Published:Updated:

சென்னை பள்ளி வாசலில் ஆட்டோவில் கடத்தப்பட்ட மாணவன்! - கடத்தல்காரர்களிடமிருந்து தப்பியது எப்படி?

சென்னை பள்ளி மாணவன் கடத்தல்

சென்னையில் தனியார்ப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவனைக் கடத்த முயற்சி நடந்துள்ளது.

சென்னை பள்ளி வாசலில் ஆட்டோவில் கடத்தப்பட்ட மாணவன்! - கடத்தல்காரர்களிடமிருந்து தப்பியது எப்படி?

சென்னையில் தனியார்ப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவனைக் கடத்த முயற்சி நடந்துள்ளது.

Published:Updated:
சென்னை பள்ளி மாணவன் கடத்தல்

சென்னை கொண்டித்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் தொழிலதிபர் அரவிந்த் சர்மா. இவரின் 12 வயது மகன் கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார்ப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறான். சிறுவன் பள்ளி முடிந்து ஆட்டோவில் வீட்டுக்கு வருவது வழக்கம். அதேபோல, சிறுவன் நேற்று மாலை பள்ளி முடிந்து, தான் எப்போதும் செல்லும் ஆட்டோவுக்காகக் காத்திருந்தார்.

பச்சையப்பன் கல்லூரி மெட்ரோ
பச்சையப்பன் கல்லூரி மெட்ரோ

அப்போது, அங்கு ஆட்டோவில் வந்த மர்மநபர்கள் சிலர், மாணவனைத் தாக்கி வலுக்கட்டாயமாக ஆட்டோவில் ஏற்றிக் கடத்தி சென்றுள்ளார். தொடர்ந்து ஆட்டோ பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள பச்சையப்பன் கல்லூரி சிக்னலில் நின்றுள்ளது. அந்த சந்தர்ப்பத்தைச் சரியாகப் பயன்படுத்திக்கொண்ட மாணவன், ஆட்டோவிலிருந்து தப்பித்து அருகிலிருந்த பச்சையப்பன் கல்லூரி மெட்ரோ ரயில் நிலையத்துக்குள் சென்றுள்ளார்.

மெட்ரோ நிலையத்தின் உள்ளே சென்ற மாணவன் அங்கிருந்த காவலர்களிடம் நடந்த சம்பவத்தைச் சொல்லியிருக்கிறார். தொடர்ந்து அவர்களிடம் செல்போன் வாங்கி தனது தந்தைக்கும் தகவல் சொல்லியிருக்கிறார். இதனைத் தொடர்ந்து, மாணவன் சென்ட்ரல் ரயில் நிலைய போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டான். அங்கு வந்த மாணவனின் பெற்றோர்கள் அவனை வீட்டுக்கு அழைத்துச் சென்றனர்.

கீழ்பாக்கம் காவல் நிலையம்
கீழ்பாக்கம் காவல் நிலையம்

இதனைத் தொடர்ந்து, அரவிந்த் தனது மகனைக் கடத்த நடந்த முயற்சி குறித்து கீழ்பாக்கம் பகுதி போலீஸில் புகார் அளித்துள்ளார். புகாரை அடுத்து சிறுவனை கடத்தியது யார் என்பது குறித்து அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி காட்சிகளை கைப்பற்றி போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். பள்ளி அருகே மாணவன் ஒருவனைக் கடத்த நடந்த முயற்சி அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.