Published:Updated:

மும்பை: ரயில் நிலையத்தில் பையை திருடிக்கொண்டு ஓடிய திருடன்! - விரட்டிச் சென்ற பயணிக்கு நேர்ந்த கதி

மும்பை ரயில் நிலையத்தில் பேக்கை திருடிக்கொண்டு ஓடியவனை விரட்டி சென்றவர் திருடனால் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டார்

மும்பை புறநகர் ரயில்களில் தினமும் ஏராளமான திருட்டு மற்றும் வழிப்பறி சம்பவங்கள் நடக்கிறது. மும்பை விரார் ரயில் நிலையத்தில் அது போன்று பேக்கை திருடிச்சென்றவரை விரட்டி சென்றவர் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பயணிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பை விலே பார்லே பகுதியை சேர்ந்தவர் ஹர்ஷல். இவருக்கு கடந்த ஒரு ஆண்டுக்கு முன்புதான் திருமணம் நடந்தது. தனது கர்ப்பிணி மனைவி பிரியங்கா, தனது மாமியார் பிரபாவதி ஆகியோருடன் பிரியங்காவின் சகோதரி வீட்டில் நடந்த துர்கா பூஜையில் கலந்து கொள்ள சென்றார். பிரியங்காவின் சகோதரி விராரில் வசிக்கிறார். விராரில் பூஜை முடிந்த பிறகு ஹர்ஷல் தனது மனைவி, மாமியாருடன் வீட்டிற்கு செல்வதற்காக விரார் ரயில் நிலையம் வந்தார். ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த போது ஹர்ஷலிடம் பின்னாலிருந்து பேக்கை பிடுங்கிக்கொண்டு திருடன் ஒருவன் ஓடினான். உடனே ஹர்ஷல் திருடனை விரட்டி சென்றார்.

அவருடன் மற்ற சில பயணிகளும் சேர்ந்து திருடனை விரட்டி சென்றனர். திருடன் ரயில் நிலையத்தை தாண்டி இருட்டான பகுதிக்குள் ஓடினான். அப்படியும் ஹர்ஷல் விடாமல் துரத்தி சென்று திருடனை பிடித்தார்.

ஹர்ஷல்
ஹர்ஷல்

இதில் திருடன் தன்னிடமிருந்த கத்தியை எடுத்து ஹர்ஷலை சரமாறியாக குத்திவிட்டு தப்பிக்க முயன்றான். ஆனால் அதற்குள் மற்ற பயணிகள் அங்கு வந்து திருடனை மடக்கி பிடித்தனர். படுகாயம் அடைந்த ஹர்ஷல் உடனே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார். ஹர்ஷல் தனது மனைவியுடன் சமீபத்தில்தான் முதலாவது திருமண நாளை கொண்டாடினார். இச்சம்பவம் தொடர்பாக ரயில்வே போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ``ஹர்ஷலை குத்திக்கொலை செய்த திருடன் பிரதீப்(35) கைது செய்யப்பட்டுள்ளார், அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி காவலில் எடுத்து விசாரித்து வருகிறோம். ரயில் நிலையத்தில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகள் சேகரிக்கப்பட்டுள்ளது” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு