Published:Updated:

சென்னை: வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட வியாபாரி - சொத்துப் பிரச்னையால் நடந்த பயங்கரம்

பொன்ராஜ். அற்புதராஜ்

சென்னையில் உறவினர்களுக்கு இடையே ஏற்பட்ட சொத்துப் பிரச்னை காரணமாக வியாபாரி ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்.

சென்னை: வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட வியாபாரி - சொத்துப் பிரச்னையால் நடந்த பயங்கரம்

சென்னையில் உறவினர்களுக்கு இடையே ஏற்பட்ட சொத்துப் பிரச்னை காரணமாக வியாபாரி ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்.

Published:Updated:
பொன்ராஜ். அற்புதராஜ்

சென்னை ராஜா அண்ணாமலைபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பொன்ராஜ். அவர் இந்தப் பகுதியில் காய்கறி வியாபாரம் செய்துவருகிறார். பொன்ராஜின் உறவினரான அற்புதராஜ் சென்னை, தேனாம்பேட்டை பகுதியில் உணவகம் நடத்திவருகிறார். இவர்கள் இருவருக்கும் நீண்ட நாள்களாகவே சொத்துப் பிரச்னை இருந்துவந்திருக்கிறது. உறவினர்களான இவர்கள் சமீபத்தில்தான் சொந்த ஊருக்குச் சென்று வந்துள்ளனர்.

அற்புதராஜ், பொன்ராஜ்
அற்புதராஜ், பொன்ராஜ்

இரண்டு தினங்களுக்கு முன்பு பொன்ராஜ், சென்னைக்குத் திரும்பியிருக்கும் நிலையில், அற்புதராஜும் சென்னைக்கு வந்திருக்கிறார். வந்தவர், பொன்ராஜின் வீட்டுக்குச் சென்று சொத்துப் பிரச்னை விவகாரம் குறித்துப் பேசியிருக்கிறார். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் அதிகரிக்க, ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த அற்புதராஜ், தான் மறைந்துவைத்திருந்த கத்தியை எடுத்து பொன்ராஜை சரமாரியாக வெட்டியிருக்கிறார்.

இதில் படுகாயமடைந்த பொன்ராஜ் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். பொன்ராஜைக் கொலை செய்துவிட்டதாகத் தனது உறவினருக்கு கால் செய்து நடந்த சம்பவத்தைச் சொல்லிவிட்டு தனது செல்போனை ஸ்விட்ச் ஆஃப் செய்திருக்கிறார் அற்புதராஜ். இந்தத் தகவலறிந்த உறவினர்கள், இது குறித்து அபிராமபுரம் பகுதி போலீஸாருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவம் குறித்து அறிந்த போலீஸார், பொன்ராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

சிசிடிவி காட்சிகள்
சிசிடிவி காட்சிகள்

இந்தக் கொலை தொடர்பாக, வழக்கு பதிவுசெய்த போலீஸார் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். இந்தக் கொலையில் மேலும் இரண்டு பேருக்குத் தொடர்பு இருப்பது அந்தப் பகுதியில் கிடைத்த சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் தெரியவந்திருக்கிறது. தலைமறைவாக இருக்கும் அற்புதராஜ் உள்ளிட்ட கொலையாளிகளை இரண்டு தனிப்படை போலீஸார்தேடிவந்தனர். இந்நிலையில், அற்புதராஜை போலீஸார் கைது செய்துள்ளனர். மேலும், கொலையில் தொடர்புடைய இருவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். சொத்துக்காகச் சொந்தக்காரர் ஒருவரே வியாபாரியை வெட்டிப் படுகொலை செய்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.