Published:Updated:

"அரசியல் பிரமுகர்களை தெரியும்; அரசு வேலை வாங்கிடலாம்!"- 58 பேரிடம் ரூ.70 லட்சம் மோசடி; ஆசிரியர் கைது

விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், சங்கரன்

மின்வாரியத்தில் வேலை வாங்கி தருவதாகக் கூறி, 58 பேரிடம் ரூ.70 லட்சம் மோசடி செய்த அரசுப் பள்ளி ஆசிரியர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

"அரசியல் பிரமுகர்களை தெரியும்; அரசு வேலை வாங்கிடலாம்!"- 58 பேரிடம் ரூ.70 லட்சம் மோசடி; ஆசிரியர் கைது

மின்வாரியத்தில் வேலை வாங்கி தருவதாகக் கூறி, 58 பேரிடம் ரூ.70 லட்சம் மோசடி செய்த அரசுப் பள்ளி ஆசிரியர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

Published:Updated:
விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், சங்கரன்

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் தங்கமயில். இவர் தந்தை கலியமூர்த்தி திருவெண்ணைநல்லூர் மின்சார வாரிய அலுவலகத்தில் முதல்நிலை முகவராக பணி செய்து வந்த நிலையில், கடந்த 2009-ம் ஆண்டு ஓய்வு பெற்றுள்ளார். அதன்பிறகு, 2017-ம் ஆண்டு முதல் அதே மின்வாரிய அலுவலகத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில், டி.புதுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த சங்கரன் என்னும் அரசுப் பள்ளி ஆசிரியர், 22.03.2019 அன்று கலியமூர்த்தியை வீட்டில் சந்தித்துப் பேசியுள்ளார். அப்போது, "மின்சார வாரியத்தில் கேங்மேன் மற்றும் உதவி பொறியாளர் வேலைக்கு காலி பணியிடத்திற்கான அறிவிப்புகள் வெளியாக உள்ளது. எனக்கு அரசியல் பிரமுகர்களிடம் நல்ல தொடர்பு இருக்கிறது. எனவே, தங்களுக்கும் தங்கள் கீழ் பணிபுரியும் ஊழியர்களுக்கும் மின்சார வாரியத்தில் அப்பணியை வாங்கித் தருவதற்கு ஒரு நபருக்கு ரூ.3,00,000 வரை செலவாகும்" என்று ஆசைவார்த்தை கூறினாராம்.

கைது
கைது

தனக்கு பழக்கமான நபர் என்பதால் அவரை நம்பிய கலியமூர்த்தியிடமும் மற்றும் 40 நபர்களிடமும் ரூபாய் 2,25,000 வீதமும்; 18 நபர்களிடம் தலா ரூ.25,000 வீதமும் என மொத்தம் 94,50,000 ரூபாயை சங்கரன் பெற்றுக்கொண்டாராம். ஆனால், பணத்தை பெற்றுக்கொண்ட சங்கரனோ வேலையை வேலையை வாங்கித்தராமல் ஏமாற்றி வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த 2020-ம் ஆண்டு கலியமூர்த்தி உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். அதன்பிறகு தங்கமயிலை சந்தித்த சங்கரன், "அனைத்து நபர்களுக்கும் கண்டிப்பாக வேலை வந்துவிடும்" என உறுதியளித்து சென்றாராம். ஆனால் கலியமூர்த்தி மூலமாக சங்கரனிடம் பணத்தை கொடுத்தவர்கள், "மின்சார வாரியத்தில் வேலை போட்டுவிட்டார்கள். எங்களுக்கு வேலை கிடைக்கவில்லை. எனவே, நாங்கள் கொடுத்த பணத்தை திரும்பப் பெற்று தாருங்கள்" என்று தங்கமயிலிடம் பிரச்னை செய்ததாக கூறப்படுகிறது.

திருவெண்ணெய்நல்லூர்
திருவெண்ணெய்நல்லூர்

அதன் பின்பு, சங்கரன் ஆசிரியர் பல தவணைகளாக 24,50,000 ரூபாயை மட்டும் திருப்பிக் கொடுத்ததாகவும், மீதி ரூ.70,00,000 தராமல் ஏமாற்றி வருவதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுத்து பணத்தைப் பெற்றுத் தருமாறும் போலீஸிடம் தங்கமயில் புகார் அளித்துள்ளார். வழக்கை விசாரித்த விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார், நேற்று மதியம் சங்கரனை கைது செய்துள்ளனர். பின், உளுந்தூர்பேட்டை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, வேடம்பட்டு மாவட்ட சிறையில் அடைத்துள்ளனர்.