Published:Updated:

சென்னை: பிரிந்துபோன காதல் கணவர்; ஆண் நண்பரின் சந்தேகம்! - கொலை செய்யப்பட்ட பெண்!நடந்தது என்ன?

crime scene
crime scene

பெண்ணின் நடத்தையில் சந்தேகம் அடைந்த ஆண் நண்பர் அவரைக் கொலை செய்திருக்கிறார்.

சென்னை அம்பத்தூர் மண்ணூர்பேட்டை 2-வது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் மணிமாலா (34). கணவரைப் பிரிந்து வாழ்ந்து வந்த மணிமாலாவுக்கு அம்பத்தூர் தொழிற்பேட்டையைச் சேர்ந்த சுரேஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்தனர். இந்தநிலையில் கடந்த 5-ம் தேதி மாலை 6 மணியளவில் மணிமாலாவின் அம்மா லட்சுமி, சகோதரர் மணிகண்டன் ஆகியோர் அம்பத்தூர் வந்தனர். அப்போது வீட்டின் கதவு திறந்து கிடந்தது. உடனே வீட்டுக்குள் சென்று பார்த்தபோது அறையில் மணிமாலா இறந்து கிடந்தார். அதிர்ச்சியடைந்த மணிகண்டன், லட்சுமி கதறி அழுதனர்.

கொலை
கொலை

பின்னர் மணிகண்டன், அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் குமார் வழக்குப் பதிவுசெய்து மணிமாலாவின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மணிமாலாவுடன் தங்கியிருந்த சுரேஷை போலீஸார் தேடினர். பிறகு அவரைப் பிடித்து விசாரித்தபோது மணிமாலா கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

சென்னை: அதிமுக பிரமுகரைக் கொலை செய்து நாடகமாடிய மனைவி - காட்டிக்கொடுத்த சாக்கு மூட்டை!

இதுகுறித்து போலீஸார் கூறுகையில்,`` மணிமாலா, சக்திவேல் என்பவரைக் காதலித்து திருமணம் செய்திருக்கிறார். இந்தத் தம்பதியினருக்கு ஒரு மகன் உள்ளார். மணிமாலாவை சக்திவேல் பிரிந்து சென்றுவிட்டார். அதனால் மணிமாலா, கூலிவேலை செய்து வந்தார். அப்போதுதான் சுரேஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இருவரும் வாழ்ந்துவந்த போதுதான் மணிமாலாவின் நடத்தையில் சுரேஷ் சந்தேகப்பட்டிருக்கிறார். அதனால் இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டிருக்கிறது.

சுரேஷ்
சுரேஷ்

இதுகுறித்து மணிமாலா, அம்மா லட்சுமியிடம் கூறியிருக்கிறார். அதனால் லட்சுமி, 4 நாள்களுக்கு முன் மணிமாலாவின் வீட்டுக்கு வந்து இருவரையும் சமாதானப்படுத்தியிருக்கிறார். அதன்பிறகும் மணிமாலாவுக்கும் சுரேஷிக்கும் இடையே தகராறு ஏற்பட்டியிருக்கிறது. சம்பவத்தன்று மணிமாலாவின் கழுத்தை புடவையால் நெரித்துக் கொலை செய்த சுரேஷ் தப்பி ஓடிவிட்டார். அவரைக் கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறோம்" என்றனர்.

மணிமாலாவின் சகோதரர் மணிகண்டன் கொடுத்த புகாரில் மணிமாலா, சுரேஷ் என்பவருடன் வாழ்ந்து வந்தார். மணிமாலா போனில் பேசினாலே சுரேஷ் சந்தேகப்பட்டிருக்கிறார். 5-ம் தேதி மாலை நான் சொந்த வேலை காரணமாக அம்பத்தூர் பாடிக்கு வந்திருந்தேன். அப்போது பைக்கில் சுரேஷும் மணிமாலாவும் சென்றனர். அப்போது இருவரும் சண்டை போட்டுக்கொண்டே சென்றார்கள்.இந்தத் தகவலை அம்மா லட்சுமியிடம் போன்செய்து கூறினேன். உடனே மணிமாலாவுக்கு அம்மா போன் செய்தபோது 'ஸ்விட்ச் ஆப்' என பதில் வந்தது. உடனே அம்மாவும் நானும் மணிமாலா வீட்டுக்குச் சென்றபோது அவள் இறந்துகிடந்தாள். அக்கம் பக்கத்தில் விசாரித்தபோது மணிமாலாவின் தொந்தரவு விட்டிருச்சு, இனிமேல் நிம்மதியா இருக்கலாம் என புலம்பியபடி சுரேஷ் சென்றதாக கூறினர். எனவே சுரேஷ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருக்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு