Published:Updated:

`அக்காவிடம் சொன்னேன் திட்டினாள், கொன்னுட்டேன்!'-நர்ஸ் கொலையில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு சிக்கிய தம்பி

நர்ஸ் கொலையில் கைது செய்யப்பட்டவர்கள் ( தே.தீட்ஷித் )

"துறையூர் நர்ஸ்" காணாமல் போன வழக்கில், 10 வருடம் கழித்து அவரது தம்பி, `நகைக்காக அக்காவைக் கொலை செய்தோம்' எனக் கொடுத்துள்ள வாக்குமூலம் பதற வைக்கிறது.

`அக்காவிடம் சொன்னேன் திட்டினாள், கொன்னுட்டேன்!'-நர்ஸ் கொலையில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு சிக்கிய தம்பி

"துறையூர் நர்ஸ்" காணாமல் போன வழக்கில், 10 வருடம் கழித்து அவரது தம்பி, `நகைக்காக அக்காவைக் கொலை செய்தோம்' எனக் கொடுத்துள்ள வாக்குமூலம் பதற வைக்கிறது.

Published:Updated:
நர்ஸ் கொலையில் கைது செய்யப்பட்டவர்கள் ( தே.தீட்ஷித் )

திருச்சி மாவட்டம், துறையூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசிப்பவர் சண்முகம். ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாளரான இவரின் மூத்தமகள் சுதா, அப்பகுதியில் உள்ள கண்ணனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராகப் பணிபுரிந்து வந்தார்.

கடந்த 2007-ம் ஆண்டு சுதாவுக்கும், அப்பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் தினமும் வேலைக்குச் செல்லும் சுதாவை அவரது பெரியப்பா மகனான சொல்லியம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயராமன் என்பவரின் மகன் யோகேஸ்வரன் என்பவர் அழைத்துச் சென்று மருத்துவமனையில் விடுவது வழக்கம்.

நர்ஸ் சுதா
நர்ஸ் சுதா
தே.தீட்ஷித்

கொலையாளியைத் தப்ப வைத்த போலீஸ்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இப்படி இருக்க, கடந்த 2009 -ம் ஆண்டு நவம்பர் 29-ம் தேதி, ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரவுப் பணிக்காக அன்று மாலை வீட்டிலிருந்து கிளம்பிச் சென்றார் சுதா. ஆனால், அவர் மருத்துவமனைக்கு வரவில்லை என மருத்துவமனை பணியாளர்களிடம் கேட்டபோதுதான் தெரிந்தது. மறுநாள் காலையும் சுதா, வீடு திரும்பாத நிலையில் சுதாவை பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் அவர் கிடைக்கவில்லை. அதையடுத்து சுதா காணாமல் போனதுகுறித்து, துறையூர் காவல் நிலையத்தில் அவரது தாய் ஜீவா புகார் கொடுத்தார். புகாரை பெற்றுக்கொண்ட அப்போதைய துறையூர் காவல் நிலைய எஸ்.ஐ ஜெயசித்ரா என்பவர், புகார் மீது முறையான விசாரணை நடத்தவில்லை என்றும், சுதா காணாமல் போன விவகாரத்தில் அவரின் மாமா ரெங்கராஜ் மற்றும் தம்பி யோகேஸ்வரன் ஆகியோர்மீது சந்தேகம் இருப்பதாக போலீஸாரிடம் கூறப்பட்டது. போலீஸாரும் அவர்களை விசாரணைக்கு அழைத்தனர். ஆனால் அவர்களிடம் முறையாக விசாரணை நடத்தாமல் அவர்களை தப்பிக்க வைத்ததுடன், புகார் கொடுத்த சுதாவின் தாய் ஜீவா மற்றும் பெற்றோரின் மீதே போலீஸார் விசாரணை நடத்தினர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மகளுக்காக 10 வருடப்  போராட்டம்

மேலும் சுதாவுக்கு திருமணம் ஆகிவிட்டதால், பெற்றோர் கொடுக்கும் புகார் செல்லாது. அவரது கணவரை புகார் கொடுக்கச் சொல்லுங்கள். விசாரணை நடத்துகிறோம் எனக் கூறி போலீஸார் சுதாவின் தாய் ஜீவாவின் புகாரைக் கிடப்பில் போட்டனர். அதையடுத்து சுதாவின் கணவர் ராஜ்குமார், இந்த விவகாரம் தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்தார். வழக்கு விசாரணையில் இருந்தநிலையில், ராஜ்குமார் 2-வது திருமணம் செய்துகொண்டார். ஆனாலும் சுதாவின் பெற்றோர், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடுத்தனர். அதில், ``போலீஸார் முறையாக விசாரிக்கவில்லை. 8 க்கும் மேற்பட்ட ஆய்வாளர்கள் மாறியும் வழக்கில் ஒரு துருப்புச் சீட்டையும் கண்டுபிடிக்கவில்லை உள்ளிட்ட காரணங்களைக் கூறி வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும்'' என்று குறிப்பிட்டிருந்தார்.

சுதாவின் பெற்றோர்
சுதாவின் பெற்றோர்
தே.தீட்ஷித்

இந்த வழக்கில் உயர் நீதிமன்றம் விதித்த கடுமையான நெருக்கடி காரணமாக, திருச்சி மாவட்ட எஸ்பி ஜியா உல் ஹக், முசிறி டிஎஸ்பி தமிழ்மாறன் மற்றும் துறையூர் காவல் ஆய்வாளர் குருநாதன், எஸ்ஐ கலைச்செல்வன் தலைமையில் தனிப்படை அமைத்தார். போலீஸாரின் விசாரணையில், சுதாவின் பெற்றோர் குற்றம்சாட்டும் ரங்கராஜ் மற்றும் யோகேஸ்வரன் ஆகியோர் சென்னை தாம்பரம் பகுதியில் கார் ஓட்டுநராகப் பணியாற்றுவது தெரிந்தது. அதையடுத்து அவர்களை போலீஸார் பிடித்து விசாரித்தனர். போலீஸார் விசாரணையில் யோகேஸ்வரன்,

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

“ஒரு பெண்ணை காதலித்தேன். அதன் விளைவாக அவர் கருவுற்றார். இக்கட்டான சூழ்நிலையில் கர்ப்பத்தைக் கலைப்பதற்கு பணம் தேவைப்பட்டது. இதைச் சொல்லி அக்காவிடம் பணம் கேட்டேன். அவங்க என்னைத் திட்டியதுடன், பணம் தர மறுத்துட்டாங்க. பணம் பெற வேறு வழி இல்லையென்பதால், நகையை அக்காவிடம் கேட்டு கெஞ்சினேன். தரவில்லை. அன்று வேலைக்குச் செல்வதற்காக துறையூரில் உள்ள மருத்துவமனை பேருந்துநிலையத்தில் காத்திருந்தார். வழக்கம்போல நான் காரில் அழைத்துச்சென்றேன். தீரன் நகர் அருகே மாமா ரெங்கராஜ் காரில் ஏறினார். கார் கொத்தம்பட்டி பாலம் அருகில் சென்றபோதும் அக்காவிடம் பணமும் நகையும் கேட்டோம். அவர் கறாராகவே இருந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த நாங்கள் காருக்குள்ளேயே வைத்து, அவரின் துப்பட்டாவாலேயே கழுத்தை நெரித்தோம்.

கைது செய்யப்பட்ட தம்பி, மாமா
கைது செய்யப்பட்ட தம்பி, மாமா

அக்கா சுயநினைவு இழந்ததும், அவர் அணிந்திருந்த 6 பவுன் வளையல் மற்றும் 3 பவுன் தோடு உள்ளிட்ட நகைகளைக் கழற்றினோம். அதில் ஒரு காது மற்றும் மூக்குத்தி உள்ளிட்டவற்றைக் கழற்ற முடியாததால் பிளேடால் அறுத்தே நகையை எடுத்துக் கொண்டு, அடையாளம் தெரியாமல் இருக்கப் பாறாங்கல்லால் முகத்தைச் சிதைத்ததுடன், உடலை நாமக்கல் மாவட்டம், தாத்தாத்திரிபுரம், பெரியாண்டவர் கோயில் பகுதியில் வீசிவிட்டு வந்தோம். கொலை செய்ய பயன்பட்ட பாறாங்கல்லை வீட்டுக்குப் பக்கத்தில் வைத்துள்ளேன்” என்று சொல்ல போலீஸார் அதிர்ந்து போனார்கள்.

மகளின் உடலை பார்க்க முடியாமல் தவித்த பெற்றோர்

முன்னதாக தாத்தாத்திரிபுரத்தில் வீசப்பட்ட சுதாவின் உடலை நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் போலீஸார் கைப்பற்றினர். ஆனால், இறந்தவர் குறித்த தகவல் தெரியாததால் வழக்கு ஆவணங்களை மாநில குற்றப்பிரிவு ஆவணக் காப்பகத்துக்கு அனுப்பியதோடு வழக்கை மூடிவிட்டதுடன், உடலை அடக்கம் செய்தனர். சுதா காணாமல் போன விவகாரம் குறித்து துறையூர் காவல் நிலையத்தில் முறையாக வழக்குப் பதியப்படாததால் வழக்கு இவ்வளவு நாள் இழுத்தடிக்கப்பட்டது தெரியவந்துள்ளது.

கொலை செய்யப்பட்ட நர்ஸ் சுதா
கொலை செய்யப்பட்ட நர்ஸ் சுதா

சுதாவின் தாய் ஜீவா, “என் பொண்ணு காணாமல் போன நாளில் இருந்தே ரெங்கராஜ் மற்றும் யோகேஸ்வரன் மீது சந்தேகம் இருக்குன்னு சொல்லிக்கிட்டு வர்றேன். ஆனால் அவர்களைத் தப்பவிட்ட போலீஸார் எங்களைச் சந்தேகப்பட்டு, எங்களிடமே விசாரித்தார்கள். 10 வருடம் கழித்து நாங்கள் சொன்ன நபர்கள்தான் என் மகளைக் கொலை செய்துள்ளது தெரியவந்துள்ளது. ஒருமுறைகூட அவ முகத்தைப் பார்க்க முடியாமல் போய்விட்டது. என் மகளின் சாவுக்கு நீதிக்கிடைக்க 10 வருடம் ஆகிடுச்சு” என வேதனையுடன் கூறினார்.

அக்காவை தம்பியும், மாமனும் சேர்ந்து கொலை செய்த வழக்கில் 10 வருடங்களுக்குப் பிறகு கொலையாளிகள் கைது செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism