Published:Updated:

இளம்பெண்களை வைத்து அபார்ட்மென்ட்டில் பாலியல் தொழில்; ரவுண்ட்அப் செய்த போலீஸ்... சிக்கிய பெண்!

பாலியல் தொழில் ( சித்திரிப்புப் படம் )

சென்னையில் அடுக்குமாடிக் குடியிருப்பில் பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்துவந்த பெண் ஒருவரை போலீஸார் கைதுசெய்திருக்கிறார்கள்.

இளம்பெண்களை வைத்து அபார்ட்மென்ட்டில் பாலியல் தொழில்; ரவுண்ட்அப் செய்த போலீஸ்... சிக்கிய பெண்!

சென்னையில் அடுக்குமாடிக் குடியிருப்பில் பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்துவந்த பெண் ஒருவரை போலீஸார் கைதுசெய்திருக்கிறார்கள்.

Published:Updated:
பாலியல் தொழில் ( சித்திரிப்புப் படம் )

சென்னை, அமைந்தகரை அய்யாவு காலனியிலுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் ஒரு வீட்டுக்கு இளைஞர்கள் அடிக்கடி வந்து செல்வது தங்களுக்குச் சந்தேகமாக இருப்பதாக, அந்தப் பகுதி மக்கள் காவல்துறையில் புகார் அளித்திருக்கிறார்கள். இதையடுத்து என்ன நடக்கிறது என்பதை அறிய போலீஸார் மப்ஃடியில் சென்று அந்த வீட்டை நோட்டமிட்டிருக்கிறார்கள்.

பாலியல் தொழில்
பாலியல் தொழில்
சித்திரிப்புப் படம்

அப்போது, பல இளைஞர்கள் அந்த வீட்டுக்கு வந்து செல்வது உறுதியானது. மேற்கொண்டு விசாரணையில் அங்கு பாலியல் தொழில் நடப்பதையும் போலீஸார் உறுதிப்படுத்தினர். இதைத் தொடர்ந்து, பாலியல் தொழில் தடுப்புப்பிரிவு போலீஸார் அதிரடியாக அந்த வீட்டுக்குள் நுழைந்து ஆய்வு மேற்கொண்டனர். அதில், திருவேற்காடு கனகதுர்கா நகரைச் சேர்ந்த சங்கீதா (28) என்ற பெண், இரண்டு பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்தது தெரியவந்தது.

அதையடுத்து, போலீஸார் அந்தப் பெண்களை மீட்டு, அவர்களைவைத்து பாலியல் தொழில் நடத்திவந்த சங்கீதா என்பவரைக் கைதுசெய்தனர். மீட்கப்பட்ட பெண்களிடம் போலீஸார் விசாரணை செய்தபோது, அவர்கள் இருவரும் திருமணமானவர்கள் என்பது தெரியவந்தது. மேலும் அந்தப் பெண்கள் போலீஸாரிடம், "எங்களிடம் நல்ல இடத்தில் வேலை வாங்கித் தருவதாகச் சொல்லி வீட்டில் அடைத்துவைத்து, கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தினார்கள். மேலும், வாடிக்கையாளர்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என சங்கீதா எங்களுக்குப் பயிற்சி அளித்தார்" என்று சொல்லியிருக்கிறார்கள்.

கைதான சங்கீதா
கைதான சங்கீதா

கைதான சங்கீதாவுக்குப் பாலியல் தொழிலில் இன்னொரு நபரும் துணையாக இருந்திருக்கிறார். தலைமறைவாக இருக்கும் அவரை போலீஸார் தேடிவருகிறார்கள். மேலும், சங்கீதாவிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட செல்போனை போலீஸார் ஆய்வுசெய்து விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள். போலீஸார் மீட்கப்பட்ட பெண்கள் இருவரையும் அரசுக் காப்பகத்தில் ஒப்படைத்தனர். மேலும், கைதுசெய்யப்பட்ட சங்கீதாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.