Published:Updated:

டெல்லி: திருமணம் மீறிய உறவு... 4 ஆண்டுக்கு முன்பு கணவனைக் கொன்று ஆண் நண்பரின் வீட்டில் புதைத்த மனைவி

கைதான சவிதா

டெல்லி அருகே கள்ளக்காதலனோடு சேர்ந்து கணவனைக் கொலைசெய்து புதைத்த மனைவி நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு கைதுசெய்யப்பட்டார்.

டெல்லி: திருமணம் மீறிய உறவு... 4 ஆண்டுக்கு முன்பு கணவனைக் கொன்று ஆண் நண்பரின் வீட்டில் புதைத்த மனைவி

டெல்லி அருகே கள்ளக்காதலனோடு சேர்ந்து கணவனைக் கொலைசெய்து புதைத்த மனைவி நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு கைதுசெய்யப்பட்டார்.

Published:Updated:
கைதான சவிதா

டெல்லி, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் குற்றங்கள் அதிகமாக நடக்க ஆரம்பித்திருக்கின்றன என்கின்றன புள்ளிவிவரங்கள். டெல்லி அருகிலுள்ள காஜியாபாத் என்ற நகரத்தில் வசிப்பவர் சவிதா. இவரின் கணவர் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு காணாமல்போய்விட்டார். அவரின் கணவர் சந்திர வீர்-ஐ அவரின் சகோதரர் கடத்திச் சென்றுவிட்டதாக போலீஸில் புகார் செய்திருந்தார் சவிதா. இது குறித்து போலீஸார் விசாரித்துவந்த நிலையில் எந்தவிதத் துப்பும் துலங்காமல் இருந்தது. சமீபத்தில் இந்த வழக்கில் போலீஸாருக்குத் துப்பு கிடைத்தது. சந்திர வீரின் மனைவி சவிதாவுக்கு அவர் காணாமல்போனதில் தொடர்பு இருப்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. உடனே சவிதாவைப் பிடித்து மீண்டும் விசாரித்தபோது உண்மையை ஒப்புக்கொண்டார். சவிதாவுக்கும், அவரின் பக்கத்து வீட்டில் வசிக்கும் அருண் என்பவருக்கும் திருமணம் மீறிய உறவு ஏற்பட்டிருக்கிறது. இவர்களது காதலுக்கு சந்திரவீர் தடையாக இருந்தார். இதனால் சவிதாவும் அருணும் சேர்ந்து சந்திரவீரை துப்பாக்கியால் சுட்டுக் கொலைசெய்தனர்.

கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் மற்றும் எஞ்சிய எலும்புக்கூடு
கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் மற்றும் எஞ்சிய எலும்புக்கூடு

அதோடு அரிவாளாலும் வெட்டியுள்ளனர். சந்திரவீரைக் கொலை செய்வதற்கு முன்பே அருண் வீட்டில் ஆழமான குழி ஒன்றைத் தோண்டி தயார்நிலையில் வைத்திருந்தனர். அதன் பிறகு சந்திரவீரைக் கொலைசெய்து 7 அடி ஆழமான குழியில் போட்டு புதைத்துவிட்டனர். இது குறித்து போலீஸ் அதிகாரி தீக்‌ஷா சர்மா கூறுகையில், ``சவிதாவும் அருணும் சேர்ந்து சந்திரவீரைக் கொலைசெய்து அருண் வீட்டில் புதைத்துவிட்டனர். பின்னர் உடல் புதைக்கப்பட்ட இடத்தில் சிமென்ட் தளம் அமைத்து அந்த வீட்டில் அருண் வசித்துவந்தார். தற்போது தோண்டிப் பார்த்ததில் சந்திரவீரின் எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டது. கொலை செய்யப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி, அரிவாள் போன்றவையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன” என்றார்.

நேற்றுதான் டெல்லியில் தன்னுடன் லிவ்-இன் உறவில் சேர்ந்து வாழ்ந்த பெண்ணைக் கொலைசெய்து, பல துண்டுகளாக வெட்டி குளிர்சாதனப் பெட்டியில் அடைத்துவைத்ததாகச் செய்தி வந்தது. அதற்குள் மேலும் ஒரு கொடூரக் கொலைச் சம்பவம் தெரியவந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.