Published:Updated:

`ஆன்லைன் டிரேடிங்' என ரூ.6.45 லட்சம் மோசடி; `கவனமாக இருங்கள்' என காவல்துறை அறிவுறுத்தல்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், விழுப்புரம்
காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், விழுப்புரம் ( தே.சிலம்பரசன் )

ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்து அதிக பணம் பெற்றுத் தருவதாக ஆசை வார்த்தை கூறி, செஞ்சியை சேர்ந்த 26 வயது இளைஞர் ஏமாற்றப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏமாற்றிய நபர், கைது செய்யப்பட்டுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

அண்மை காலமாக நூதன முறை மோசடிகள் நடப்பது அதிகரித்து வருகின்றன. சாமானிய மனிதர்களிடம் ஆசை வார்த்தைகள்கூறி இந்த குற்ற செயல்கள் அறங்கேற்றப்பட்டு வருகின்றன. விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரும் ஏமாற்றப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செஞ்சி அருகே உள்ள சண்டிசாட்சி கிராமத்தைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞர் சுரேஷ். இவருக்கு, மதுரை மாவட்டம் திருமங்கலத்தைச் சேர்ந்த கார்த்திக்செல்வன் (31) என்ற நபருடன் டெலிகிராம் ஆப் மூலம் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. பங்குசந்தை சார்ந்த வர்த்தகம் மற்றும் பயிற்சி கொடுப்பதாகவும், அதுமட்டுமின்றி நேரடியாக பயிற்சி தருவதாகவும் அவரது டெலிகிராம் குழுவில் தகவல் பகிர்ந்துள்ளார் கார்த்திக்செல்வன். அதைப் பார்த்த இளைஞர் சுரேஷ், தனக்கு நேரடி பயிற்சி அளிக்கும்படி அந்த நபரிடம் கேட்டுள்ளார். அதன்படி 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் சுரேஷின் வீட்டிற்குச் சென்று பயிற்சி அளிக்கத் தெடங்கியுள்ளார் கார்த்திக்செல்வன். அப்போது, 5,00,000 ரூபாய் தாருங்கள் என்றும்; அதை வர்த்தகத்தில் முதலீடு செய்து 3 மாதத்திற்குள் 15,00,000 ரூபாயாக திருப்பித் தருகிறேன் என்றும், சுரேஷிடம் ஆசை வார்த்தை கூறியுள்ளார் கார்த்திக்செல்வன்.

கைது செய்யப்பட்ட நபர்
கைது செய்யப்பட்ட நபர்
தொழிலதிபரிடம் முகநூலில் பழகி மோசடி! - அனுதாபம் மூலம் ரூ.1.1 கோடி பறித்த தாய், மகள்

அவரின் ஆசை வார்த்தையை நம்பி, ஏழு தவணைகளாக ஓரிரு நாள் இடைவெளியில் மொத்தம் 4,20,000 ரூபாயை கூகுள் பே மூலமும், 3 தவணைகளாக 2,25,000 ரூபாயை வங்கி கணக்கு மூலமாகவும் என மொத்தம் 6,45,000 ரூபாயை கார்த்திக்செல்வனிடம் கொடுத்துள்ளார் சுரேஷ். பணத்தை வாங்கிய கார்த்திக்செல்வன் ஏமாற்றிவிட்டதாக சுரேஷ் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். துரித நடவடிக்கையை மேற்கொள்ளும்படி மாவட்ட கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா அளித்த உத்தரவின்பேரில் வழக்கு பதிவு செய்த விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார், தனிப்படை அமைத்து களத்தில் இறங்கியுள்ளனர்.

மதுரை மாவட்டத்தை சேர்ந்த கார்த்திக்செல்வனை கடந்த அக்டேபர் 1-ம் தேதி கைது செய்த காவல்துறையினர், செஞ்சி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பின்னர் சிறையில் அடைத்துள்ளனர்.

திமுக பிரமுகர் ஜோயல் முதல் சீமான் வரை ஏமாற்றிய நபர் கைது; என்ன நடந்தது?

``இது போன்ற ஆன்லைன் டிரேடிங் மூலம் ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்தால் அதிக பணம் கிடைக்கும் என்று ஆசை வார்த்தை கூறும் நபர்களிடம் பணத்தை கொடுத்து பொதுமக்கள் யாரும் ஏமாற வேண்டாம்" என்று விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு