Published:Updated:

புதுக்கோட்டை: பல கொலை வழக்குகளில் தொடர்புடைய ரெளடி... பட்டப்பகலில் வெட்டிப் படுகொலை செய்த கும்பல்!

கொலை

புதுக்கோட்டை நகர் போலீஸார் இளவரசனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

புதுக்கோட்டை: பல கொலை வழக்குகளில் தொடர்புடைய ரெளடி... பட்டப்பகலில் வெட்டிப் படுகொலை செய்த கும்பல்!

புதுக்கோட்டை நகர் போலீஸார் இளவரசனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

Published:Updated:
கொலை

திருச்சி மாவட்டம், மேலகல்கண்டார்கோட்டையைச் சேர்ந்தவர் இளவரசன் (32). பிரபல ரெளடியாக வலம்வந்த இவர்மீது, புதுச்சேரி முன்னாள் துணை சபாநாயகரை வெடிவீசிக் கொலைசெய்த வழக்கு, திருச்சி, புதுக்கோட்டையில் கொலை வழக்கு என பல்வேறு கொலை, கொலை முயற்சி வழக்குகள் நிலுவையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், புதுக்கோட்டையில் நடந்த ஒரு கொலை வழக்கு தொடர்பாக, புதுக்கோட்டை நீதிமன்றத்தில் தினமும் ஆஜராகி கையொப்பமிட்டு வந்திருக்கிறார். வழக்கம்போல், இன்றும் ஆஜராகி கையெழுத்து போட்டுவிட்டு, டூ வீலரில் சிலருடன் அய்யனார்புரம், புதுக்குளம் கரை அருகே சென்றிருக்கிறார். அப்போது, அவரைப் பின்தொடர்ந்து இரு சக்கர வாகனத்தில் வந்திறங்கிய அடையாளம் தெரியாத ஐந்து பேர்கொண்ட கும்பல், வழிமறித்து அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் பின்பக்கத்திலிருந்து தலை உள்ளிட்ட இடங்களில் சரமாரியாகக் கொலைவெறித் தாக்குதல் நடத்தியிருக்கிறது. இதில் படுகாயமடைந்து கீழே சாய்ந்த இளவரசன், ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இதையடுத்து, கொலைசெய்த கும்பல் அங்கிருந்து தப்பியோடியது. இதற்கிடையே, இளவரசனுடன் வந்தவர்களும் அங்கிருந்து தலைதெறிக்க ஓடிவிட்டனர்.   

கொலைசெய்யப்பட்ட இளவரசன்
கொலைசெய்யப்பட்ட இளவரசன்

அய்யனார்புரம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், இது குறித்து காவல் நிலையத்துக்குத் தகவல் கொடுத்தனர். பின்னர் சம்பவ இடத்துக்கு வந்த கணேஷ் நகர் மற்றும் புதுக்கோட்டை நகர் போலீஸார் இளவரசனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மோப்பாய் வரவழைக்கப்பட்டு, தடயங்களைச் சேகரித்தனர்.

புதுக்கோட்டை
புதுக்கோட்டை

தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு நேரடியாக வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே விசாரணை நடத்தினார். குற்றவாளிகளைப் பிடிக்க நான்கு தனிப்படைகளை அமைத்து உத்தரவிட்டார். கொலையான இளவரசனுடன் வந்தவர்களைப் பிடித்து விசாரித்துவருகின்றனர். கொலைக்கான காரணம் குறித்து தீவிரமாக விசாரிப்பதுடன், ஐந்து பேர்கொண்ட கும்பலையும் தேடிவருகின்றனர்.

தமிழகம், புதுச்சேரி பகுதிகளில் கொலை, கொலை முயற்சி வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரெளடி பட்டப்பகலில் வெட்டிப் படுகொலைசெய்யப்பட்டிருக்கும் சம்பவம், புதுக்கோட்டையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.