Published:Updated:

தூத்துக்குடி: வாட்ஸ்அப் குழுவில் கருத்து பதிவிடுவதில் மோதல்; வீடு புகுந்து கொலை செய்த கும்பல்!

கயத்தார் காவல் நிலையம்

தூத்துக்குடியில் சமூகம் சார்ந்த வாட்ஸ்அப் குழுவில் கருத்து பதிவிடுதல் தொடர்பான மோதலில் வீடு புகுந்து ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தூத்துக்குடி: வாட்ஸ்அப் குழுவில் கருத்து பதிவிடுவதில் மோதல்; வீடு புகுந்து கொலை செய்த கும்பல்!

தூத்துக்குடியில் சமூகம் சார்ந்த வாட்ஸ்அப் குழுவில் கருத்து பதிவிடுதல் தொடர்பான மோதலில் வீடு புகுந்து ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:
கயத்தார் காவல் நிலையம்

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகிலுள்ள  கயத்தார், வடக்கு தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ். 22 வயதான இவர், சமையல்  வேலைகளுக்குச் சென்றுவந்திருக்கிறார்.  இவர் சார்ந்த சமுதாயத்தின் பெயரில் அமைக்கப்பட்ட வாட்ஸ்அப் குழுவில் இவரும் உறுப்பினராக இருக்கிறார். அதே குழுவில் தென் மாவட்டங்களைச் சேர்ந்த பலரும் உறுப்பினர்களாக உள்ளனர். இந்தக் குழுவில் கருத்துகள், புகைப்படங்கள், வீடியோக்கள் பதிவிடுவதில் ஒருவருக்குள் ஒருவர் போட்டி ஏற்பட்டதாம். அதில், ஒருவருக்கொருவர் வாக்குவாதத்திலும் ஈடுபட்டுள்ளனர்.

கொலைசெய்யப்பட்ட சுரேஷ்
கொலைசெய்யப்பட்ட சுரேஷ்

அவரவரின் தனித்தளங்களிலும் வாக்குவாதம் நீடித்திருக்கிறது. இந்த நிலையில், அதே குழுவிலுள்ள திருநெல்வேலியைச் சேர்ந்த பந்தல்ராஜ் என்பவருக்கும், சுரேஷுக்கும் கருத்து மோதல் ஏற்பட்டிருக்கிறது. இருவரையும் குழுவில் இருப்பவர்கள் பலமுறை சமாதனம் செய்துவைத்துள்ளனர். இந்த நிலையில், சுரேஷும் பந்தல் ராஜூவும் போனில் பேசி சண்டையிட்டிருக்கின்றனராம். இந்த நிலையில், பந்தல்ராஜ் தன் நண்பர்களுடன் வந்தார். கயத்தார் வடக்குத் தெருவிலுள்ள சுரேஷின் வீட்டுக்குச் சென்று இன்று அதிகாலையில் கதவைத் தட்டியுள்ளனர்.  

கதவை சுரேஷின் தாயார் ரேவதி திறந்துள்ளார். பந்தல்ராஜ் உள்ளிட்ட ஆறு பேர் ரேவதியைக் கீழே தள்ளிவிட்டு வீட்டுக்குள் புகுந்துள்ளனர்.  வீட்டின் அறையில் தூங்கிக்கொண்டிருந்த சுரேஷை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர். ரத்த வெள்ளத்தில் கிடந்த தன் மகனைப் பார்த்த ரேவதி அலறிக் கத்தியிருக்கிறார். அவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்துள்ளனர். அதற்குள் அந்தக் கும்பல் காரில் ஏறி, பறந்து சென்றது. உடனடியாக சுரேஷை மீட்டு திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு  சிகிச்சைக்காகக் கொண்டு சென்றனர். ஆனால்,  பாதி வழியிலேயே சுரேஷ் உயிரிழந்தார்.

கயத்தார் காவல் நிலையம்
கயத்தார் காவல் நிலையம்

இந்தச் சம்பவம் தொடர்பாக கயத்தார் காவல் நிலைய போலீஸார் விசாரணை நடத்தினர். சமூகம் சார்ந்த வாட்ஸ்அப் குழுவில் கருத்து பதிவிடுதல் தொடர்பான மோதலால் சுரேஷ் கொலைசெய்யப்பட்டது தெரியவந்துள்ளது. இதையடுத்து திருநெல்வேலியைச் சேர்ந்த பந்தல்ராஜ்  உள்ளிட்ட ஆறு நபர்களை போலீஸார் கைதுசெய்தனர்.  விசாரணையில் பந்தல்ராஜ் உள்ளிட்ட ஆறு பேரும் வாட்ஸ்அப் குழுவில் கருத்து மோதலின்  விளைவாக ஏற்பட்ட தகராறில் கொலைசெய்ததை ஒப்புக்கொண்டனர்.  இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.