Published:Updated:

குழந்தை, முதியவர் கொலை; மருமகள், பேத்தி பாலியல் வன்கொடுமை; நிலப்பிரச்னையால் நடந்த கொடூரம்!

மஹாராஷ்டிராவில் நிலப்பிரச்னையில் குழந்தை மற்றும் முதியவரை கொலை செய்துவிட்டு குழந்தையின் தாய், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவர்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

மஹாராஷ்டிரா மாநிலம் பீட் மாவட்டத்தில் உள்ள பார்னர் என்ற கிராமத்தில் இருந்த நிலப்பிரச்னை தொடர்பாக இரு குடும்பத்துக்கிடையே பகை இருந்து வந்தது. துகாராம் என்பவரின் மகன் நிலப்பிரச்னையில் பகவான் என்பவரைக் கடந்த மாதம் 22ம் தேதி கத்தியால் குத்திவிட்டார். கத்தியால் குத்தியவர் தலைமறைவாக இருக்கிறார். ஆனால் பகவானும் அவரது குடும்பத்தினரும் சேர்ந்து துகாராம் குடும்பத்தை பழிவாங்க முடிவுசெய்தனர். கடந்த மாதம் 25ம் தேதி 30 பேர் கொண்ட கும்பல், இரும்பு கம்பி, ஆயுதங்களுடன் இரவு 12 மணிக்கு மேல் துகாராம் வீட்டுக்குச் சென்றிருக்கிறது. முதலில் துகாராம் வீட்டில் மின் இணைப்பை துண்டித்தனர். துகாராம் மருமகள் தனது இரண்டு வயது மகனை மடியில் வைத்துக்கொண்டிருந்தார். பாவ்ராவ் என்பவரும், அவரது மகன் சுபாஷ் என்பவரும் சேர்ந்து மடியில் குழந்தையை வைத்திருந்த பெண்ணை கம்பால் தாக்கியிருக்கின்றனர்.

 13 வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை தந்த காவலர்; சிறுமியின் தாய் உடந்தை; போக்சோவில் வழக்கு பதிவு

இது குறித்து அப்பெண் கூறுகையில், ``மடியில் குழந்தை இருந்தபோதும் என்னை பாவ்ராவும், அவரது மகனும் சேர்ந்து அடித்தனர். இதில் எனது கையில் இருந்து பிடி நழுவி எனது மகன் கீழே விழுந்து அழுதுகொண்டிருந்தான். அப்படி இருந்தும் விடாது என்னை அடித்துக்கொண்டிருந்தனர். சுபாஷ் எனது மகனை தூக்கி தூரத்தில் எறிந்துவிட்டார். இதில் எனது மகன் காயமடைந்து இறந்துபோனான். சுபாஷ் அதோடு விடாமல் என்னை பாலியல் வன்கொடுமை செய்தார். மேலும் எனது மாமனார் துகாராம், அத்தை ஆகியோரையும் அடித்து உதைத்தனர். மறுநாள் சிகிச்சை பலனலிக்காமல் மாமனார் இறந்தார். பக்கத்தில் இருந்த எங்களது குடிசை வீட்டுக்குத் தீ வைத்தனர் " என்றார். அந்த கும்பல துகாராமின் பேத்தியையும் பாலியல் வன்கெகொடுமை செய்திருக்கின்றனர். இது குறித்து துகாராம் மருமகன் கூறுகையில், ``எங்களை கிராமத்தினர் சமூக ரீதியாக ஒதுக்கி வைத்திருக்கின்றனர். இந்த சம்பவத்துக்குத் தொழிலதிபர் விநோத் நவாலே என்பவர்தான் காரணம். ஆனால் அவர் இன்னும் கைது செய்யப்படாமல் இருக்கிறார்" என்றார். சம்பவம் நடந்த கிராமத்தில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். தாக்குதலில் ஈடுபட்டவர்களின் வீடுகளில் உள்ள ஆண்கள் வீட்டை காலி செய்துவிட்டு தலைமறைவாகினர். இது குறித்து போலீஸ் அதிகாரி விஜய் கூறுகையில், ``நிலப்பிரச்னையில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. அடையாளம் தெரியாமல் இருப்பதற்காக மின்சாரத்தை துண்டித்துவிட்டு தாக்குதல் நடத்தியிருக்கின்றனர். இத்தாக்குதல் சம்பவம் தொடர்பாக பாபன், பாலு, பகவான் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று தெரிவித்தார். குற்றவாளிகள் மீது கூட்டு பாலியல் வன்கொடுமை சட்டப்பிரிவும் சேர்க்கப்பட்டிருக்கிறது. துகாராம் வீட்டிற்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டிருக்கிறது " என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு