Published:Updated:

போலீஸ் வாகனத்தையே திருடிச் சென்ற நபர்; மடக்கிப் பிடித்த போலீஸ் - சேலத்தில் அதிர்ச்சி!

அரசு சின்னம் பொறிக்கப்பட்ட வாகனம்
News
அரசு சின்னம் பொறிக்கப்பட்ட வாகனம்

சேலத்தில் ஒரு நபர் சினிமா பாணியில் காவல்துறையின் வாகனத்தை திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:

போலீஸ் வாகனத்தையே திருடிச் சென்ற நபர்; மடக்கிப் பிடித்த போலீஸ் - சேலத்தில் அதிர்ச்சி!

சேலத்தில் ஒரு நபர் சினிமா பாணியில் காவல்துறையின் வாகனத்தை திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

அரசு சின்னம் பொறிக்கப்பட்ட வாகனம்
News
அரசு சின்னம் பொறிக்கப்பட்ட வாகனம்

சேலம், வின்சென்ட் பகுதியில் மாநகர காவலர் குடியிருப்பு, சேலம் மாவட்ட காவல்துறை ஆயுதப்படை மைதானம் அமைந்திருக்கிறது. இங்கு சேலம் மாநகர காவல் துறையினரின் ரோந்து வாகனங்கள், காவல்துறை பாதுகாப்பு பணியில் ஈடுபடும் கனரக வாகனங்கள் என நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறை வாகனங்கள் நிறுத்திவைக்கப்பட்டிருக்கின்றன. இந்த நிலையில், ஆயுதப்படை மைதானத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த காவல்துறையின் வாகனம் ஒன்று நேற்று முன் தினம் இரவு காணாமல் போனதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

போலீஸ் வாகனத்தையே திருடிச் சென்ற நபர்; மடக்கிப் பிடித்த போலீஸ் - சேலத்தில் அதிர்ச்சி!

இதைத் தொடர்ந்து, அங்குள்ள சிசிடிவி கேமராவை காவல்துறையினர் ஆய்வுசெய்தனர். அப்போது அரசு சின்னத்துடன் இருந்த வாகனம் ஒன்று இரண்டு நாள்களாக ஆயுதப்படை மைதானத்துக்கு வந்து சென்றது பதிவாகியிருந்தது. அதனடிப்படையில், அரசு வாகனத்தின் எண்ணை வைத்து ஆய்வுசெய்தபோது, அந்த எண்ணில் எந்தவித வாகனமும் பதிவாகவில்லை எனத் தகவல் கிடைத்திருக்கிறது. இதனடிப்படையில் அந்த வாகனத்தை காவல்துறையினர் தேடிவந்தனர்.

இந்த நிலையில், சேலம் அயோத்தியாபட்டணம் பகுதியில் அரசு சின்னம் பதிந்த வாகனம் செல்வதாகத் தகவல் கிடைத்திருக்கிறது. தகவலின் அடிப்படையில் அஸ்தம்பட்டி காவல்துறையினர் விரைந்து சென்று போலி அரசு வாகனத்தை சுற்றிவளைத்துப் பிடித்தனர். வாகனத்தை ஓட்டிச் சென்ற மதன்குமார் என்பவரை காவல்துறையினர் கைதுசெய்து விசாரணை நடத்தினர். குடிபோதையில் இருந்த மதன்குமார் காவல்துறையினரிடம் விதண்டாவாதமாகப் பதிலளித்திருக்கிறார். தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில் காவல்துறை வாகனத்தைத் திருடிச் சென்றதை ஒப்புக்கொண்டார்.

போலீஸ் வாகனத்தையே திருடிச் சென்ற நபர்; மடக்கிப் பிடித்த போலீஸ் - சேலத்தில் அதிர்ச்சி!

இதனடிப்படையில், சேலம் சூரமங்கலம் பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த காவல்துறை வாகனத்தை அஸ்தம்பட்டி காவல்துறையினர் மீட்டனர். இதையடுத்து மதன்குமார் வேறு ஏதாவது வாகனத்தைத் திருடியிருக்கிறாரா... என்பது குறித்து அஸ்தம்பட்டி காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். காவல்துறை வாகனம் காவலர் குடியிருப்பில் திருடிச் செல்லப்பட்ட சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.