Published:Updated:

போனை எடுத்து பேசாததால் ஆத்திரம்; காதலியை விமானத்தில் சென்று கொலைசெய்த இளைஞர்! - அதிர்ச்சி சம்பவம்

கொலை ( சித்திரிப்புப் படம் )

போனில் பேசாத காதலியை 51 முறை குத்திக் கொலைசெய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

போனை எடுத்து பேசாததால் ஆத்திரம்; காதலியை விமானத்தில் சென்று கொலைசெய்த இளைஞர்! - அதிர்ச்சி சம்பவம்

போனில் பேசாத காதலியை 51 முறை குத்திக் கொலைசெய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Published:Updated:
கொலை ( சித்திரிப்புப் படம் )

சட்டிஸ்கர் மாநிலம், கோர்பாவில் உள்ள பம்ப் ஹவுஸ் காலனியில் வசித்தவர் நீலம்குசும் (20). இவருக்கும் ஜஸ்பூர் மாவட்டத்தை சேர்ந்த ஷாபாஸ் என்ற வாலிபருக்கும் இடையே கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு நட்பு ஏற்பட்டது. ஷாபாஸ் பஸ்சில் கண்டக்ராக பணியாற்றியபோது நீலம் அந்த பஸ்சில் பயணம் செய்துள்ளார். இதில் அவர்களுக்குள் நட்பு ஏற்பட்டு காதலாக மாறிவிட்டது. பின்னர் ஷாபாஸ் வேலைக்காக அகமதாபாத் சென்றார்.

அப்படி இருந்தும் தொடர்ந்து இரண்டு பேரும் போனில் தொடர்பில் இருந்துள்ளனர். ஆனால் திடீரென நீலம் போனில் பேசுவதை நிறுத்திக்கொண்டார். இதனால் நீலத்தின் பெற்றோரை தொடர்பு கொண்டு ஷாபாஸ் மிரட்டியிருக்கிறார். எனவே ஷாபாஸின் போனை எடுத்து பேசுவதை நீலம் அடியோடு நிறுத்திக்கொண்டார். இதனால் ஆத்திரமடைந்த ஷாபாஸ் நீலம் இருந்த வீட்டிற்கு வந்துள்ளார். வீட்டில் நீலம் மட்டும் தனியாக இருந்துள்ளார்.

கொலை
கொலை
சித்திரிப்புப் படம்

அவரிடம் சென்று பேசியபோது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் வீட்டில் கிடந்த ஸ்குருடிரைவரை எடுத்து நீலத்தை குத்தினார். நீலம் சத்தம் போடக்கூடாது என்பதற்காக தலையணையால் நீலத்தின் வாயை மூடிக்கொண்டு ஸ்குருடிரைவரால் சரமாரியாக குத்தியிருக்கிறார். மொத்தம் 51 முறை குத்திக் கொலைசெய்துவிட்டு தப்பிச்சென்றுவிட்டார். வெளியில் சென்றிருந்த நீலத்தின் சகோதரர் வீட்டிற்கு வந்தபோது நீலம் ரத்த வெள்ளத்தில் கிடந்தார்.

உடனே அவர் இது குறித்து போலீஸாருக்கு தகவல் கொடுத்தார். இது குறித்து போலீஸ் கண்காணிப்பாளர் விஷ்வதீப் கூறுகையில், ``ஷாபாஸ் கொலை செய்யும் நோக்கத்தோடு அகமதாபாத்தில் இருந்து விமானத்தில் கோர்பாவிற்கு வந்துள்ளார். நீலத்தை ஸ்குருடிரைவரால் குத்திக் கொலைசெய்துவிட்டு தப்பிச்சென்றுவிட்டார். அவரை தேடிக்கண்டுபிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன" என்று தெரிவித்தார்.