Published:Updated:

தேனி: குப்பை கொட்டியதில் இரு தரப்பினரிடையே மோதல்... ஒருவர் பலி - நடந்தது என்ன?!

கொலை

குப்பை கொட்டுவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

தேனி: குப்பை கொட்டியதில் இரு தரப்பினரிடையே மோதல்... ஒருவர் பலி - நடந்தது என்ன?!

குப்பை கொட்டுவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:
கொலை

​தேனி மாவட்டம், போடி​ அருகே​ பூதிப்புரம் ​​கோட்டைமேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (42). இவர் வீட்டருகே அதே பகுதியைச் சேர்ந்த ஊர்க்காலன் என்பவர் குப்பை கொட்டியிருக்கிறார். அப்போது ராதாகிருஷ்ணன், `​ஏன்​ இங்கே குப்பை​ கொட்டுறீ​ங்க... வேற எங்காவது போட்டு தீ வைத்துவிட வேண்டியதுதானே' எனச் சொல்லி ​​ஊர்க்காலனைச் சத்தம் போட்டிருக்கிறார். ​​இ​தைப் பார்த்த ஊர்க்காலன்​ தரப்பினர் ராதாகிருஷ்ணனைக் கண்டித்திருக்கின்றனர். இதையடுத்து ராதாகிருஷ்ணன் தரப்பினரும் அங்கு வர,​ இரு தரப்பினருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

தாக்கிய கட்டை
தாக்கிய கட்டை

​இந்த வாக்குவாதம் சிறிது நேரத்தில் முற்றிப்போய் கைகலப்பாக மாறியதில், இரு​ தரப்பைச் சேர்ந்தவர்களும் மோதிக்கொண்டனர். அப்போது ஆத்திரமடைந்த ராதாகிருஷ்ணன் அங்கிருந்த மரக்கட்டையை எடுத்து மகேஸ்வரகுமா​ர் என்பவரை​​த்​ தாக்கியிருக்கிறார். தடுக்க வந்த அவர் சகோதரர் நாகராஜ்மீது உரல்​ ​கல்லைப் போட்டிருக்கிறார். இதில் மகேஸ்வரகுமார் அவர் சகோதரர் நாகராஜ் ஆகியோர் படுகாயமடைந்தனர். மேலும், மகேஸ்வரகுமாரின் மனைவி மாணிக்கவாசுகி, மகள் ஜனனி, சகோதரர் நாகராஜின் மனைவி திலகவதி உறவினர் ராமலிங்கம் ஆகியோர் காயமடைந்தனர்.

​அவர்களை மீட்ட அக்கம் பக்கத்தினர் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.​ ​அதில் மகேஸ்வரகுமார் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியிருக்கின்றனர். மற்ற அனைவரும் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இதற்கிடையே மகேஸ்வரகுமார் மரணத்துக்குக் காரணமான குற்றவாளிகள் அனைவ​ரையும்​ கைதுசெய்யக் கோரி அவர் உறவினர்கள் பூதிப்புரம் - தேனி சாலையில் ​நேற்று இரவு ​சுமார் மூன்று​ ​மணி நேரத்துக்கும் மேலாக மறியலில் ஈடுபட்டனர்.

காயமடைந்தவர்கள்
காயமடைந்தவர்கள்

​இதற்கிடையே முக்கியக் குற்றவாளியான ராதாகிருஷ்ணனை காவல்துறையினர் கைதுசெய்ததாகவும், தொடர்புடைய மற்ற குற்றவாளிகளை விரைவில் பிடித்துவிடுவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் தேனி காவல் துணைக் கண்காணிப்பாளர் பால்சுதர் தெரிவித்தார். அதை ஏற்று மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனர். இருந்தபோதிலும் பூதிப்புரம் பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவியதால், அங்கு பாதுகாப்புப் பணியில் காவல்துறையினர் அதிக அளவில் குவிக்கப்பட்​டிருந்த​னர்.

​இது தொடர்பாக இறந்தவரின் மகள் ஜனனி அளித்த புகாரில், ராதாகிருஷ்ணன் (42), பெரியகருப்பன் (67), செல்வம், தினேஷ், நல்லுசாமி, சதீஷ் ஆகிய ஆறு​ ​பேர்மீது கொலைக் குற்றம் உட்பட ஆறு​ ​பிரிவுகளின் கீழ் பழனிச்செட்டிபட்டி காவல்துறையினர் வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டனர். அதில் வழக்கின் முதல் குற்றவாளியான ராதாகிருஷ்ணன், இரண்டாவது குற்றவாளி பெரியகருப்பன், ஐந்தாவது குற்றவாளி நல்லுசாமி ஆகிய மூன்று பேரைப் பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

கைது
கைது

​இன்று காலை ​வழக்கில் தொடர்புடைய அனைவரையும் கைதுசெய்யும் வரை இறந்தவரின் சடலத்தை வாங்கப்போவதில்லை எனக் கூறி அவர் உறவினர்கள் இன்று பூதிப்புரம் - தேனி சாலையில் மறியலில் ஈடுபட முயன்றனர். அவர்களை தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ் டோங்ரே தலைமையிலான காவல்துறையினர் தடுத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தலைமறைவாக உள்ள குற்றவாளிகளைத் தேடிவருவதாகவும், விரைவில் பிடித்துவிடுவதாகவும் தெரிவித்ததை அடுத்து கலைந்து சென்றனர்.