Published:Updated:

சென்னை: மதுபோதையில் வாய்த்தகராறு; கட்டையால் அடித்துக் கொல்லப்பட்ட வடமாநில இளைஞர் - நடந்தது என்ன?

க்ரைம் - கொலை

சென்னையில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறு காரணமாக வடமாநில இளைஞர் ஒருவர் கட்டையால் அடித்துக் கொலைசெய்யப்பட்டிருக்கிறார்.

சென்னை: மதுபோதையில் வாய்த்தகராறு; கட்டையால் அடித்துக் கொல்லப்பட்ட வடமாநில இளைஞர் - நடந்தது என்ன?

சென்னையில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறு காரணமாக வடமாநில இளைஞர் ஒருவர் கட்டையால் அடித்துக் கொலைசெய்யப்பட்டிருக்கிறார்.

Published:Updated:
க்ரைம் - கொலை

சென்னை பள்ளிக்கரணைப் பகுதியிலுள்ள மணிமேகலை இரண்டாவது தெருவில் புதிதாக ஒரு கட்டடம் கட்டப்பட்டுவருகிறது. இந்தக் கட்டடத்தின் கட்டுமானப் பணிகளை வடமாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் அங்கேயே தங்கிச் செய்துவருகிறார்கள். இந்த நிலையில், கடந்த ஞாயிறு இரவு பள்ளிக்கரணையில் கட்டடப் பணி செய்துவரும் வடமாநில இளைஞர் மகேஷ் என்பவர், மேடவாக்கத்தில் கட்டுமானப் பணி செய்யும் அமர், பிஷால் இருவரையும் பள்ளிக்கரணைக்கு அழைத்திருக்கிறார்.

கைது செய்யப்பட்டவர்கள்
கைது செய்யப்பட்டவர்கள்
Durairaj G

மூவரும் ஒன்றாக அமர்ந்து மது அருந்தியதாகக் கூறப்படுகிறது. அப்போது, அவர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டிருக்கிறது. ஒருகட்டத்தில் ஒருவர் மாற்றி மற்றொருவர் தாக்கிக்கொண்டிருக்கிறார்கள். இதனால் ஆத்திரமடைந்த அமர், பிஷால், மேடவாக்கத்திலிருந்து ஆட்களை வரவழைத்துள்ளனர். இவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து மகேஷைக் கடுமையாகத் தாக்கியுள்ளனர். கட்டையால் தலையில் தாக்கப்பட்டதில் மகேஷுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கைது செய்யப்பட்டவர்கள்
கைது செய்யப்பட்டவர்கள்

இந்தச் சம்பவம் குறித்துத் தகவலறிந்து வந்த பள்ளிக்கரணை காவல்துறையினர் மகேஷை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மகேஷ் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், மோண்டா பாஸ்கர் (18), டிப்பாஸ்கர் (18), பிஷால் (20), ரேகல் ஹால்டர் (20), அமர் பாஸ்கர் (21), மஞ்சித் (22), கான் (32) ஆகிய ஏழு பேரைக் கைதுசெய்து விசாரணை நடத்திவருகிறார்கள்.