Published:Updated:

பாலியல் குற்றவாளி ‘பகுடு பாஸ்கர்’ மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - அதிர்ச்சியூட்டும் குற்றப் பின்னணி!

பகுடு பாஸ்கர்

ராணிப்பேட்டை மாவட்டத்தை அதிரவைத்த பாலியல் குற்றவாளி ‘பகுடு’ பாஸ்கர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

பாலியல் குற்றவாளி ‘பகுடு பாஸ்கர்’ மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - அதிர்ச்சியூட்டும் குற்றப் பின்னணி!

ராணிப்பேட்டை மாவட்டத்தை அதிரவைத்த பாலியல் குற்றவாளி ‘பகுடு’ பாஸ்கர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

Published:Updated:
பகுடு பாஸ்கர்

ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அருகேயுள்ள மாசாப்பேட்டை அண்ணா நகரைச் சேர்ந்தவர் ‘பகுடு பாஸ்கர்’ என்ற பாஸ்கரன், வயது 33. கஞ்சா வியாபாரியான இந்த நபர் ஏற்கெனவே நான்கைந்து பெண்களை ஒவ்வொருவராக ஏமாற்றித் திருமணம் செய்திருக்கிறார். பின்னர், இவருடன் வாழப் பிடிக்காமல் அந்தப் பெண்கள் தப்பித்துச் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது. தற்போது, துர்கா என்ற 30 வயதுப் பெண்ணுடன் குடும்பம் நடத்தி வந்தார் பகுடு பாஸ்கர். கஞ்சா விற்பனை தொடர்பாகவும் பாஸ்கர் மீது சில வழக்குகள் பதிவுசெய்யப்பட்டிருப்பதாகவும் விவரிக்கிறது ராணிப்பேட்டை போலீஸ்.

இந்த நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு கஞ்சா வழக்கில் கைதுசெய்யப்பட்ட பாஸ்கர், வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அந்தச் சமயத்தில், பாஸ்கர் மனைவி துர்காவுக்கும், பக்கத்து வீட்டில் வசித்துவந்த கணவரைப் பிரிந்த பெண்ணுக்கும் இடையே ‘ஏதோ’ தகராறு ஏற்பட்டிருக்கிறது. இதனால், அந்தப் பெண்ணை பழிவாங்கும் திட்டத்துடன் இருந்திருக்கிறார் துர்கா.

பகுடு பாஸ்கருடன் கைது செய்யப்பட்ட அவரது மனைவி துர்கா
பகுடு பாஸ்கருடன் கைது செய்யப்பட்ட அவரது மனைவி துர்கா

அதன்படி, கடந்த நவம்பர் மாதம் 27-ம் தேதி சிறையிலிருந்து வெளியே வந்த கணவன் பாஸ்கரிடம், பக்கத்து வீட்டுப் பெண்ணையும், அவரது 17 வயது மகளையும் பாலியல் வன்கொடுமைச் செய்யுமாறு மனைவி துர்காவே திட்டம் வகுத்துக் கொடுத்திருக்கிறார். அதன்படி, நவம்பர் 28-ம் தேதி நள்ளிரவு எதிர்வீட்டுப் பெண்ணின் வீட்டுக்குச் சென்று கதவைத் தட்டியிருக்கிறார் பாஸ்கர். தூங்கிக்கொண்டிருந்த அந்தப் பெண் எழுந்து வந்து கதவைத் திறந்தபோது, வீட்டுக்குள் அத்துமீறிப் புகுந்து, கத்தி முனையில் தாயையும் மகளையும் தாக்கியிருக்கிறார். பின்னர், அவர்களின் வாயைப் பொத்தி கை கால்களையும் கட்டிப்போட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டிருக்கிறார்.

அப்போது, கஞ்சாவையும் புகைத்துவிட்டு, தாயையும், மகளையும் பலவந்தப்படுத்திய காட்சிகளை தனது செல்போனிலும் வீடியோவாகப் பதிவு செய்திருக்கிறார். கணவனின் இந்தக் கொடூரச் செயலுக்கு உடந்தையாக இருந்த மனைவி துர்கா, சம்பவம் நடந்த வீட்டின் கதவை வெளிப்புறமாகச் சாத்திவிட்டு காவலுக்கும் வெளியில் நின்றிருந்தார். இதையடுத்து, தாய், மகளை மிரட்டிவிட்டு இருவரும் தப்பி ஓடியிருக்கிறார்கள். பாதிக்கப்பட்ட தாயும், மகளும் ராணிப்பேட்டை மகளிர் காவல் நிலையத்துக்குச் சென்று தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளைக்கூறி கதறி அழுதனர்.

பகுடு பாஸ்கர்
பகுடு பாஸ்கர்

இதையடுத்து, இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி தலைமையிலான தனிப்படையினர், பாலியல் குற்றவாளி பகுடு பாஸ்கர் மற்றும் அவரது மனைவி துர்காவை தேடிப்பிடித்து கைதுசெய்தனர். அவர்கள் இருவர் மீதும் ‘போக்சோ’ உள்ளிட்ட 9 பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவுசெய்தும் சிறையில் அடைத்தனர். இந்த நிலையில், பாலியல் கொடூரன் பகுடு பாஸ்கரின் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் அவனது சிறைக்காவலை நீட்டிக்க ராணிப்பேட்டை எஸ்.பி தீபா சத்யன், மாவட்ட ஆட்சியர் பாஸ்கரபாண்டியனிடம் பரிந்துரைச் செய்தார். அதன்படி, பகுடு பாஸ்கரின் காவலை ‘குண்டர்’ சட்டத்தின்கீழ் ஓராண்டு நீட்டித்து, மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருக்கிறார்.