Published:Updated:

அலுவலத்தில் ரூ.15 கோடி திருட்டு; அனைத்தையும் ஆன்லைன் சூதாட்டத்தில் இழந்த நபரைத் தேடும் போலீஸார்

சித்திரிப்புப் படம்

மும்பையில் தான் பணியாற்றும் அலுவலகத்தில் திருடிய ரூ.15 கோடியை சூதாட்டத்தில் இழந்த வாலிபரை போலீஸார் தேடிவருகின்றனர்.

அலுவலத்தில் ரூ.15 கோடி திருட்டு; அனைத்தையும் ஆன்லைன் சூதாட்டத்தில் இழந்த நபரைத் தேடும் போலீஸார்

மும்பையில் தான் பணியாற்றும் அலுவலகத்தில் திருடிய ரூ.15 கோடியை சூதாட்டத்தில் இழந்த வாலிபரை போலீஸார் தேடிவருகின்றனர்.

Published:Updated:
சித்திரிப்புப் படம்

ஆன்லைன் சூதாட்டத்தில் எத்தனையோ பேர் லட்சக்கணக்கில் பணத்தை இழந்துவிட்டு தற்கொலை வரை சென்றுள்ளனர். மும்பையில் ஒருவர் தான் பணியாற்றிய அலுவலகத்தில் பணத்தைத் திருடி ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார். மும்பை போரிவலியில் செயல்படும் பங்குச் சந்தை வர்த்தகம் மற்றும் ஆலோசனை வழங்கும் நிறுவனத்தில் கடந்த 14 ஆண்டுகளாக வேலை செய்துவந்தவர் கபில் ராமன்லால். இந்த கம்பெனியை சேதன் ஷா என்பவர் தன் சகோதரர் பரேஷ் ஷா என்பவருடன் சேர்ந்து நடத்திவந்தார்.

பரேஷ் ஷாவின் மகன் தீபக் ஷாவும் கம்பெனிச் செயல்பாடுகளில் ஈடுபட ஆரம்பித்தார். தீபக், கம்பெனியின் வங்கிக் கணக்கு விவரங்களை ஆய்வு செய்தபோது ஒரு முறை 30 லட்சமும், மற்றொரு முறை 60 லட்சமும் கபில் வங்கிக் கணக்குக்கு டிரான்ஸ்ஃபர் செய்யப்பட்டிருந்தது. இது குறித்து தீபக் தனது தந்தையிடமும் சித்தப்பாவிடமும் தெரிவித்தார். உடனே வங்கியின் கணக்கை முழுமையாகச் சோதனை செய்தபோது கடந்த 2021-ம் ஆண்டு ஜனவரியிலிருந்து கபில் பணத்தைத் திருடியிருப்பது தெரியவந்தது.

ஆன்லைன் சூதாட்டம்
ஆன்லைன் சூதாட்டம்

உடனே இது குறித்து போலீஸாருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. அதோடு இது குறித்து கபிலிடம் கேட்டதற்கு, அனைத்துப் பணத்தையும் ஆன்லைன் சூதாட்டத்தில் இழந்துவிட்டதாகத் தெரிவித்தார். அதோடு உடனே தலைமறைவாகிவிட்டார். போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரித்துவருகின்றனர். கபிலின் வங்கிக் கணக்கை ஆய்வு செய்தபோது வெறும் 16 ஆயிரம் மட்டுமே இருந்தது. அதே சமயம் கபில் தான் வேலை செய்த கம்பெனியிலிருந்து 15.37 கோடியைத் திருடியிருப்பது தெரியவந்திருக்கிறது. அனைத்துப் பணத்தையும் அவர் சூதாட்டத்தில் இழந்திருப்பது விசாரணையில் தெரியவந்திருக்கிறது. திருடிய பணத்தில் சூதாட்டத்தில் ஈடுபட்ட நபரை போலீஸார் தேடிவருகின்றனர்.