்தில் மதுரையிலிருந்து ராமநாதபுரத்துக்கு வந்திருக்கிறார். உச்சிப்புளி அருகே பெருங்குளம் சுங்கச்சாவடிக்கு இருவரையும் வரவழைத்து, அங்குள்ள காட்டுக்குள் அழைத்துச் சென்றிருக்கின்றனர். அதன் பிறகு கத்தியைக் காட்டி மிரட்டி, அவர்கள் இருவரிடமுமிருந்து ரூ.12.000 பணம், செல்போன்களைப் பறித்துக்கொண்டு, ``போலீஸில் புகார் அளித்தால் கொலைசெய்துவிடுவோம்!" என அடித்து விரட்டியிருக்கின்றனர்.

இந்த நிலையில், சம்பவம் தொடர்பாக இருவரும் உச்சிப்புளி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்படி வினோத், தினேஷ், சின்னமணி, இந்துகுமார் ஆகிய நான்கு பேர்மீதும் போலீஸார் வழக்கு பதிவுசெய்தனர். அதன் பிறகு தினேஷைக் கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, ராமநாதபுரம் கிளைச் சிறையில் அடைத்தனர். தலைமறைவாக இருக்கும் மற்ற மூன்று பேரையும் போலீஸார் தேடிவருகின்றனர்.