Published:Updated:

சேலத்தில் காருடன் கடத்தப்பட்ட 100 கிலோ வெள்ளி... கடத்தல் கும்பலைச் சேர்ந்த மூவர் கைது!

கடத்தலில் ஈடுப்பட்ட நபர்கள்

100 கிலோ வெள்ளிக் கடத்தலில் ஈடுபட்ட கேரளாவைச் சேர்ந்த கும்பலை போலீஸார் வலைவிரித்துப் பிடித்தனர்.

சேலத்தில் காருடன் கடத்தப்பட்ட 100 கிலோ வெள்ளி... கடத்தல் கும்பலைச் சேர்ந்த மூவர் கைது!

100 கிலோ வெள்ளிக் கடத்தலில் ஈடுபட்ட கேரளாவைச் சேர்ந்த கும்பலை போலீஸார் வலைவிரித்துப் பிடித்தனர்.

Published:Updated:
கடத்தலில் ஈடுப்பட்ட நபர்கள்

சேலம், ஓமலூர் அருகே பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. வட மாநிலங்களை இணைக்கும் இந்தச் சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன. இந்த நிலையில் சேலம் செவ்வாப்பேட்டையை சேர்ந்த வெள்ளி வியாபாரி சந்தோஷ், சாகர், விக்ராந்த் ஆகிய மூவரும் 100 கிலோ வெள்ளியை வாங்கிக்கொண்டு சேலத்தை நோக்கி காரில் வந்துகொண்டிருந்தனர்.

அப்போது அவர்கள் வந்த காரைப் பின்தொடர்ந்து இரண்டு கார்களில் வந்த ஆறு பேர் கொண்ட கும்பல், ஓமலூர் அருகே ஆர்.சி.செட்டிபட்டியில் உள்ள தனியார் ஓட்டல் முன்பாக வழிமறித்து நிறுத்தியது. தொடர்ந்து வெள்ளியைக் கொண்டுவந்த காரின் ஓட்டுநருடன் சேர்ந்து ஆறு பேர் கும்பல் காரில் வந்த விக்ராந்த், சாகர் இருவரையும் மிரட்டி காரிலிருந்து கீழே இறக்கிவிட்டு காரின் பின்புறம் தூங்கிக்கொண்டிருந்த சந்தோஷுடன், 100 கிலோ வெள்ளியுடன் காரை எடுத்துக்கொண்டு சென்றனர்.

சேலத்தில் காருடன் கடத்தப்பட்ட 100 கிலோ வெள்ளி... கடத்தல் கும்பலைச் சேர்ந்த மூவர் கைது!

இது குறித்து ஓமலூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் போலீஸார் விசாரணை மேற்கொண்டதில் சங்ககிரி அருகே காரில் சென்ற கும்பல் சந்தோஷை மிரட்டி கீழே இறக்கிவிட்டுவிட்டு, காருடன் வெள்ளியைக் கொள்ளையடித்து தப்பிச் சென்றது தெரியவந்தது. பின்னர் 100 கிலோ வெள்ளியை கடத்திச் சென்ற கார் சங்ககிரி பக்கம் உள்ள குப்பனூர் கிராம சாலையில் அநாதையாக நின்றது. அந்த காரை போலீஸார் கைப்பற்றி நடத்திய விசாரணையில் கேரளா மற்றும் சேலத்தைச் சேர்ந்த கும்பல் வெள்ளிக் கடத்தலில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து வெள்ளிக்கட்டிகளைக் கடத்திய கேரள மாநிலம், பாலக்காடு அருகேயுள்ள முட்டி குளங்கிரா பகுதியைச் சேர்ந்த சுரேஷ்குமார், பாலக்காடு ஓங்காடு பகுதியைச் சேர்ந்த நாசர் உதீன், திருச்சூர் அருகேயுள்ள வாகடபள்ளி பகுதியைச் சேர்ந்த மோசின் ஆகிய மூன்று பேரை போலீஸார் கைதுசெய்தனர். விசாரணையில் வெள்ளியைக் கடத்தியதில் மேலும் சிலருக்குத் தொடர்பு இருப்பதும், அவர்களிடமே கடத்தப்பட்ட வெள்ளி இருப்பதும் தெரியவந்திருக்கிறது. இதையடுத்து மேற்கண்ட மூன்று பேரையும் போலீஸார் கைதுசெய்து சேலம் சிறையில் அடைத்தனர். தொடர்ந்து தலைமறைவாக இருக்கும் கொள்ளையர்களை வலைவிரித்துத் தேடிவருகின்றனர்.