Published:Updated:

இசையமைப்பாளர், பப் நிர்வாகி, நடிகை... பெண்களை சீரழிக்கும் 'ஹேப்பி பில்ஸ்' டீம்!

'எனக்கு இது பத்தல' என்று அதிகமாகக் கேட்கும் பெண்கள் தான் இவர்களின் டார்கெட்" என்றார்,

போதை பொருள்
போதை பொருள்

முன்னணி தமிழ் தொலைக்காட்சியின் பிரபல தொகுப்பாளினி ஒருவர், கடந்த வாரம் மயங்கிய நிலையில் சென்னையில் உள்ள பிரபல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதித்த மருத்துவர்கள் அதிர்ந்துபோனார்கள். காரணம், அந்தப் பெண்ணின் ரத்தத்தில் செக்ஸ் உணர்வை அதிகரிக்கச் செய்யும் போதைப்பொருள் கலந்திருந்ததுதான். மேலும் விரிவாக படிக்க க்ளிக் செய்க... http://bit.ly/2IBqKUD

'ஹேப்பி பில்ஸ்'... கல்லூரி இளம்பெண்களும் திரையுலகின் சில முன்னணி நடிகைகளும் புதிதாகப் பயன்படுத்தத் தொடங்கியிருக்கும் புதிய வகை போதைப்பொருளின் பெயர், இது. மாத்திரை வடிவில் இருக்கும் இந்தப் போதைப் பொருளை, சென்னை முழுவதும் சத்தமில்லாமல் சப்ளைசெய்து வருகிறது ஒரு நெட்வொர்க். அது விரித்த வலையில் விழுந்துதான் மயக்கநிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் அந்தத் தொகுப்பாளினி. ஹேப்பி பில்ஸுக்கு அடிமையாகிக் கொண்டிருக்கும் பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், நெட்வொர்க்கைப் பிடிக்கும் தீவிர முயற்சியில் இறங்கியிருக்கிறது போதைப் பொருள் தடுப்பப் பிரிவு.

போதை பொருள்
போதை பொருள்

"இதைப் பழக்கும்விதமே தனி. டார்கெட் செய்யப்படும் பெண்கள் குடிக்கும் பீரிலோ, ஒயினிலோ அவர்களுக்கே தெரியாமல் ஹேப்பி பில்ஸை கொஞ்சம் கொஞ்சமாகக் கலந்துவிடுவார்கள். அதற்கு வாய்ப்பில்லையெனில், 'இதை ட்ரை பண்ணிப் பாருங்களேன்... செமயா இருக்கும். பிடிச்சிருந்தா யூஸ் பண்ணுங்க... இல்லைன்னா ஸ்கிப் பண்ணிடுங்க'னு ஜென்டிலாகச் சொல்வார்கள். அந்த அணுகுமுறையில் ஈர்க்கப்பட்ட பெண்கள் ஆரம்பத்தில் சிறிய அளவில் பயன்படுத்த தொடங்குவர். முதலில் குறைந்த அளவில் இலவச மாகத்தான் கொடுப்பார்கள். அதற்கு அடிமையாகி, 'எனக்கு இது பத்தல' என்று அதிகமாகக் கேட்கும் பெண்கள் தான் இவர்களின் டார்கெட்" என்றார், இந்தப் போதைப்பொருளுக்கு அடிமையாகி, பலகட்டப் போராட்டங்களுக்குப் பிறகு அதிலிருந்து மீண்ட ஒரு பெண்.

ஹேப்பி பில்ஸை திரைத்துறைப் பிரபலங்களுக்குக் கொண்டுபோய்ச் சேர்த்ததில் முக்கிய பங்குவகித்தது ஒரு இசையமைப்பாளர்தான். சமீபத்தில் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ஒரு படத்தின் நாயகி, பல மாதங்கள் இந்த நபரிடம் சிக்கிச் சீரழிந்த கதையை திரையுலகில் கிசுகிசுத்துக்கொண்டிருக்கிறார்கள்.

இசையமைப்பாளர், பப் நிர்வாகி மற்றும் ஒரு நடிகை இந்த மூவர் கூட்டணி மூலமே சென்னையில் இந்த நெட்வொர்க் கொடிகட்டிப் பறக்கிறது. இவர்களிடம் சிக்கியவர்கள் தப்பிக்கவும் முடியாமல் விஷயத்தை வெளியே சொல்லவும் முடியாமல் புலம்பிவருகிறார்கள். பெரும்பாலான பப் உரிமையாளர்கள் செல்வாக்கான இடத்தில் இருப்பதால், அவர்களை எதுவும் செய்ய முடியவில்லை. பிரதான பகுதி பப் உரிமையாளர் ஆளுங்கட்சியில் அதிகாரம்மிக்க நபர். பிரபலங்கள் வசிக்கும் பகுதி பப் உரிமையாளரும் ஓர் அரசியல் பிரமுகர் என்கிறார்கள்.

இசையமைப்பாளர், பப் நிர்வாகி, நடிகை... பெண்களை சீரழிக்கும் 'ஹேப்பி பில்ஸ்' டீம்!

> அந்த இசையமைப்பாளர், பெண்களை சீரழிக்கும் விதம், ஆளுங்கட்சியின் முக்கிய வி.ஐ.பி-யின் வாரிசின் தொடர்பு, பாதிக்கப்படும் பெண்களுக்கு நிகழ்த்தப்படும் கொடூரம், போலீஸாரின் முயற்சி முதலானவை குறித்து விரிவாகச் சொல்லும் ஜூனியர் விகடன் இதழின் சிறப்புக் கட்டுரையை வாசிக்க > முதலில் மது... அடுத்து ஹேப்பி பில்ஸ்... இறுதியில்? - நடிகைகள் முதல் கல்லூரிப் பெண்கள் வரை பரவும் பகீர் கலாசாரம்! https://www.vikatan.com/news/general-news/happy-pills-new-drug-spread-in-chennai

| அனைத்து விகடன் இதழ்கள் + 2006 முதல் இன்று வரையிலான 325K ப்ளஸ் சிறப்புக் கட்டுரைகள்! > ரூ.200 மதிப்பிலான் ஒரு மாத பேக் உங்களுக்காக ரூ.99 மட்டுமே > சப்ஸ்க்ரைப் செய்ய > http://bit.ly/2mjxazv |