Published:Updated:

ஹோட்டலுக்குச் செல்வதாக அழைத்துச் சென்று, குடும்பத்தோடு காருக்குத் தீவைத்த தொழிலதிபர்- நடந்தது என்ன?

தீப்பற்றி எரியும் கார்

மகாராஷ்டிரா தொழிலதிபர் பணப் பிரச்னையில் தனது குடும்பத்தோடு காருக்குத் தீவைத்துக்கொண்டார் என்ற தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

ஹோட்டலுக்குச் செல்வதாக அழைத்துச் சென்று, குடும்பத்தோடு காருக்குத் தீவைத்த தொழிலதிபர்- நடந்தது என்ன?

மகாராஷ்டிரா தொழிலதிபர் பணப் பிரச்னையில் தனது குடும்பத்தோடு காருக்குத் தீவைத்துக்கொண்டார் என்ற தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:
தீப்பற்றி எரியும் கார்

மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூரைச் சேர்ந்த தொழிலதிபர் ராம்ராவ் பட் (58) என்பவர் நேற்று முன்தினம் பிற்பகலில் தன் மனைவி, மகனை காரில் அழைத்துக்கொண்டு `ஹோட்டலுக்குச் சாப்பிட போகலாம்’ என்று கூறினார். கார் ஹோட்டலுக்குச் சென்று கொண்டிருந்தபோது திடீரென ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் காரை சாலையோரம் நிறுத்திய ராம்ராவ் தனது காரின் கதவைத் திறக்க முடியாதபடி மூடிவிட்டு, பெட்ரோலை எடுத்து தன்மீதும், தன்னுடைய மனைவி சங்கீதா, மகன் நந்தன் மீதும் ஊற்றினார். பின்னர் யாரும் எதிர்பாராத நேரத்தில் காரோடு தீவைத்துக்கொண்டார்.

தீப்பற்றி எரியும் கார்
தீப்பற்றி எரியும் கார்

இதில் ராம்ராவின் மனைவி, மகன் இருவரும் காரிலிருந்து வெளியில் குதித்தனர். ஆனாலும் அவர்கள் இருவரும் தீ விபத்தில் படுகாயமடைந்தனர். அவர்கள் இருவரும் மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். ராம்ராவ் காரிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து போலீஸ் அதிகாரி கூறுகையில், ``ராம்ராவ் தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பு கடிதம் ஒன்றை எழுதிவைத்திருந்தார். அதைப் படித்துப் பார்த்தபோது ராம்ராவ் நிதிநெருக்கடியில் சிக்கியிருந்தது தெரியவந்தது. அதில், `வியாபாரம் நஷ்டமானதால் பெரும் நிதி நெருக்கடி ஏற்பட்டுவிட்டது. அதனால் இந்த முடிவை மேற்கொள்கிறேன்’ எனக் குறிப்பிட்டிருக்கிறார். ராம்ராவ் தொழிலுக்காகப் பல இடங்களில் கடன் வாங்கியிருந்தார். ஆனால் கடனைச் சரியான நேரத்தில் திரும்பக் கொடுக்க முடியவில்லை. எனவே, தான் மட்டும் தற்கொலை செய்தால் தனக்குப் பணம் கொடுத்தவர்களால் தனது குடும்பத்துக்குப் பிரச்னை ஏற்படும் என்று கருதி குடும்பத்தோடு தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்திருக்கிறார்” என்று தெரிவித்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!