Published:Updated:

தாம்பரம்: நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயிலில் அழுகிய நிலையில் பெண் சடலம் கண்டெடுப்பு - போலீஸ் விசாரணை

ரயிலில் அழுகிய நிலையில் பெண் சடலம்

தாம்பரத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த சிறப்பு ரயிலில் 40 வயது பெண் ஒருவரின் சடலம் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

தாம்பரம்: நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயிலில் அழுகிய நிலையில் பெண் சடலம் கண்டெடுப்பு - போலீஸ் விசாரணை

தாம்பரத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த சிறப்பு ரயிலில் 40 வயது பெண் ஒருவரின் சடலம் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

Published:Updated:
ரயிலில் அழுகிய நிலையில் பெண் சடலம்

சென்னையிலிருந்து வாராந்தர சிறப்பு ரயில் நாகர்கோவிலுக்குச் செல்வது வழக்கம். கடந்த திங்கள்கிழமை நாகர்கோவிலிலிருந்து சென்னை எழும்பூர் ரயில் நிலையத்துக்கு அந்தச் சிறப்பு ரயில் வந்துள்ளது. அப்போது, ரயில் பராமரிப்பு பணிகளுக்காகத் தாம்பரம் பணிமனைக்கு வந்திருக்கிறது. நேற்று மாலை அந்த ரயிலைச் சுத்தம் செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு ரயில் பெட்டியிலிருந்து கடுமையான துர்நாற்றம் வந்திருக்கிறது.

ரயிலில் அழுகிய நிலையில் பெண் சடலம்
ரயிலில் அழுகிய நிலையில் பெண் சடலம்

அதையடுத்து அங்கு சென்று பார்த்தபோது அழுகியநிலையில் ஒரு பெண் சடலம் இருப்பது தெரியவந்தது. அதைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஊழியர்கள், இது குறித்து ரயில்வே காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவமறிந்து வந்த ரயில்வே போலீஸார், அந்த உடலைக் கைப்பற்றி குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவுசெய்த காவல்துறையினர், தீவிர விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism