Published:Updated:

ரியல் எஸ்டேட்; போலி ஆவணங்கள் - ஓய்வுபெற்ற கல்லூரி பேராசிரியரிடம் ரூ.70 லட்சம் ஏமாற்றியவர் கைது!

காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், விழுப்புரம்
News
காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், விழுப்புரம்

20 ஏக்கர் நிலம் விற்பனைக்கு இருப்பதாக கூறி, ஓய்வு பெற்ற பேராசிரியரிடம் லட்சங்களை ஏமாற்றிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டத்துக்கு உட்பட்ட பெரிய அகரம் பகுதியைச் சேர்ந்தவர் மோகன்தாஸ். தற்போது செங்கல்பட்டில் வசித்து வரும் இவர், செங்கல்பட்டு அரசினர் கலைக் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். கடந்த 2006-ம் ஆண்டு செஞ்சியில் உள்ள ஒரு உணவகத்தில் தனது நண்பர்களுடன் நிலம் சம்பந்தமாக பேசிக் கொண்டிருந்தாராம் மோகன்தாஸ். அப்போது, 'தான் ரியல் எஸ்டேட் தொழில் செய்வதாக' கூறி அவரிடம் அறிமுகமாகியிருக்கிறார் திண்டிவனம் அடுத்த சாரம் பகுதியைச் சேர்ந்த பாலு என்ற நபர். அந்த நபர் தான் கடலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் மகளிர் கல்லூரியின் முதல்வரின் உறவினர் எனவும் அறிமுகம் செய்து கொண்டாராம்.

கைது செய்யப்பட்ட பாலு
கைது செய்யப்பட்ட பாலு

அதன் பின்னர், ``அச்சிறுப்பாக்கம் அடுத்த விளாங்காடு பகுதியில் 20 ஏக்கர் நிலம் விற்பனைக்கு உள்ளது. 1 ஏக்கர் நிலத்தின் விலை 3 லட்சம். பத்திரப்பதிவுக்கு 10 லட்சம் ரூபாய் செலவாகும், மொத்தம் 70 லட்சம் ரூபாய் ஆகும். தேவைப்பட்டால் நீங்கள் வாங்கிக் கொள்ளலாம்" என பாலு கூறினாராம். அதை நம்பிய மோகன்தாஸ், 20.06.2006 அன்று 10,00,000 ரூபாயை பாலுவிடம் கொடுத்தாராம். அதன் பின்னர், 7 தவணைகளாக கடந்த 2013-ம் ஆண்டு வரை மொத்தம் 60,00,000 ரூபாயை கொடுத்தாராம். பாலுவிடம், இப்படியாக மொத்தம் 70 லட்சம் ரூபாயை மோகன்தாஸ் கொடுத்ததாக கூறப்படுகிறது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

``என்னிடம் பணத்தை பெற்றுக் கொண்ட பாலு, போலி ஆவணங்களை காட்டி ஏமாற்றி பணமோசடி செய்துவிட்டார்" என கடந்த 2020-ம் ஆண்டு மோகன்தாஸ் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக நான்கு பிரிவுகளின் கீழ் (420, 468, 471, 506(i)) வழக்கு பதிவு செய்துள்ளனர் விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார்.

கைது
கைது

குற்றம்சாட்டப்பட்டவர் கைது செய்யப்படாமல் அந்த புகார் நிலுவையில் இருந்த வந்த நிலையில், விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா உத்தரவின்பேரில் தனிப்படை அமைத்து நேற்று (08.01.2022) பாலுவை பிடித்துள்ளனர் விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார். அதையடுத்து, செஞ்சி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் பாலுவை ஆஜர்படுத்தி விழுப்புரம் மாவட்ட சிறையில் (வேடம்பட்டு) அடைத்துள்ளனர்.