Published:Updated:

நடத்தையில் சந்தேகம்; மனைவியை அரிவாளால் வெட்டிக் கொன்ற கணவர்... பள்ளி ஆசிரியைக்கு நேர்ந்த துயரம்!

கொலை நடந்த இடம்

நாமக்கல் தனியார் பள்ளியில் பணிபுரிந்துவரும் தன்னுடைய மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்ட கணவர் ஒருவர், அந்தப் பெண்ணை துள்ளத்துடிக்க வெட்டிக் கொலைசெய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

நடத்தையில் சந்தேகம்; மனைவியை அரிவாளால் வெட்டிக் கொன்ற கணவர்... பள்ளி ஆசிரியைக்கு நேர்ந்த துயரம்!

நாமக்கல் தனியார் பள்ளியில் பணிபுரிந்துவரும் தன்னுடைய மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்ட கணவர் ஒருவர், அந்தப் பெண்ணை துள்ளத்துடிக்க வெட்டிக் கொலைசெய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:
கொலை நடந்த இடம்

நாமக்கல் மாவட்டம், தூசூரைச் சேர்ந்தவர் ராஜா (42). இவர், டிராக்டர் டிரைவராக வேலை செய்துவருகிறார். இவருடைய மனைவி பிரமிளா (32). பட்டப்படிப்பு படித்திருக்கும் இவர், நாமக்கல்லிலுள்ள தனியார்ப் பள்ளி ஒன்றில் தமிழ் ஆசிரியையாக வேலை செய்துவந்தார். இவர்களுக்கு, ஒரு மகன், ஒரு மகள் என இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்த நிலையில், தன் மனைவி பிரமிளா நடத்தையில் ஏற்பட்ட சந்தேகம் காரணமாக கணவர் ராஜா அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்திருக்கிறார். இந்தச் சூழலில், இருவருக்குமிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டிருக்கிறது.

இதில் ஆத்திரமடைந்த ராஜா, வீட்டிலிருந்த அரிவாளால் மனைவி பிரமிளாவை சரமாரியாக வெட்டியிருக்கிறார். இதில், அவரின் மனைவி பிரமிளா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் குறித்து கேள்விப்பட்ட காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்துவந்து விசாரணை மேற்கொண்டனர்.

கொலை செய்யப்பட்ட பிரமிளா
கொலை செய்யப்பட்ட பிரமிளா

இதனிடையே, வெட்டிக் கொலை செய்யப்பட்ட பிரமிளாவின் கணவர் ராஜா, நாமக்கல் காவல் நிலையத்தில் சரணடைந்தார். அவரை போலீஸார் கைதுசெய்து, தொடர் விசாரணை நடத்திவருகின்றனர்.

போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில், ``ராஜா சொந்தமாக டிராக்டர் வைத்து தொழில் செய்துவந்திருக்கிறார். சமீபத்தில் புதிதாக வீடு கட்டியதில் கடன் பெருகிவிட்டதால், டிராக்டரை விற்பனை செய்துவிட்டு கூலிவேலைக்குச் சென்றுவிட்டார் என கூறப்படுகிறது. மேலும், பிரமிளா பட்டப்படிப்பு முடித்துள்ள நிலையில், ராஜா படிக்கவில்லை என்பதால், அவருக்கு தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டதாகத் தெரிகிறது. மேலும், குடிபோதைக்கு அடிமையான ராஜா, தன்னுடைய மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்தாகவும் கூறப்படுகிறது. இதனால், தன் மனைவி பிரமிளாவை ராஜா கொலை செய்திருக்கிறார்'' என்று தெரியவந்திருக்கிறது.