Published:Updated:

கணவரின் சந்தேகம், சித்ரவதை; 6 குழந்தைகளை கிணற்றில் வீசிக் கொன்று தற்கொலைக்கு முயன்ற தாய்

மரணம் ( சித்திரிப்புப் படம் )

மகாராஷ்டிராவில் பெண் ஒருவர் குடும்பத் தகராறு காரணமாக தன்னுடைய 6 குழந்தைகளை கிணற்றில் வீசிக் கொன்றுவிட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கணவரின் சந்தேகம், சித்ரவதை; 6 குழந்தைகளை கிணற்றில் வீசிக் கொன்று தற்கொலைக்கு முயன்ற தாய்

மகாராஷ்டிராவில் பெண் ஒருவர் குடும்பத் தகராறு காரணமாக தன்னுடைய 6 குழந்தைகளை கிணற்றில் வீசிக் கொன்றுவிட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:
மரணம் ( சித்திரிப்புப் படம் )

மகாராஷ்டிரா மாநிலம், மஹாட் அருகில் உள்ள கரவாலி என்ற இடத்தில் ரூனா(30) என்பவர் வசித்துவந்தார். இவருக்கு ஆறு குழந்தைகள் இருந்தனர். ரூனாவின் கணவர் சிக்குரி கொத்தனாராக வேலைசெய்து வந்தார். உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ரூனாவும், அவர் குடும்பத்தினரும் பிழைப்புதேடி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மகாராஷ்டிரா வந்தனர். ரூனாவின் கணவர் தினமும் குடித்துவிட்டு அவரை அடித்து சித்ரவதை செய்துவந்ததாகக் கூறப்படுகிறது. அதோடு சந்தேகப்பட்டும் வந்திருக்கிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்தத் தம்பதி புதிய வீட்டுக்கு குடியேறியிருக்கின்றனர். அந்த வீட்டுக்கு அருகில் வாலிபர்கள் சிலர் வீடு எடுத்து தங்கி வந்திருக்கின்றனர்.

மரணம்
மரணம்
சித்திரிப்புப் படம்

அவர்களுடன் ரூனாவுக்கு திருமணம் மீறிய தொடர்பு இருப்பதாக சந்தேகப்பட்டு, அவர் கணவர் அடிக்கடி சண்டை போட்டு வந்திருக்கிறார். இந்த நிலையில், வீட்டை சுத்தம் செய்வது தொடர்பாக கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டிருக்கிறது. அப்போது, ரூனாவின் கணவர் அவரை திட்டி அடித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் கடும் அதிருப்தியடைந்த ரூனா தன் கணவரிடம் சொல்லாமல்... குழந்தைகள் ஆறு பேரையும் அருகில் உள்ள கிணற்றுக்கு அழைத்து சென்றார். ரூனா மிகவும் விரக்தியுடன் குழந்தைகளுடன் செல்வதை கிராமத்தினர் சிலர் பார்த்திருக்கின்றனர். உடனே அவர்கள் ஏதாவது விபரீதம் நடக்கக் கூடும் என்று ரூனாவின் பின்னால் சென்றனர். ஆனால், ரூனா தன் குழந்தைகள் அனைவரையும் கிணற்றுக்குள் தூக்கிப்போட்டு விட்டார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

போலீஸ்
போலீஸ்

அதோடு தானும் கிணற்றுக்குள் விழ முயன்றார். அதற்குள் கிராமத்தினர் விரைந்துவந்து அவரை கிணற்றுக்குள் விழவிடாமல் தடுத்துவிட்டனர். அதையடுத்து, கிராம மக்கள் கிணற்றுக்குள் இறங்கி குழந்தைகளை மீட்டு அனைவரையும் மருத்துவமனைக்கு தூக்கிச்சென்றனர். அதோடு போலீஸாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. குழந்தைகளைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர்கள் 6 பேரும் இறந்து விட்டதை உறுதி செய்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக போலீஸார் ரூனாமீது வழக்கு பதிவு செய்து, அவரைக் கைதுசெய்து விசாரித்து வருகின்றனர். அதோடு அவரின் கணவர்மீதும் நடவடிக்கை எடுக்க திட்டமிட்டிருக்கின்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism