Published:Updated:

இன்ஸ்டாகிராம் நண்பர் சொன்ன பணம், நகை பார்சல்... ரூ.15 லட்சத்தை இழந்த மும்பை பெண் - நடந்தது என்ன?!

சித்திரிப்புப் படம்

இன்ஸ்டாகிராம் நண்பர் அனுப்பிய நகை மற்றும் பணத்துக்காக மும்பை பெண் ரூ.15 லட்சத்தை இழந்திருக்கிறார். நடந்தது என்ன?

இன்ஸ்டாகிராம் நண்பர் சொன்ன பணம், நகை பார்சல்... ரூ.15 லட்சத்தை இழந்த மும்பை பெண் - நடந்தது என்ன?!

இன்ஸ்டாகிராம் நண்பர் அனுப்பிய நகை மற்றும் பணத்துக்காக மும்பை பெண் ரூ.15 லட்சத்தை இழந்திருக்கிறார். நடந்தது என்ன?

Published:Updated:
சித்திரிப்புப் படம்

ஆன்லைன் மோசடிகள் சமீபகாலமாக அதிகரித்துள்ளன. சோஷியல் மீடியாக்களில் பழகும் நண்பர்களை ஏமாற்றிப் பணம் பறிக்கும் சம்பவங்கள் அதிக அளவில் நடந்துவருகின்றன. எத்தனையோ மோசடிகள் நடந்தாலும் மக்களிடம் அது பற்றிய விழிப்புணர்வு இல்லாமல்தான் இருக்கிறது. மும்பை அந்தேரி மரோல் பகுதியைச் சேர்ந்த ரக்‌ஷனா (24) என்ற பெண்ணுக்கு இன்ஸ்டாகிராமில் ஒருவர் நட்பு கோரிக்கை அனுப்பினார். அதில் தான் ஃபுளோரிடாவை சேர்ந்தவர் என்றும், தற்போது சிரியாவில் டாக்டராகப் பணியாற்றுவதாகவும் தெரிவித்தார். லேப் டெக்னீஷியனாக வேலை பார்க்கும் அந்தப் பெண்ணும் உடனே அந்த நபரின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டார். இருவரும் ஆன்லைனில் உரையாடிக்கொண்டனர். ஒரு கட்டத்தில் தனது சேமிப்புகள் அனைத்தும் ஃபுளோரிடாவில் இருப்பதாகவும், தனக்கு வேறு உறவுகள் இல்லாததால் அவை பாதுகாப்பற்ற முறையில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இன்ஸ்டாகிராம் நண்பர் சொன்ன பணம், நகை பார்சல்... ரூ.15 லட்சத்தை இழந்த மும்பை பெண் - நடந்தது என்ன?!

அதோடு `அவற்றை உங்களுக்கு அனுப்பி பாதுகாப்பாக வைத்திருக்க விரும்புவதாக’ அந்த நபர் ரக்‌ஷனாவிடம் தெரிவித்தார். உடனே ரக்‌ஷனாவும் தன்னிடம் அனுப்பிவைத்தால் பாதுகாப்பாக வைத்திருப்பதாகத் தெரிவித்தார். இதையடுத்து கடந்த மே 5-ம் தேதி ரக்‌ஷனாவிடம் பணம் மற்றும் நகைகள் இருக்கும் பார்சலை அனுப்பியிருப்பதாகத் தெரிவித்தார். அடுத்த சில நாள்களில் பார்சல் டெல்லிக்கு வந்திருப்பதாகவும், அதை விடுவிக்க பல்வேறு வகையான கட்டணங்களைக் கட்ட வேண்டும் என்று கூறி மே 6-ம் தேதியில் இருந்து ஜூலை 17-ம் தேதி வரை மர்ம நபர் ரூ.15 லட்சம் வரை ரக்‌ஷனாவிடமிருந்து வசூலித்துவிட்டார்.

ஆனாலும் ரக்‌ஷனாவுக்கு பார்சல் வரவில்லை. மோசடிக்காரர்கள் மேலும் 10 லட்சம் கேட்டனர். அதன் பிறகுதான் ரக்‌ஷனாவுக்கு சந்தேகம் வந்தது. உடனே இது குறித்து அவர் போலீஸில் புகார் செய்தார். போலீஸார் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின்கீழ் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர்.