Published:Updated:

திருமணம் தாண்டிய உறவு; சிக்கன் கிரேவியில் விஷம்! - குழந்தையுடன் தற்கொலை செய்த தாய்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையம்
கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையம்

தூத்துக்குடியில் சிக்கன் கிரேவி சாப்பிட்டுவிட்டு, குளிர்பானம் குடித்ததால் உயிரிழந்த தாய், மகள் உயிரிழந்த வழக்கில், தாயின் திருமணம் தாண்டிய உறவால் சாப்பாட்டில் விஷம் கலந்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தங்கப்பநகரைச் சேர்ந்தவர் இளங்கோவன். இவர், லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரின் மனைவி கற்பகம். இவர்களுக்கு 7 வயதில் தர்ஷினி என்ற பெண் குழந்தை உள்ளது. கடந்த 12-ம் தேதி, கற்பகம் அப்பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் சிக்கன் கிரேவி வாங்கி, தன் மகளுடன் சாப்பிட்டுள்ளார். நெஞ்செரிச்சல் ஏற்படவே, அருகில் உள்ள பெட்டிக்கடை ஒன்றில் 10 ரூபாய்க்கு குளிர்பானம் வாங்கிக் குடித்திருக்கிறார்.

கற்பகம் - சிறுமி
கற்பகம் - சிறுமி

இதையடுத்து சிறிது நேரத்தில் இருவரும் மயங்கி விழுந்துள்ளனர். இதையடுத்து கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். ஆனால், இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். தாய், மகளின் இறப்பிற்கு சிக்கன் கிரேவி சாப்பிட்ட்து காரணமா? குளிர்பானம் குடித்தது காரணமா? என கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையப் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதற்கிடையில், மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் மாரியப்பன் தலைமையிலான குழுவினர் சிக்கன் கிரேவி கலந்த சாப்பாடு மற்றும் இருவரும் அருந்தி மீதமிருந்த குளிர்பானம் ஆகியவற்றை ஆய்வுக்கூடத்தில் ஆய்வு செய்தனர். ’சிக்கன் கிரேவி சாப்பாட்டில் பூச்சிக்கொல்லி கலந்துள்ளது’ தெரிய வந்தது. இதையடுத்து கற்பகம் பயன்படுத்தி வந்த செல்போன் அழைப்புகளையும், செல்போனையும் ஆய்வு செய்ததில் கற்பகத்தின் வீட்டில் அருகில் உள்ள வீரபெருமாள் என்பவருடன் அடிக்கடி பேசி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

கைது செய்யப்பட்ட வீரபெருமாள்
கைது செய்யப்பட்ட வீரபெருமாள்

அத்துடன், கற்பகத்தின் வாட்ஸ் அப்பில் வீரபெருமாளின் குறுந்தகவல் உரையாடல்களையும் ஆய்வு செய்தனர். இதையடுத்து வீரபெருமாளை போலீஸார் கைது செய்தனர். விசாரணையில், ”நானும் லாரி டிரைவர் என்பதால் இளங்கோவன் வீட்டுக்கு அடிக்கடிப் போவேன். அந்த பழக்கத்தில் கற்பகமும் என்னிடம் நல்லாப் பேசுவா. நாளடைவுல ரெண்டு பேருக்கும் தொடர்பு ஏற்பட்டுச்சு. கொஞ்ச நாளாவே கற்பகம், எங்கிட்டப் போன்லயும் பேசலை. வாட்ஸ் அப் மெசேஜூம் பண்றது இல்ல.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சேலம்: `மீண்டும் அழைத்தேன்; வர மறுத்தார்!' - கொலையில் முடிந்த திருமணம் தாண்டிய உறவு

எங்கிட்ட எப்பவும் போல சகஜமாப் பேசுன்னு எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன். அதுக்கு எந்த பதிலுமே இல்ல. எங்கிட்ட பழகலேன்னா நம்ம தனிமையில எடுத்த போட்டோ, வீடியோவை உன் தம்பி, கணவர் உறவினர்கள்ட காட்டிருவேன் எனச் சொன்னேன். ஆனா, அவள் குழந்தையுடன் தற்கொலை செஞ்சுக்கிட்டா” எனக் கூறியுள்ளார். வீரபெருமாளுடன் தனிமையில் இருந்த புகைப்படங்கள், வீடியோவை உறவினர்களிடம் காட்டிவிட்டால், தனக்கு அவமானம் ஏற்படும் என நினைத்த கற்பகம் தன் மகளுடன் சாப்பாட்டில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்திருக்கலாம் என்கின்றனர் போலீஸார்.

விஷம் கலக்கப்பட்ட சிக்கன் கிரேவி
விஷம் கலக்கப்பட்ட சிக்கன் கிரேவி

இதையடுத்து கைது செய்யப்பட்ட வீரபெருமாளிடம் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணம் தாண்டிய உறவால், 7 வயது மகளுடன் தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு