Published:Updated:

மரவள்ளித் தோட்டத்தில் கஞ்சா செடி வளர்த்தவர் கைது; கள்ளக்குறிச்சியில் பரபரப்பு!

கஞ்சா செடி வளர்த்தவரை கைதுசெய்த காவல்துறை.
கஞ்சா செடி வளர்த்தவரை கைதுசெய்த காவல்துறை.

மரவள்ளிக்கிழங்கு தோட்டத்தில் கஞ்சா வளர்த்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கல்வராயன் மலைப்பகுதியிலுள்ள மூலக்காடை அடுத்த ஆணைமடுவு பகுதியைச் சேர்ந்த கண்ணன் என்பவர் கடந்த ஜூன் மாதம், 24-ம் தேதி மரவள்ளிக் கிழங்கு தோட்டத்தில் கஞ்சா செடி வளர்த்ததால் கைதுசெய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து இன்று (15.07.2021), கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரத்தை அடுத்த தியாகராஜபுரத்தில் பொன்னுச்சாமி என்பவரின் மகன் முருகனின் நிலத்தில் மரவள்ளிக் கிழங்கு பயிர்களுக்கு இடையே கஞ்சா செடி வளர்க்கப்படுவதாக, காவல்துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்திருக்கிறது. இந்தத் தகவலின் பேரில், காவல் ஆய்வாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் காவல்துறையினர் அங்கு சென்றிருக்கிறார்கள். தோட்டத்தின் உள்ளே இருந்த ஏழு கஞ்சா செடிகளைப் பறித்த காவல்துறையினர், அந்த நிலத்தில் தற்போது விவசாயம் செய்துவரும் அய்யாக்கண்ணு (58) என்பவரைக் கைதுசெய்துள்ளனர்.

கல்வராயன் மலை: மரவள்ளிக்கிழங்கு தோட்டத்தில் 37 கஞ்சாச் செடிகள்! - ரகசியத் தகவலால் ஒருவர் கைது
கஞ்சா செடிகளை பறிமுதல் செய்யும் காவல்துறையினர்.
கஞ்சா செடிகளை பறிமுதல் செய்யும் காவல்துறையினர்.

``முருகனின் நிலத்தில் விவசாயம் செய்துவரும் அய்யாக்கண்ணு, அங்கேயே தங்கி விவசாயம் செய்துவருகிறார். இந்தநிலையில், அவர் மரவள்ளிக்கிழங்குத் தோட்டத்தின் இடையே கஞ்சா செடிகளை வளர்த்துவந்திருக்கிறார். எங்களுக்குக் கிடைத்த தகவலின் பேரில் அங்கு சென்று ஏழு கஞ்சா செடிகளை பறிமுதல் செய்து, அய்யாக்கண்ணுவைக் கைதுசெய்திருக்கிறோம். அவரைக் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று, இது தொடர்பாக மேலும் விசாரித்துவருகிறோம்" என்கின்றனர் காவல்துறை அதிகாரிகள்.

அடுத்த கட்டுரைக்கு