Published:Updated:

பாலியல் வன்கொடுமை முயற்சி; ரயிலிலிருந்து தள்ளிக் கொல்லப்பட்ட இளம்பெண் - தனியாக தவித்த குழந்தை!

ரயிலிலிருந்து தள்ளிக் கொல்லப்பட்ட இளம்பெண்

ஹரியானாவில் பாலியல் வன்கொடுமை முயற்சியில் பெண் ஒருவர் ரயிலிலிருந்து தள்ளிவிடப்பட்டு கொலைசெய்யப்பட்டார்.

பாலியல் வன்கொடுமை முயற்சி; ரயிலிலிருந்து தள்ளிக் கொல்லப்பட்ட இளம்பெண் - தனியாக தவித்த குழந்தை!

ஹரியானாவில் பாலியல் வன்கொடுமை முயற்சியில் பெண் ஒருவர் ரயிலிலிருந்து தள்ளிவிடப்பட்டு கொலைசெய்யப்பட்டார்.

Published:Updated:
ரயிலிலிருந்து தள்ளிக் கொல்லப்பட்ட இளம்பெண்

ஹரியானா மாநிலம், ரோஹ்டக் என்ற இடத்தைச் சேர்ந்த 30 வயது இளம்பெண் ஒருவர் தோஹனா என்ற இடத்துக்கு தன் 9 வயது மகனுடன் ரயிலில் சென்று கொண்டிருந்தார். ரயிலில் அந்தப் பெண் பயணம்செய்த பெட்டியில் சில பயணிகள் மட்டுமே இருந்திருக்கின்றனர். இதனால் அதே பெட்டியில் பயணம் செய்த ஒருவர் அந்தப் பெண்ணிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியிருக்கிறார்.

அதனை எதிர்த்து அவருடன் அந்தப் பெண் போராடினார். ஒருகட்டத்தில் அந்த நபர் இளம்பெண்ணை ஓடும் ரயிலிலிருந்து வெளியில் தள்ளிவிட்டார். அவரின் 9 வயது மகன் தாயை இழந்துவிட்டு அழுதபடி ரயிலில் இருந்திருக்கிறான். இதற்கிடையில், தன் மனைவியையும், குழந்தையையும் அழைத்துச் செல்வதற்காக கணவர் தோஹனா ரயில் நிலையத்தில் காத்திருந்தார். ஆனால், தேம்பி... தேம்பி அழுதுகொண்டிருந்த தன் மகனை மட்டுமே அவரால் பார்க்க முடிந்தது.

போலீஸ்
போலீஸ்

சிறுவன் தன் தந்தையை பார்த்தவுடன் அழுதுகொண்டே ஓடி வந்து ரயிலில் நடந்த சம்பவத்தை தெரிவித்தான். தாயாரை மர்ம நபர் பிடித்து வெளியில் தள்ளிவிட்டதாகத் தெரிவித்தான். இந்தச் சம்பவம் தொடர்பாகப் பேசிய இளம்பெண்ணின் கணவர், ``ரயில் 20 கிலோ மீட்டர் தூரத்தில் வந்தபோது, `இருவரையும் வந்து அழைத்துச் செல்லுங்கள்' என மனைவி எனக்கு போன் செய்தார். ஆனால் அவர் இப்போது என்னுடன் இல்லை" என்று அழுதுகொண்டே தெரிவித்தார்.

மரணம்
மரணம்

அதையடுத்து, ரயில்வே போலீஸார் இது தொடர்பாக வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டனர். அதில் இளம்பெண்ணை ரயிலிலிருந்து தள்ளிவிட்ட நபர் சந்தீப் என்று தெரியவந்தது. பெண்ணை கீழே தள்ளிவிட்டுவிட்டு, ரயிலிலிருந்து கீழே குதித்து தப்பிச் செல்ல முயன்றபோது சந்தீப் காயமடைந்திருக்கிறார். அவரை ரயில்வே போலீஸார் மருத்துவமனையில் சேர்த்திருக்கின்றனர். ரயில்வே போலீஸார் இரவு முழுவதும் ரயில் தண்டவாளம் முழுக்க அந்தப் பெண்ணை தேடினர். தீவிர தேடுதலுக்குப் பிறகு அந்தப் பெண்ணின் உடல் புதருக்குள் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டு, மீட்கப்பட்டது.

இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.