Published:Updated:

திருவள்ளூர்: 13 வயது சிறுமிக்கு 2 ஆண்டுகளாகப் பாலியல் தொல்லை - தனியார் நிறுவன ஊழியர் கைது

சிறுமிக்குப் பாலியல் தொல்லை ( சித்திரிப்புப் படம் )

திருவள்ளூர் மாவட்டத்தில் 13 வயது சிறுமியை மிரட்டி இரண்டு வருடங்களாகப் பாலியல் வன்கொடுமை செய்த தனியார் நிறுவன ஊழியர் ஒருவர் போக்சோவில் கைது.

திருவள்ளூர்: 13 வயது சிறுமிக்கு 2 ஆண்டுகளாகப் பாலியல் தொல்லை - தனியார் நிறுவன ஊழியர் கைது

திருவள்ளூர் மாவட்டத்தில் 13 வயது சிறுமியை மிரட்டி இரண்டு வருடங்களாகப் பாலியல் வன்கொடுமை செய்த தனியார் நிறுவன ஊழியர் ஒருவர் போக்சோவில் கைது.

Published:Updated:
சிறுமிக்குப் பாலியல் தொல்லை ( சித்திரிப்புப் படம் )

திருவள்ளூர் மாவட்டம், மணவாள நகர்ப் பகுதிக்கு அருகில் வசிப்பவர் பிவின். இவர் ஸ்ரீபெரும்புதூரிலுள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராகப் பணிபுரிந்துவருகிறார். பிவினுக்குத் திருமணமாகி ஒரு மனைவியும், ஒரு பெண் குழந்தையும் இருக்கிறார்கள். இந்த நிலையில் பிவின் மீது திருவள்ளூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு பிரிவில் ஒரு புகார் வந்தது.

பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை
சித்திரிப்புப் படம்

பிவின் கடந்த 2021-ம் ஆண்டு அந்தப் பகுதியில் ஒன்பதாம் வகுப்பு படித்துவரும் 13 வயது சிறுமி ஒருவரை அவர் வீட்டு மாடிக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். அங்கு தனிமையில் அந்தச் சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டிருக்கிறார். அதோடு, அந்தச் சிறுமியை ஆடையில்லாமல் புகைப்படமும் எடுத்திருக்கிறார். தொடர்ந்து அந்தச் சிறுமியிடம் இது குறித்து யாரிடமும் சொல்லக் கூடாது. மீறிச் சொன்னால், இந்தப் புகைப்படத்தை வெளியில் விட்டுவிடுவேன் என்று மிரட்டியிருக்கிறார்.

பிவின், புகைப்படத்தைக் காட்டி மிரட்டி அந்தச் சிறுமியை அடிக்கடி வரவழைத்து பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார். கடந்த இரண்டு வருடங்களாகத் தொடர்ந்த இந்தக் கொடூரம் குறித்து அந்த சிறுமி சமீபத்தில் தனது பெற்றோரிடம் தெரிவித்திருக்கிறார். அதிர்ச்சியடைந்த பெற்றோர் இந்த விவகாரம் குறித்து மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலகு பிரிவுக்கு புகார் தெரிவித்துள்ளனர். இந்தப் புகார் குறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு பிரிவின் ஒருங்கிணைப்பாளர் எலிஷா மோரீஸ் விசாரணை மேற்கொண்டார்.

பாலியல் தொல்லை
பாலியல் தொல்லை
சித்திரிப்புப் படம்

இந்த விவகாரம் குறித்து, திருவள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்தப் புகாரின் அடிப்படையில், பிவின் மீது போக்சோ உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவுசெய்த போலீஸார் அவரைக் கைதுசெய்துள்ளனர். 13 வயது சிறுமியை இரண்டு ஆண்டுகளாக மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.