Published:Updated:

மிதந்து வந்த மர்ம படகு... உள்ளே AK 47 ரக துப்பாக்கிகள், வெடி மருந்து - மும்பையில் பரபரப்பு!

AK 47 ரக துப்பாக்கிகள், வெடி மருந்து

மும்பை அருகே ஆயுதங்களுடன் மர்ம படகு ஒன்று மிதந்து வந்தது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

மிதந்து வந்த மர்ம படகு... உள்ளே AK 47 ரக துப்பாக்கிகள், வெடி மருந்து - மும்பையில் பரபரப்பு!

மும்பை அருகே ஆயுதங்களுடன் மர்ம படகு ஒன்று மிதந்து வந்தது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:
AK 47 ரக துப்பாக்கிகள், வெடி மருந்து

மகாராஷ்டிராவின் கொங்கன் பகுதியில் உள்ள ராய்கட் மாவட்டம், ஹரிஹரேஷ்வர் கடற்கரையில் நேற்று காலை படகு ஒன்று மர்மமான முறையில் ஆட்கள் இல்லாமல் மிதந்து வந்தது. இது குறித்து மீனவர்கள் உள்ளூர் போலீஸார் மற்றும் கடலோர பாதுகாப்பு படையினருக்குத் தகவல் கொடுத்தனர். உடனே போலீஸாரும், கடலோர பாதுகாப்பு படையினரும் கடலில் மிதந்துவந்த படகை மீட்டு சோதித்தனர். அதில் 3 ஏகே 47 ரக துப்பாக்கிகள், தோட்டாக்கள் மற்றும் 10 பாக்ஸ்களில் வெடிமருந்துகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு... பறிமுதல் செய்யப்பட்டது. துப்பாக்கிகள் தனித்தனி பாகங்களாக பெட்டி ஒன்றில் வைக்கப்பட்டிருந்தது.

பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்கள்
பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்கள்

மகாராஷ்டிராவில் இன்றும், நாளையும் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. அடுத்த பத்து நாள்களில் கணபதி விழா கொண்டாடப்படுகிறது. இத்தகைய சூழ்நிலையில் கடலில் மர்ம படகில் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது போலீஸாரை அதிர்ச்சியடைய செய்திருக்கிறது. ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டது தொடர்பாக சிறப்பு விசாரணை நடத்தப்படவேண்டும் என்று ராய்கட் எம்.எல்.ஏ அதிதி தட்காரே தெரிவித்திருக்கிறார்.

மிதந்து வந்தபடகு
மிதந்து வந்தபடகு

விழாக்காலத்தில் படகில் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது பாதுகாப்பு குளறுபடியாக கருதுவதாக எம்.எல்.ஏ தெரிவித்தார். மும்பையிலிருந்து 190 கிலோமீட்டர் தொலைவில் நடந்த இந்தச் சம்பவம் மும்பைக்கு ஏற்பட்ட பாதுகாப்பு அச்சுறுத்தலாகவும் பார்க்கப்படுகிறது. இதையடுத்து மும்பை மற்றும் அதனைச் சுற்றியிருக்கும் பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கிறது. அதோடு கடலோர பாதுகாப்பு படையினரும் கடலில் ரோந்துப் பணியை தீவிரப்படுத்தியிருக்கின்றனர்.

தேவேந்திர பட்நவிஸ்
தேவேந்திர பட்நவிஸ்

இது குறித்துப் பேசிய துணை முதல்வர் தேவேந்திர பட்நவிஸ், ``16 மீட்டர் நீளமுள்ள சேதமடைந்த படகு ஆயுதங்களுடன் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. உயிர் காக்கும் படகு ஒன்றும் கடலில் மிதந்துவந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. அடுத்து வரும் மாதங்களில் தீபாவளி வரை தொடர்ந்து மும்பை விழாக்கோலம் பூண்டிருக்கும். எனவே தீபாவளி வரை பாதுகாப்பை பலப்படுத்த மும்பை போலீஸார் முடிவு செய்திருக்கின்றனர். ஏற்கெனவே மும்பையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடல் மார்க்கமாக வந்து நடத்திய தீவிரவாத தாக்குதலின் வடுக்கள் இன்னும் ஆறாமல் இருக்கிறது. இந்த படகு ஓமனிலிருந்து கடலில் இழுத்து வரப்பட்டிருக்கலாம் என்று போலீஸார் தெரிவித்திருக்கின்றனர்" என்றார்.