Published:Updated:

பாமக மாவட்ட நிர்வாகி வெட்டி படுகொலை... விழுப்புரத்தில் பயங்கரம் - இருவர் கைது!

வெட்டி கொலை ( மாதிரி படம் )

நள்ளிரவில் பாமக நிர்வாகி ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் விழுப்புரம் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாமக மாவட்ட நிர்வாகி வெட்டி படுகொலை... விழுப்புரத்தில் பயங்கரம் - இருவர் கைது!

நள்ளிரவில் பாமக நிர்வாகி ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் விழுப்புரம் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Published:Updated:
வெட்டி கொலை ( மாதிரி படம் )

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே உள்ள கப்பியாம்புலியூர் கிராமத்தை சேர்ந்தவர் ஆதித்யன். இவர் விழுப்புரம் வடக்கு மாவட்ட பா.ம.க துணை செயலாளராக இருந்து வந்துள்ளார். நேற்று இரவு வீட்டிலிருந்து வெளியே சென்றவர், வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லையாம். இந்நிலையில், இவர் அதே பகுதியில் உள்ள வாதானூர் வாய்க்கால் அருகே கழுத்து, கை வெட்டப்பட்ட நிலையில் உயிரிழந்த கிடந்துள்ளார். இதுகுறித்து தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற விக்கிரவாண்டி போலீஸார், ஆதித்யனின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்விற்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

உயிரிழந்த ஆதித்யன்
உயிரிழந்த ஆதித்யன்

மேலும், சம்பவ இடத்திற்கு விரைந்த விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா இந்த கொலை சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டதோடு, விழுப்புரம் டி.எஸ்.பி பார்த்திபன் தலைமையில் 4 தனிப்படைகளை அமைத்து குற்றவாளிகளை பிடிக்க உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் குற்றவாளிகளை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. முதற்கட்ட விசாரணையில், ஆதித்யனுக்கும் அவரின்  உறவினர் குடும்பத்தாருக்கும் இடையே மண் பிரச்னை இருந்ததாகவும், அந்த முன் விரோதத்தின் அடிப்படையில் இந்த சம்பவம் நடைபெற்று இருக்கலாம் என கூறப்பட்டது. உயிரிழந்த ஆதித்தனின் மனைவி சாந்தி, விக்கிரவாண்டி போலீஸாரிடம் கொடுத்த புகாரின் பேரில் 5 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்நிலையில், தற்போது இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய இரண்டு பேரை கைது செய்துள்ள போலீஸார், அவர்களிடம் விசாரித்து வருகின்றனர்.