Published:Updated:

போதை மறுவாழ்வு மையத்தில் மர்ம மரணம்! - ஐந்து பேரைக் கைதுசெய்த காவல்துறை - என்ன நடந்தது?

போதை மறுவாழ்வு மையத்தில் மர்ம மரணம்

சென்னையில் செயல்பட்டுவரும் போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சைக்காகச் சென்ற நபர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

போதை மறுவாழ்வு மையத்தில் மர்ம மரணம்! - ஐந்து பேரைக் கைதுசெய்த காவல்துறை - என்ன நடந்தது?

சென்னையில் செயல்பட்டுவரும் போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சைக்காகச் சென்ற நபர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

Published:Updated:
போதை மறுவாழ்வு மையத்தில் மர்ம மரணம்

ராயப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி ராஜி. இவர் குடிபோதைக்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது. அதன் காரணமாக ராஜியை, அவரின் குடும்ப உறுப்பினர்கள் சென்னை ராயப்பேட்டைப் பகுதியில் செயல்பட்டுவரும் தனியாருக்குச் சொந்தமான போதை மறுவாழ்வு மையத்தில் சேர்த்துள்ளனர். இதற்கு முன்பாகவும் சிலமுறை அந்த மையத்தில் ராஜி அனுமதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், நேற்று அங்கு அனுமதிக்கப்பட்ட சில மணி நேரத்திலேயே ராஜிக்கு அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக அந்த மையத்திலிருந்து அவரின் மனைவிக்கு அழைப்பு வந்துள்ளது.

மறுவாழ்வு மையம்
மறுவாழ்வு மையம்

தகவலறிந்து ராஜியின் மனைவி, மகள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் மருத்துவமனைக்குச் சென்று பார்த்திருக்கின்றார்கள். அப்போதுதான் ராஜி உயிரிழந்தது அவர்களுக்குத் தெரியவந்தது. அதையடுத்து, ராஜி மரணத்தில் சந்தேகமடைந்த அவரின் மனைவி, இந்த விவகாரம் குறித்து அண்ணாசாலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவர் புகாரின் அடிப்படையில் ராஜியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக போலீஸார் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மரணம் குறித்து அந்தத் தனியார் மறுவாழ்வு மையத்தின் ஊழியர்களிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். மேலும், அந்த மறுவாழ்வு மையத்தில் துணை ஆணையர் பகலவன் தலைமையிலான குழு ஆய்வு நடத்தியது. அப்போது அங்கு உடைந்த நிலையில் பிரம்பு கைப்பற்றப்பட்டதாகத் தகவல் வெளியானது. ராஜியின் உடலிலும் பிரம்பால் அடித்த தடம் இருப்பதாகவும், வாயில் பல் அனைத்தும் உடைந்திருப்பதாகவும் அவரின் உறவினர்கள் குற்றம்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

கைப்பற்றப்பட்ட பிரம்பு
கைப்பற்றப்பட்ட பிரம்பு

இந்த நிலையில், இதைக் கொலை வழக்காகப் பதிவுசெய்த காவல்துறையினர், அந்த மையத்தைச் சேர்ந்த யுவராஜ், சதிஷ் உள்ளிட்ட ஐந்து பேரைக் கைதுசெய்துள்ளனர். மேலும், தலைமறைவாக இருக்கும் அந்த மையத்தின் உரிமையாளர் கார்த்திகேயனை காவல்துறையினர் தீவிரமாகத் தேடிவருகின்றார்கள். அந்த மையத்தில் சிகிச்சையிலிருந்த 12 பேரை கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையில் உள்ள போதை மறுவாழ்வு மையத்துக்கு மாற்றியுள்ளனர். அதைத் தொடர்ந்து, அந்த மறுவாழ்வு மையத்துக்கு சீல் வைக்கச் சொல்லி காவல்துறை சார்பில் வருவாய்த்துறைக்குக் கடிதம் அனுப்பப்பட்டிருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism