Published:Updated:

ஆலங்குளம்: காவல் நிலையத்தில் தற்கொலைக்கு முயன்ற பெண் ஆய்வாளர் - பணிச்சுமை காரணமா?!

பெண் ஆய்வாளர் சாந்தகுமாரி

பெண் ஆய்வாளர் கடுமையான மனஅழுத்தத்தில் இருந்ததாகக் காவல் நிலையத்தில் இருப்பவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆலங்குளம்: காவல் நிலையத்தில் தற்கொலைக்கு முயன்ற பெண் ஆய்வாளர் - பணிச்சுமை காரணமா?!

பெண் ஆய்வாளர் கடுமையான மனஅழுத்தத்தில் இருந்ததாகக் காவல் நிலையத்தில் இருப்பவர்கள் தெரிவிக்கின்றனர்.

Published:Updated:
பெண் ஆய்வாளர் சாந்தகுமாரி

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் மகளிர் காவல் நிலையத்தில் ஆய்வாளராகப் பணிபுரிபவர் சாந்தகுமாரி. இவர் தற்கொலை செய்ய முயன்றதாக தகவல் வெளியானது. கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு மதுரை மாவட்டத்திலிருந்து மாறுதலாகி ஆலங்குளம் காவல் நிலையத்துக்கு வந்த அவருக்கு ஏற்கெனவே ஏற்பட்ட விபத்து காரணமாக உடல்நிலையில் பாதிப்பு இருந்திருக்கிறது.

இந்த நிலையில், மதுரையிலிருந்து மாறுதலாகி ஆலங்குளம் காவல் நிலையத்துக்கு வந்த பின்னரும் அவருக்கு உடல்நலம் சரியில்லாமல் போயிருக்கிறது. அதனால் பொறுப்பேற்ற சில நாள்களிலேயே மருத்துவ விடுப்பில் சென்றிருக்கிறார். விடுப்பு முடிந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு பணிக்கு வந்த அவருக்கு உயரதிகாரிகள் பணி தொடர்பாக டார்ச்சர் கொடுத்தனர் எனக் கூறப்படுகிறது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஆலங்குளம் மகளிர் காவல் நிலையத்தில் மகளிர் தொடர்பான பல வழக்குகள் நிலுவையில் இருந்த நிலையில் அவற்றின் மீது நடவடிக்கை எடுக்காமல் விடுப்பில் சென்றது தொடர்பாக உயரதிகாரிகள் அவரிடம் கடுமையாகப் பேசியதாகவும் சொல்லப்படுகிறது. அதனால் அவர் மிகுந்த மன உளைச்சல் அடைந்திருக்கிறார்.

ஆலங்குளம் காவல் நிலையம்
ஆலங்குளம் காவல் நிலையம்

இந்த நிலையில், அவர் ரோந்துப் பணிக்குச் செல்வதற்குத் தயாராக இருந்த நிலையில், கழிப்பறைக்குச் சென்று திரும்பியபோது தள்ளாட்டத்துடன் வந்திருக்கிறார். பின்னர் காவல் நிலையத்தின் உள்ளேயே தரையில் மயங்கிச் சரிந்திருக்கிறார். அவர்மீது மருந்து வாடை வந்ததால் அங்கிருந்த சக காவலர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அவர்மீது கொசு மருந்துக்கான வாடை வந்ததால் அவர் அதைக் குடித்திருப்பது தெரியவந்தது.

காவல் நிலையத்தில் இருந்த ஜீப் ஒட்டுநர் மற்றும் பெண் காவலர்கள் அதிர்ச்சியுடன் கீழே விழுந்துகிடந்த ஆய்வாளரை மீட்டு, அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக நெல்லையில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். நெல்லையில் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

தற்கொலைக்கு முயன்ற இன்ஸ்பெக்டர் சாந்தகுமாரி
தற்கொலைக்கு முயன்ற இன்ஸ்பெக்டர் சாந்தகுமாரி

இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறை வட்டாரத்தில் பேசியபோது, ``ஆய்வாளர் சாந்தகுமாரி, பணியில் கொஞ்சம் மெதுவாகச் செயல்படுவார். அதனால் அவரை அதிகாரிகள் அடிக்கடி கடிந்துகொள்வார்கள். ஏற்கெனவே அவர் பணியாற்றிய இடங்களில் அதிகாரிகள் திட்டியதால் மனஉளைச்சல் அடைந்த அவர், கொசு மருந்தை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் நடந்திருக்கிறது. அதுபோல ஆலங்குளம் காவல் நிலையத்திலும் அவர் தற்கொலைக்கு முயன்றிருக்கிறார். அவருக்கு மனநல ஆலோசனை வழங்க அதிகாரிகள் ஏற்பாடு செய்திருக்கிறார்கள்” என்று தெரிவித்தனர்.

பெண் ஆய்வாளர் சாந்தகுமாரி பணிச்சுமை காரணமாக விஷமருந்தி தற்கொலை செய்ய முயன்றாரா அல்லது உடல்நிலை சரியில்லாததால் விஷம் அருந்தினாரா என்பது குறித்து விசாரணை நடைபெற்றுவருகிறது.