Published:Updated:

``உங்கள் மகளுக்கு டாக்டர் சீட் வாங்கித் தருகிறோம்!" - விஞ்ஞானியிடம் ரூ.26.5 லட்சம் மோசடி

மோசடி

மும்பையில் மகளுக்கு டாக்டருக்குப் படிக்க சீட் வாங்கிக்கொடுப்பதாகக் கூறி விஞ்ஞானியிடம் ரூ.26.5 லட்சம் மோசடிசெய்யப்பட்டிருக்கிறது.

``உங்கள் மகளுக்கு டாக்டர் சீட் வாங்கித் தருகிறோம்!" - விஞ்ஞானியிடம் ரூ.26.5 லட்சம் மோசடி

மும்பையில் மகளுக்கு டாக்டருக்குப் படிக்க சீட் வாங்கிக்கொடுப்பதாகக் கூறி விஞ்ஞானியிடம் ரூ.26.5 லட்சம் மோசடிசெய்யப்பட்டிருக்கிறது.

Published:Updated:
மோசடி

டாக்டருக்குப் படிக்க வேண்டும் என்பது அனைவரின் கனவாக இருக்கலாம். ஆனால், தங்கள் பிள்ளைகளை டாக்டருக்குப் படிக்கவைக்கும் ஆர்வத்தில் பெற்றோர்கள் சில நேரங்களில் மோசடிப் பேர்வழிகளிடம் பணத்தை இழந்துவிடுவதுண்டு. மும்பையிலுள்ள பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் விஞ்ஞானியாக இருப்பவர் சிவாஜி சரண் தாஸ். இவர் தன் மகளை டாக்டருக்குப் படிக்கவைக்க முடிவுசெய்தார். இதற்காக கல்லூரியில் அட்மிஷனுகாகத் தேடிக்கொண்டிருந்தார். பெங்களூருவைச் சேர்ந்த ஒரு மருத்துவக் கல்லூரியில் சீட் இருப்பதாகக் கேள்விப்பட்டு அங்கு சென்றார். அங்கு கல்லூரியில் அட்மிஷனுக்காக ஏராளமானோர் வந்திருந்தனர். கல்லூரியில் சேருவதற்குத் தேவையான விண்ணப்பங்களை வாங்கி வந்தார். பின்னர் மீண்டும் விண்ணப்பத்துடன் சரணும் அவர் மனைவியும் அதே கல்லூரிக்கு அட்மிஷனுக்காகச் சென்றனர். அங்கு மன்சூர் அலி என்பவரைச் சந்தித்துப் பேசினர்.

மன்சூர் தன்னைக் கல்லூரியின் நிர்வாக அதிகாரி என்று கூறிக்கொண்டார். மன்சூரிடம் சரண் தன் மகளுக்குக் கல்லூரியில் அட்மிஷன் கொடுக்கும்படி கேட்டுக்கொண்டனர். உடனே மன்சூர் அவர்களை ராஜ்குமார் அகர்வால், அமித் அகர்வால் ஆகியோரிடம் அறிமுகம் செய்துவைத்தார். அவர்கள் கல்லூரியின் நிர்வாக ஒதுக்கீட்டில் இருக்கும் சீட்டை வழங்குவதாகத் தெரிவித்தனர். இதற்காக ரூ.26.5 லட்சம் கொடுக்கும்படி கேட்டனர்.

மோசடி
மோசடி

சரணும் அவர்கள் கேட்ட தொகையைக் கொடுத்தார். ஆனால், அவர்கள் சொன்னபடி சரணின் மகளுக்குக் கல்லூரியில் படிக்க இடம் வாங்கிக் கொடுக்கவில்லை. இதையடுத்து பணத்தை திரும்பக் கொடுக்கும்படி சரண் கேட்டார். இதனால் வாங்கிய பணத்தில் 13.84 லட்சத்தை மட்டும் திரும்பக் கொடுத்தனர். எஞ்சிய பணத்தைத் திரும்பக் கொடுக்கவில்லை. அதோடு சரணின் போனை எடுத்துப் பேச மறுத்தனர். இதனால் சரண் மீண்டும் கல்லூரிக்குச் சென்று அவர்கள் குறித்து விசாரித்தபோது, அமித் குமார், ராஜ்குமார் என்ற பெயரில் யாரும் கல்லூரியில் இல்லை என்று தெரியவந்தது. உடனே இது குறித்து சரண் மும்பை போலீஸில் புகார் செய்திருக்கிறார். அதனடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரித்துவருகின்றனர். இது குறித்து இந்த வழக்கை விசாரிக்கும் போலீஸ் அதிகாரி, ``விஞ்ஞானியிடம் மோசடி செய்தவர்கள் டெல்லி, பெங்களூரு பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று அடையாளம் காணப்பட்டிருக்கிறது. அவர்களைத் தேடிவருகிறோம்" என்று தெரிவித்தார்.