Published:Updated:

ஒரே பெண்ணைக் காதலித்த இரு நண்பர்கள்! - நண்பனின் தலையை துண்டித்த சிறுவன் சிக்கியது எப்படி?

கோவில்பட்டி, மேற்கு காவல் நிலையம்
கோவில்பட்டி, மேற்கு காவல் நிலையம்

தூத்துக்குடியில், தான் காதலித்த பெண்ணை தன் நண்பனும் காதலித்ததால், ஆத்திரத்தில் நெருங்கிய நண்பனையே தலையை துண்டித்துக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்தவர் மதன்குமார். பெயின்டிங் வேலை பார்க்கும் இவர், கடந்த 30-ம் தேதி மந்தித்தோப்பு காட்டுப்பகுதியில் தலைதுண்டிக்கப்பட்ட நிலையில் மர்மான முறையில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். அவரது உடலின் அருகில் மதுபாட்டில், கூல்டிரிங்ஸ், பிளாஸ்டிக் டம்ளர் ஆகியவை கிடந்தன. இதனால், மதன்குமாரை மது அருந்துவதற்காக அழைத்து வந்து கொலை செய்திருக்கலாம் என மேற்கு காவல் நிலையப் போலீஸார் விசாரணை நடத்தினர்.

கொலை செய்யப்பட்ட மதன்குமார்
கொலை செய்யப்பட்ட மதன்குமார்

இந்த வழக்கில் மதன்குமாரின் நண்பரான தீர்த்தாம்பட்டியைச் சேர்ந்த 17 வயது சிறுவனைக் கைது செய்துள்ளனர். போலீஸாரின் விசாரணையில் காதல் போட்டியில் மதன்குமாரைக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். மேலும், அந்தச் சிறுவனிடம் இருந்தது கொலை செய்யப் பயன்படுத்திய அரிவாள், பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

அந்த 17 வயது சிறுவன் போலீஸாரின் விசாரணையில், ”நானும் மதனும் பிரெண்ட்ஸ்தான். பெயின்டிங் வேலைக்கு ரெண்டு பேரும் ஒன்னாத்தான் போவோம் வருவோம். நான் ஒரு பெண்ணை லவ் பண்ணிட்டு வந்தேன். அது மதனுக்கும் தெரியும். ஆனா, அந்தப் பெண்ணை மதனும் காதலிச்சுட்டு வந்திருக்கான். இந்த விஷயம் எனக்குத் தெரியாது. போன வராம் மதனோட செல்போனை சும்மா வாங்கிப் பார்த்தேன். நான் லவ் பண்ணுற பொண்ணுகூட வாட்ஸ்அப்ல மதனும் சார்ட்டிங் பண்ணியிருக்கான்.

மேற்கு காவல் நிலையம்
மேற்கு காவல் நிலையம்

இதனால எனக்கு மதன் மேல கோவம் வந்துச்சு. மதனைக் கண்டிச்சேன். ஆனாலும் அவன் கேட்காம அந்தப் பொண்ணுகூட சார்ட்டிங்க்ல பேசிட்டு இருந்தான். ஆத்திரத்துல அவனைக் கொலை செஞ்சிடலாம்னு முடிவெடுத்தேன். மந்தித்தோப்பு காட்டுக்குள்ள ஏற்கெனவே ஒரு அரிவாளை முள்புதருள்ள மறைச்சு வச்சுட்டு வந்தேன். அன்னைக்கு சாயங்காலமே, சரக்கு அடிக்கலான்னு மதனை, மந்தித்தோப்பு காட்டுக்குள்ள பைக்குல கூட்டிட்டுப் போனேன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சரக்கு அடிக்க ரெண்டு பேரும் ஒன்னா உட்கார்ந்தோம். அப்போ நான், ஒன் பாத்ரூம் போயிட்டு வர்றேன்னு சொல்லிட்டு அங்க இருந்தது நகர்ந்து, அரிவாளை எடுக்கப் போனேன். அந்த நேரத்துல மதன் அவனோட செல்போனை பார்த்துக்கிட்டிருந்தான். அவனுக்கு பின்னால நின்னு மதனோட கழுத்துல அரிவாளால வெட்டினேன். அதுல அவன் கழுத்து துண்டாகிடுச்சு. கழுத்து துண்டாகும்னு நான் நினைக்கல. கொஞ்ச நேரத்துலயே மதன் இறந்துட்டான்.

செய்தியாளர்கள் சந்திப்பில் எஸ்.பி., ஜெயக்குமார்
செய்தியாளர்கள் சந்திப்பில் எஸ்.பி., ஜெயக்குமார்

அவன் இறந்த பிறகு, ஆத்திரத்துல நம்ம தப்பு பண்ணிட்டோம்னு நினைச்சு வருத்தப்பட்டேன். அரிவாளைத் தூக்கி பக்கத்துல இருந்த கண்மாயில வீசிட்டு, அங்க இருந்தது தப்பிச்சு வந்துட்டேன்” எனக் கூறியுள்ளார். இதுகுறித்து போலீஸாரிடம் பேசினோம், ``கொலை நடந்த இடத்தில் மதன்குமாரின் உடலுக்கு அருகில் கிடந்த மதுபாட்டில், கூல்டிரிங்ஸ், டம்ளர் என எதுவுமே பயன்படுத்தப்படாமல் இருந்தது. மது அருந்துவதற்காக அழைத்து வந்திருக்கலாம்.

நெல்லையில் கொலை; தஞ்சையில் பதுங்கல்! - 4 கொலையாளிகள் பிடிபட்டது எப்படி?

இல்லாவிட்டால், கொலை செய்துவிட்டு மது அருந்தியதுபோல மதுபாட்டிலை அருகில் போட்டு செட்டிங் செய்திருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டது. மதன்குமாரோட அப்பா பொய்யாமொழி ஸ்டேஷன்ல புகார் கொடுக்க வந்தப்போகூட, அவருடன் கைது செய்யப்பட்ட 17 வயதுச் சிறுவனும் ஒன்னும் தெரியாததுபோல வந்தான். ’என் நண்பனை யாரோ கொன்னுட்டாங்க’ எனச் சொல்லி அழுதான். அப்போதெல்லாம் அந்தச் சிறுவன் மேல எங்களுக்குச் சந்தேகம் வரலை. மதன்குமாரோட அம்மா, ‘ராத்திரு முழுக்க அவன் நம்பருக்குப் பல தடவை போன் பண்ணினோம்.

மேற்கு காவல் நிலையம்
மேற்கு காவல் நிலையம்

அவன் ஒரு போனைக்கூட எடுக்கலை’ எனச் சொல்லிக்கிட்டிருக்கும்போதே, ‘நானும் நிறைய தடவை போன் பண்ணினேன்’ என் போனையும் எடுக்கலைன்னு சொன்னான். மதன்குமாரின் செல்போன் நம்பரில் பேசியவர்களின் பட்டியலை எடுத்தபோது, கொலைச் சம்பவம் நடப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக, அந்தச் சிறுவன், மதன்குமாரிடம் பேசியதைக் கண்டுபிடித்தோம். பிறகுதான், அந்தச் சிறுவனிடம் விசாரணை செஞ்சோம். முதலில் முன்னுக்குப் பின்னாகப் பேசினான். பிறகு கொலை செய்ததை ஒத்துக் கொண்டான்” என்றனர்.

புதுக்கோட்டை: 400 ரூபாயைத் திருப்பிக்கேட்ட இளைஞர் கொலை; தம்பதிக்கு ஆயுள் தண்டனை!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு