Published:Updated:

திருமணம் மீறிய உறவு; வெளிநாட்டிலிருந்து திரும்பிய கணவன் - இடையூறாக இருந்ததால் கொன்ற மனைவி, நண்பர்கள்

கொலை

கணவரைத் தன்னுடைய ஆண் நண்பர்களுடன் திட்டமிட்டுக் கொலைசெய்துவிட்டு நாடகமாடிய மனைவியை போலீஸார் தேடிவருகின்றனர்.

திருமணம் மீறிய உறவு; வெளிநாட்டிலிருந்து திரும்பிய கணவன் - இடையூறாக இருந்ததால் கொன்ற மனைவி, நண்பர்கள்

கணவரைத் தன்னுடைய ஆண் நண்பர்களுடன் திட்டமிட்டுக் கொலைசெய்துவிட்டு நாடகமாடிய மனைவியை போலீஸார் தேடிவருகின்றனர்.

Published:Updated:
கொலை

ராமநாதபுரம் மாவட்டம், தேவிப்பட்டினம் பகுதியைச் சேர்ந்தவர் பிச்சைக்கனி (43). இவரின் மனைவி சாந்தி (36). இவர்களுக்கு ஒரு மகன், இரண்டு மகள்கள் உள்ளனர். பிச்சைக்கனி வெளிநாட்டில் புரோட்டா மாஸ்டராக வேலை பார்த்துவந்திருக்கிறார். கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக சொந்த ஊருக்குத் திரும்பிவந்த நிலையில், உள்ளூரிலுள்ள ஓட்டலில் அவர் வேலை பார்த்துவந்ததாகத் தெரிகிறது.

இந்நிலையில் கடந்த மே மாதம், 28-ம் தேதி வேலைக்குச் செல்வதாக வீட்டிலிருந்து புறப்பட்ட பிச்சைக்கனி மீண்டும் வீடு திரும்பவில்லை. `என் கணவரைக் காணவில்லை’ என தேவிபட்டினம் காவல் நிலையத்தில் சாந்தி புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீஸார் விசாரணை மேற்கொண்டுவந்தனர்.

தேடப்பட்டு வரும் சாந்தி
தேடப்பட்டு வரும் சாந்தி

இந்தச் சூழலில், `சாந்தி மீது சந்தேகமாக இருக்கிறது. அவரை விசாரணை நடத்தினால், என்னுடைய மகன் கிடைத்துவிடுவான்’ என பிச்சைக்கனியின் தந்தை மாவட்ட ஆட்சியர் மற்றும் போலீஸிடம் புகார் மனு அளித்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அதன்பேரில் சாந்தியிடம் போலீஸார் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர். அவரின் செல்போனை ஆய்வுக்கு உட்படுத்தியபோது, அந்தப் பகுதியைச் சேர்ந்த கலைமோகன், அவரின் தம்பி பார்த்திபன் மற்றும் சிலருடன் இவர் அதிகமாகப் பேசியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து கலைமோகனைப் பிடித்து போலீஸார் விசாரணை நடத்தினர்.

எஸ்.பி அலுவலகம்
எஸ்.பி அலுவலகம்

அதில், ``பிச்சைக்கனி வெளிநாட்டில் வேலை பார்த்தபோது சாந்தி, நான், என்னுடைய தம்பி பார்த்திபன் மற்றும் சிலருடன் தொடர்பில் இருந்தார். இந்த நிலையில் வெளிநாட்டிலிருந்து பிச்சைக்கனி வந்த பிறகு சாந்தியுடனான எங்களது தொடர்புக்கு இடையூறாக இருந்துவந்தார். இதனால் அவரைக் கொலைசெய்யத் திட்டம் தீட்டும்படி சாந்தி எங்களிடம் கூறினார். அதன்படி அவரை அழைத்துச் சென்று மதுவில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்தோம். பின்னர் சாந்தியுடன் சேர்ந்து அரசலூர் காட்டுப்பகுதியில் பிச்சைக்கனியின் உடலை வீசிவிட்டோம். சந்தேகம் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக சாந்தி, `கணவரைக் காணவில்லை’ என போலீஸில் முன்கூட்டியே புகார் அளித்தார்” என விசாரணையில் கூறினார். இதையடுத்து கலைமோகனை போலீஸார் கைதுசெய்தனர். இதனையறிந்து சாந்தி தலைமறைவாகிவிட்டார்.

பின்னர் கொலைசெய்து தூக்கி வீசப்பட்ட பிச்சைக்கனி உடலை அடையாளம் காட்ட அரசலூர் காட்டுப்பகுதிக்கு கலைமோகனை போலீஸார் அழைத்துச் சென்றனர். அங்கு பிச்சைக்கனி உடல் எலும்புக்கூடாகக் கிடந்திருக்கிறது. அதை மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காகக் கொண்டு சென்றனர்.

இது குறித்து தேவபட்டினம் போலீஸார் வழக்கு பதிவுசெய்து தலைமறைவாகியிருக்கும் சாந்தி, பார்த்திபன் உள்ளிட்ட சிலரைத் தேடிவருகின்றனர்.