Published:Updated:

கள்ளக்குறிச்சி: பர்த்டே பார்ட்டிக்குச் சென்ற பள்ளி மாணவன்; அரிவாளால் வெட்டிப் படுகொலை!

படுகொலை செய்யப்பட்ட பள்ளி மாணவன்

பிறந்தநாள் பார்ட்டிக்கு நண்பர்களால் அழைத்துச்செல்லப்பட்டதாகக் கூறப்படும் 11-ம் வகுப்பு மாணவன், வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி: பர்த்டே பார்ட்டிக்குச் சென்ற பள்ளி மாணவன்; அரிவாளால் வெட்டிப் படுகொலை!

பிறந்தநாள் பார்ட்டிக்கு நண்பர்களால் அழைத்துச்செல்லப்பட்டதாகக் கூறப்படும் 11-ம் வகுப்பு மாணவன், வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Published:Updated:
படுகொலை செய்யப்பட்ட பள்ளி மாணவன்

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் அருகேயுள்ள டி.கீரனூர் பகுதியைச் சேர்ந்தவர் சக்கரை என்பவரின் மகன் விமல் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). 17 வயதாகும் இவர், அதே பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 11-ம் வகுப்பு படித்துவந்துள்ளார். நேற்று முன்தினம் (14.05.2022) இரவு இவரின் வீட்டுக்குச் சென்ற சக மாணவர் ஒருவர், 'பிறந்தநாள் பார்ட்டி' எனக் கூறி விமலை அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. ஆனால், இரவு முழுவதும் விமல் வீடு திரும்பவில்லையாம்.

திருக்கோவிலூர் காவல் நிலையம், படுகொலை செய்யப்பட்ட சிறுவன்
திருக்கோவிலூர் காவல் நிலையம், படுகொலை செய்யப்பட்ட சிறுவன்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்த நிலையில், டி.கீரனூர் புறவழிச்சாலையின் அருகே, இளைஞர் ஒருவர் கழுத்து, கை பகுதிகளில் கடுமையான வெட்டுக்காயங்களுடன் அதிகாலையில் படுகொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்துள்ளார். அவரை வெட்டுவதற்குப் பயன்படுத்திய அரிவாளும், அருகிலேயே கிடந்துள்ளது. அந்த இளைஞர் யார் என விசாரித்ததில், பள்ளி மாணவர் விமல்தான் என்பது தெரியவந்துள்ளது. தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த திருக்கோவிலூர் போலீஸார், மாணவனின் உடலைக் கைப்பற்றி திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்குப் பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்துள்ளனர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மேலும் இது குறித்து வழக்கு பதிந்துள்ள காவல்துறையினர், பிறந்தநாள் பார்ட்டியில் ஏற்பட்ட தகராறில் மாணவர் படுகொலை செய்யப்பட்டாரா, காதல் விவகாரம் உள்ளிட்ட வேறு ஏதேனும் காரணங்கள் இருக்கின்றனவா உள்ளிட்ட பல்வேறு சந்தேக கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டுவந்தனர்.

கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி

இது குறித்து, திருக்கோவிலூர் காவல் நிலைய காவல் அதிகாரிகள் மற்றும் டி.எஸ்.பி ஆகியோரைத் தொடர்புகொண்டு பேசுவதற்கு முயன்றோம். ஆனால், நமக்கு உரிய பதில் அளிக்கப்படவில்லை. பதில் அளிக்கப்படும் பட்சத்தில், உரிய பரிசீலனைக்குப் பிறகு பதிவிடத் தயாராக இருக்கிறோம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism