Published:Updated:

காதலியின் மகளைக் கொலைசெய்து பிணத்துடன் உறவு... நகை, பணத்துடன் தப்பிச் சென்ற நபர் மும்பையில் கைது!

கைதான நபர் ராஜூ

காதலியின் மகளைக் கொலைசெய்து, பிணத்துடன் உறவு வைத்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

காதலியின் மகளைக் கொலைசெய்து பிணத்துடன் உறவு... நகை, பணத்துடன் தப்பிச் சென்ற நபர் மும்பையில் கைது!

காதலியின் மகளைக் கொலைசெய்து, பிணத்துடன் உறவு வைத்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:
கைதான நபர் ராஜூ

சென்னை பூந்தமல்லியைச் சேர்ந்தவர் ராஜூ மணி. இவர், சென்னையில் கணவரிடமிருந்து பிரிந்து வாழ்ந்த ஒரு பெண்ணுடன் திருமணம் செய்துகொள்ளாமல் வாழ்ந்துவந்தார். அந்தப் பெண்ணுக்கு இரண்டு குழந்தைகள் இருந்தன. ஆரம்பத்தில் குழந்தைகளைத் தன்னுடைய பெற்றோர் வீட்டில் விட்டுவிட்டு ராஜூவுடன் தனியாக வசித்துவந்த அந்தப் பெண் பின்னர் தன்னுடைய குழந்தைகளையும் தன்னுடன் அழைத்துக்கொண்டார்.

ராஜூ அந்தப் பெண்ணின் இரண்டு குழந்தைகளையும் கவனித்துக்கொள்வதாகத் தெரிவித்திருக்கிறார். இதனால் அந்தப் பெண்ணும் அவரின் வார்த்தைகளை நம்பி தன்னுடைய 18 வயது மகள் உட்பட இரண்டு பேரையும் தன்னுடன் அழைத்து வைத்துக்கொண்டார். ஆனால் ராஜூவுக்கு 18 வயது மகள்மீது ஒரு கண் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. கடந்த மாத தொடக்கத்தில் 18 வயது பெண், தன் தாயாருடன் உறங்கிக்கொண்டிருந்தபோது ராஜூ பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார். இதனால் உறக்கத்திலிருந்து எழுந்த அந்தப் பெண், ராஜூவைக் கண்டபடி திட்டியிருக்கிறார். அதிலிருந்து ராஜூவை அந்தப் பெண் வெறுக்க ஆரம்பித்தார்.

கைது
கைது

இந்த நிலையில் கடந்த 12-ம் தேதி ராஜூ 18 வயது பெண்ணைக் கொலை செய்துவிட்டு, அந்தப் பெண் அணிந்திருந்த கம்மல், வீட்டில் இருந்த ரூ.20 ஆயிரம் பணத்தை எடுத்துக்கொண்டு தப்பிச் சென்றுவிட்டார். தப்பிச் செல்லும்போது தன்னுடைய காதலி மற்றும் 18 வயது பெண்ணின் இரண்டு மொபைல் போன்களையும் எடுத்துச் சென்றுவிட்டார். அந்த போன்கள் தொடர்ந்து ஆஃப் செய்யப்பட்டிருந்தன.

இது குறித்து கொலைசெய்யப்பட்ட பெண்ணின் தாயார் கொடுத்திருக்கும் புகாரில் கூறியிருப்பதாவது, ``நான் என்னுடைய கணவரிடமிருந்து பிரிந்து வாழ்ந்துவந்தேன். அப்போது ராஜூவுடன் ஏற்பட்ட நட்பு காரணமாக அவருடன் சேர்ந்து வாழ்ந்துவந்தேன். என்னுடைய குழந்தைகளை கவனித்துக்கொள்வதாக ராஜூ தெரிவித்ததால்தான், நான் அவர்களை என்னுடன் அழைத்து வந்திருந்தேன். என்னுடைய 18 வயது மகளைச் சமீபகாலமாக ராஜூ தவறான கண்ணோட்டத்தில் பார்க்க ஆரம்பித்தார். இரவில்கூட தகாத முறையில் நடந்துகொண்டார். சம்பவத்தன்று நான் வேலைக்குப் புறப்பட்டேன். நான் வெளியில் செல்லும்போது, `போனை ஏன் எடுத்துச் செல்கிறாய்... வீட்டில் வைத்துவிட்டுப் போ’ என்று கூறி ராஜூ கேட்டுக்கொண்டார். நானும் போனை வீட்டில் வைத்துவிட்டுச் சென்றேன். வீட்டில் மகள்கள் இருந்தனர்.

கைதான நபர்  ராஜூ
கைதான நபர் ராஜூ

வேலை முடிந்து வீட்டுக்கு வந்தபோது வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. உடனே என்னிடமிருந்த சாவி மூலம் கதவைத் திறந்தபோது என்னுடைய 18 வயது மகள் மயங்கிக்கிடந்தாள். அவளது கழுத்தில் காயம் இருந்தது. பக்கத்து வீட்டுக்காரரிடம் விசாரித்தபோது ராஜூ அவசரமாகக் கதவைப் பூட்டிவிட்டுச் சென்றதாகத் தெரிவித்தார். உடனே என் மகளை மருத்துவமனைக்கு எடுத்துச்சென்றோம். ஆனால் அவள் ஏற்கெனவே இறந்துவிட்டாள் என மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர்'' என்று புகாரில் குறிப்பிட்டிருந்தார்.

பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை

இந்த நிலையில், இது குறித்து பூந்தமல்லி காவல் நிலைய சீனியர் இன்ஸ்பெக்டர் சிதம்பர முருகேசன் கூறுகையில், ``பிரேத பரிசோதனை மற்றும் தடயவியல் ஆய்வில், இளம்பெண்ணைக் கொலை செய்த பிறகு பிணத்துடன் ராஜூ உறவுவைத்திருந்தது தெரியவந்திருக்கிறது. எனவே, கொலை வழக்குடன் பாலியல் வன்கொடுமை வழக்கும் சேர்த்து பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. கொலைக்குப் பிறகு ராஜூ தொடர்ந்து தலைமறைவாக இருந்தான்.

ராஜூ தப்பிச்செல்லும்போது இரண்டு மொபைல் போன்களையும் திருடிச் சென்ரிருந்தான். அந்த போன்கள் தொடர்ந்து ஆஃப் செய்யப்பட்டிருந்தன. சமீபத்தில் அதில் ஒரு போன் ஆன் செய்யப்பட்டது. உடனே அவன் இருக்கும் இடம் தெரியவந்தது. மும்பை வீராரில் அவன் இருப்பதைக் கண்டுபிடித்தோம். தனிப்படை போலீஸார் சென்னையிலிருந்து சென்று மும்பை போலீஸாரின் துணையோடு ராஜூவைக் கைதுசெய்திருக்கிறோம். வீராரில் ராஜூவின் மனைவி வசிக்கிறார். அவரைத்தான் ராஜூ தேடிவந்திருந்தான்'' என்றார்.