Published:Updated:

நெல்லை: செல்போன் பயன்படுத்தியதைக் கண்டித்த ஆசிரியர்கள் - பள்ளி மாணவன் எடுத்த விபரீத முடிவு

தற்கொலை ( சித்திரிப்புப் படம் )

தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்கள் தற்கொலைச் சம்பவங்கள் அதிகரித்துவருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே நெல்லையில் செல்போன் பயன்படுத்தியதை ஆசிரியர்கள் கண்டித்ததால் மாணவர் விபரீத முடிவெடுத்த சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலைக்கு எதிரான இலவச ஆலோசனை மையங்கள் :

தற்கொலைத் தடுப்பு மையம் - 104

சிநேகா தற்கொலைத் தடுப்பு மையம் - 044 - 24640050, 28352345.

பெண்களுக்கான தீர்வு மையம் - 1091

நெல்லை மாவட்டம், மேலப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் அந்த மாணவர். 17 வயதான அவர் பாளையங்கோட்டையிலுள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்துவந்தார் அவரின் தந்தை ஜெகதீஷ் வெளிநாட்டில் வேலை பார்த்துவருகிறார்.

செல்போன் பறிக்கப்பட்டதால் உயிரிழந்த மாணவர்
செல்போன் பறிக்கப்பட்டதால் உயிரிழந்த மாணவர்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மாணவர் அதிகமாக செல்போன் பயன்படுத்திவந்ததால் பாடங்களில் கவனம் இல்லாமல் இருந்திருக்கிறார் எனக் கூறப்படுகிறது. பள்ளி நேரத்தில் அவரிடம் செல்போன் இருந்ததைப் பார்த்த ஆசிரியர்கள் அதைக் கண்டித்துள்ளனர். அத்துடன், அவரின் தாயை அழைத்து வருமாறு தெரிவித்ததுடன், அவரிடம்அதிகமாக செல்போன் பயன்படுத்துவது பற்றி எச்சரித்திருக்கிறார்கள். அதனால் மாணவரிடம் இருந்த செல்போனை அவரின் தாய் பறித்ததாகத் தெரிகிறது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்த நிலையில், இன்று காலை அந்த மாணவர் வழக்கம்போல் பள்ளிக்குச் செல்வதாக தனது தாயிடம் தெரிவித்துவிட்டு வெளியே சென்றிருக்கிறார். செல்போன் இல்லாததால் மன உளைச்சலில் இருந்ததாகச் சொல்லப்படும் மாணவர், பள்ளிக்குச் செல்லாமல் மருதம்நகர் ரயில்வே கேட் அருகே அந்த வழியாக வந்த ரயில் முன்பாக பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்.

தண்டவாளத்தில் கிடக்கும் உடல்
தண்டவாளத்தில் கிடக்கும் உடல்

ரயில்வே தண்டவாளத்தில் சிறுவனின் உடல் கிடப்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்திருக்கிறது. அதைத் தொடர்ந்து முன்னீர்பள்ளம் காவல்துறையினர் மற்றும் ரயில்வே போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள்.

சிறுவனின் மரணத்துக்கு செல்போன் காரணமா அல்லது வேறு காரணம் இருக்கிறதா என்பது பற்றி போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். தமிழ்நாட்டில் அடுத்தடுத்து பள்ளி மாணவ, மாணவிகளின் தற்கொலைச் சம்பவம் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது.

தற்கொலைக்கு எதிரான இலவச ஆலோசனை மையங்கள் :

தற்கொலைத் தடுப்பு மையம் - 104

சிநேகா தற்கொலைத் தடுப்பு மையம் - 044 - 24640050, 28352345.

பெண்களுக்கான தீர்வு மையம் - 1091